என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உதவி பேராசிரியர்"
- ஜூன் மாதம் நடைபெற்ற நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது.
- நெட் தேர்வு தொடர்பான முழுமையான விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.
நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இரு முறை கணினி வழியில் நடத்தப்படும்.
அதன்படி இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல்கட்ட நெட் தேர்வு நாடு முழுவதும் 317 நகரங்களில் 1,205 மையங்களில் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இந்த தேர்வை எழுத மொத்தம் 11,21,225 பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 9,08,580 பேர் தேர்வை எழுதினார்கள்.
ஆனால் தேர்வு நடைபெற்ற அடுத்த நாளே திடீரென நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது.
அதில், 'தேர்வு செயல்முறையின் வெளிப்படை தன்மையை உறுதிசெய்வதற்காக நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், புதிய தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த தேர்வு தொடர்பான முழுமையான விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், உதவிப் பேராசிரியர், ஆராய்ச்சிப் படிப்புக்கான யுஜிசி நெட் மறுதேர்வுகளுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை தற்போது அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நெட் தேர்வுகள் ஆகஸ்ட் 21 மற்றும் செப்டம்பர் 4ம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் நடைபெற்ற நெட் தேர்வு பேனா பேப்பர் கொண்டு எழுத்து முறையில் நடைபெற்ற நிலையில் தற்போது நடைபெறவுள்ள நெட் தேர்வு கம்ப்யூட்டர் முறையில் ஆன்லைனில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கம்ப்யூட்டர் முறையில் நடைபெறும் NCET தேர்வு ஜூலை 10 ஆம் தேதியும் சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு ஜூலை 25 முதல் 27 ஆம் தேதி வரையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய ஆயுஷ் முதுகலை நுழைவுத் தேர்வு ஜூலை 6 ஆம் தேதி நடைபெறும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- 4 ஆயிரம் பேரை புதிதாக நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது.
- 2,331 உதவி பேராசிரியர்களை நியமனம் செய்யும் பழைய அறிவிப்பு ரத்து.
தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். முன்னதாக கடந்த 2019ம் ஆண்டில் 2,331 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப 2019ம் ஆண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் 4,000 கல்லூரி துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். அதன்படி தற்போது புதிதாக 4 ஆயிரம் பேரை நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து 2019ம் ஆண்டு வெளியிடப்பட்ட உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பான பழைய அறிவிப்பாணையை தமிழக அரசு ரத்துச் செய்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்