என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்ஜே சூர்யா"

    • ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'ஜிகர்தண்டா 2'.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


    இப்படம் நாளை (நவம்பர் 10) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் 'மாமதுர' பாடலின் வீடியோ இன்று வெளியானது. இந்நிலையில், 'ஜிகர்தண்டா 2' படத்தின் வெற்றிக்காக படக்குழு திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


    • ஜிகர்தண்டா 2 படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் நாளை (நவம்பர் 10) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

    இந்த நிலையில், ஜிகர்தண்டா 2 படத்தை பார்த்துவிட்டதாக நடிகர் தனஷ் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்து இருக்கிறார். மேலும் படம் குறித்த தனது கருத்துக்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பான பதிவில், "ஜிகர்தண்டா 2 படத்தை பார்த்துவிட்டேன். கார்த்திக் சுப்பராஜின் சிறப்பான படைப்பு. அற்புதமாக இருப்பது எஸ்.ஜே. சூர்யாவுக்கு வாடிக்கையான விஷயமாகிவிட்டது. ராகவா லாரன்ஸ்-இன் நடிப்பு சிறப்பு. சந்தோஷ் நாராயணின் இசை அழகு. படத்தின் கடைசி 40 நிமிடங்கள் உங்களின் மனங்களை கொள்ளையடித்துவிடும். படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்," என்று தெரிவித்து இருக்கிறார்.

    • கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜிகர்தண்டா 2'.
    • இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது.

    இப்படத்தின் முதல் காட்சியை எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்தனர். மேலும், திரைப்பிரபலங்கள் பலர் இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


    இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "யானையும் சினிமாவும் கடவுள் நமக்கு கொடுத்த சிறந்த பரிசு. சினிமாவின் சக்தியையும் அதன் பார்வையாளர்கள் குறித்த எங்களின் மனப்பூர்வமான வெளிப்பாடு இது.

    இந்த படத்தை நாங்கள் உருவாக்கும் போது கொடுத்த அன்பை நீங்களும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். 4.5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையரங்கில் வருவதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். படத்தில் இருக்கும் சர்ப்ரைஸை தயவு செய்து உடைத்து விடாதீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • ’ஜிகர்தண்டா -2’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
    • இப்படம் இதுவரை ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.


    கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் இதுவரை ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


    இந்நிலையில், இப்படத்தை பாராட்டி சவுந்தர்யா ரஜினிகாந்த் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'கார்த்திக் சுப்பராஜ் உங்களை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். என் அண்ணா ராகவ லாரன்ஸ் நடிப்பு அருமையாகவும் பெருமையாகவும் உள்ளது. எஸ்.ஜே. சூர்யா நீங்கள் ஒரு உத்வேகம். 'ஜிகர்தண்டா 2' படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.


    • தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
    • ஜிகர்தண்டா இதுவரை ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் இதுவரை ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உள்பட படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

    இதுகுறித்து மேலும் அவர்," 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புத படைப்பு. இந்நாளின் திரையுலக நடிகவேன் எஸ்.ஜே.சூர்யா. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தியிருப்பதாக" நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்துள்ளார்.

    • கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஜிகர்தண்டா 2’.
    • இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.


    கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் இதுவரை ரூ.20 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.


    இந்நிலையில், 'ஜிகர்தண்டா 2' படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது.


    • ’ஜிகர்தண்டா 2’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.


    கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் பெரும் பாராட்டை பெற்று வருகிறது. இப்படத்தை பார்த்த திரைப்பிரபலங்கள் பலர் படக்குழுவிற்கு நேரிலும் சமூக வலைதளத்திலும் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். இதையடுத்து இப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.


    இந்நிலையில், 'ஜிகர்தண்டா 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படத்தை தனது இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், "கலை மூலம் துப்பாக்கிகளை எதிர்கொள்" என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


    • ‘ஜிகர்தண்டா 2’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படத்திற்கு பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.


    கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் பெரும் பாராட்டை பெற்று வருகிறது. இப்படத்தை பார்த்த திரைப்பிரபலங்கள் பலர் படக்குழுவிற்கு நேரிலும் சமூக வலைதளத்திலும் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். இதையடுத்து இப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

    இந்நிலையில், 'ஜிகர்தண்டா 2' திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் எஸ்.ஜே.சூர்யா, "வெற்றியை பகிர வேண்டிய நேரம் இது. மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று தியேட்டர் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என்று பார்த்தோம். ரசிப்புத் தன்மை தற்போது முன்பை விட மிகவும் அதிகமாகி உள்ளது. ஒரு நகைச்சுவை காட்சிக்கு கைத்தட்டல் வரலாம், ஆனால் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளுக்கு வரும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக உள்ளது.


    இப்படத்தை வெளியிட்ட ரெட் ஜெயின்ட் நிறுவனத்திற்கு மிக்க நன்றி. "நம்ம பேசக்கூடாது, நம்ம படம் பேசனும்" என்று கார்த்திக் சுப்பராஜ் சொல்வார். அதே மாதிரி இந்த படம் பேசுகிறது. லாரன்ஸ் அவர்கள் எனது மிகப்பெரிய நண்பர், நல்ல மனிதர், நல்ல பெயரை அவர் சம்பாதித்திருக்கிறார். தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் அவர்களின் குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்த திரைப்படத்தில் எல்லாமே நன்றாக அமைந்தது. அனைவருக்கும் பிடித்த மாதிரி அமைந்திருக்கிறது. நல்ல கதையை இயக்குனர் திரையில் காட்டியிருக்கிறார்" என்று பேசினார்.

    • இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஜிகர்தண்டா 2’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.


    கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ரூ.60 கோடிக்கு மேல் வசூலை குவித்ததாக தகவல் வெளியானது. இப்படத்தை பார்த்த திரைப்பிரபலங்கள் பலர் படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.


    ஜிகர்தண்டா 2 போஸ்டர்

    இந்நிலையில், 'ஜிகர்தண்டா 2' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 8-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • மூன்று படங்களில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்தார் அருண்.
    • எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

    விக்ரம் தனது 62-வது படத்துக்காக இயக்குனர் எஸ்.யு. அருண்குமாருடன் முதல் முறையாக இணைந்துள்ளார். இந்த படத்தை எச்.ஆர். பிக்சர் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தை இயக்கும் அருண்குமார் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'சித்தா' திரைப்படத்தை இயக்கியவர். இது குழந்தைகளின் பாதுகாப்பை உணர்வுபூர்வமாக சித்தரித்ததற்காக பாராட்டப்பட்ட படம்.

     


    விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் (2014) படத்தின் மூலம் அருண் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் சேதுபதி (2016), சிந்துபாத் (2019) என்று தொடர்ந்து மூன்று படங்கள் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்தார் அருண்.

     


    'சியான் 62' படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியதாக தகவல் வெளியான நிலையில், இந்த படத்தில் தேசிய விருது வென்ற மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. இதே படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.



    • பிரபல இயக்குனர் விபின் தாஸ், பகத் பாசிலின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல்.
    • எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்.

    இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். குஷி, வாலி உள்ளிட்ட படங்கள் இன்றளவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.

    படங்களை இயக்கி வந்த எஸ்.ஜே.சூர்யா, பிறகு, அவர் இயக்கும் படங்களில் அவரே நடித்தும் வந்தார். சமீப காலமாக, பிற இயக்குனர்களின் இயக்கத்திலும் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார்.

    அந்த வகையில், ஸ்பைடர், மெர்சல், மாநாடு, டான், மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்கள் எஸ்.ஜே.சூர்யாவிற்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. 

    தமிழ் திரைத்துறையைத் தொடர்ந்து, நடிகர் நானியின் 31வது படமான 'அடடே சுந்தரா' என்கிற படத்தின் மூலம் தெலுங்கு திரைத்துறையில் நுழைகிறார் எஸ்.ஜே.சூர்யா. தெலுங்கு தொடர்ந்து மலையாளத்திலும் எஸ்.ஜே.சூர்யா நடிகராக அறிமுகம் ஆகிறார்.

    பிரபல இயக்குனர் விபின் தாஸ், பகத் பாசிலின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக இயக்குனர் விபின் தாஸ் ஐதராபாத்தில் எஸ்.ஜே. சூர்யாவை சந்தித்து படம் குறித்து பேசியுள்ளார். மேலும், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல் எதுவும் தற்போது வெளியாகவில்லை.

    • இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு.
    • அனைத்து நன்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் பலகோடி நன்றிகள்.

    மே 1 தினமான இன்று உழைப்பாளர் தினத்துக்கும், நடிகர் அஜித் பிறந்தநாளுக்கும் வாழ்த்து தெரிவித்து இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எஸ்.ஜே சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மே 1 உழைப்பாளர் தின வாழ்த்துகள் மற்றும் இந்த உழைப்புக்கு வாழ்க்கை கொடுத்த சிறந்த உழைப்பாளி அஜித்திற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வரும் ஆண்டு சிறப்பாக அமையட்டும்.

    வாலி திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிறது. அதற்காக, அப்பா, அம்மா, அஜித், என் அன்பும் ஆருயிருமான எனது அனைத்து நன்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் பலகோடி நன்றிகள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×