என் மலர்
நீங்கள் தேடியது "சிவராஜ்குமார்"
- இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
- கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இபபடம் உருவாகி வருகிறது.
தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் பெத்தி.
ராம் சரணுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இபபடம் உருவாகி வருகிறது. சுகுமார் ரைட்டிங்ஸ், வ்ரிதி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகியவை இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன.
இப்படத்தின் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன் வெளியான நிலையில் இன்று படத்தின் முதல் பார்வை க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. இந்தப் படம் அடுத்தாண்டு மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கிறார்.
- இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் தனுசுக்கு அண்ணனாக நடிக்கிறார்.
தனுஷ் நடிப்பில் இந்த வருடம் மாறன், தி கிரே மேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள 'வாத்தி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது.

சிவராஜ்குமார்
அடுத்து தனுஷ், கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கிறார். ராக்கி, சாணிக்காகிதம் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து, 2-வது கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் தனுசுக்கு அண்ணனாக நடிக்கிறார். தற்போது படப்பிடிப்பில் சிவராஜ்குமார் இணைந்துள்ளார். தனுசும், சிவராஜ்குமாரும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சிவராஜ்குமார் கூறும்போது, ''நான் தனுசின் மிகப்பெரிய ரசிகன். அவருடைய அனைத்து படங்களையும் பார்த்து இருக்கிறேன். இப்போது தனுசுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
ரஜினியின் ஜெயிலர் படத்திலும் சிவராஜ்குமார் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜெயிலர்’.
- இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

ஜெயிலர் போஸ்டர்
இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரஜினியும் சிவராஜ்குமாரும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதற்கு முன்பு ரஜினியும் மோகன் லாலும் இடம்பெற்றிருந்த போஸ்டரை படக்குழு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Superstar - Shivanna ?
— Sun Pictures (@sunpictures) August 6, 2023
Get ready to watch them together for the first time? 4 more days to go for #Jailer@rajinikanth @NimmaShivanna @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi… pic.twitter.com/y2oyXMdQMt
- 'சித்தா' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சித்தார்த் பெங்களூரு சென்றார்.
- அங்கு வந்த கன்னட அமைப்பினர் இந்த புரொமோஷன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்த 'சித்தா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியானது. 'சித்தா' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சித்தார்த் பெங்களூரு சென்றார். அங்கு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நடிகர் சித்தார்த் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த கன்னட அமைப்பினர் இந்த புரொமோஷன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காவிரி விவகாரத்தில் கன்னட அமைப்பினர், தமிழ்நாட்டிற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழ் நடிகரான சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து நடிகர் சித்தார்த்திற்கு ஆதரவு தெரிவித்து பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைதளத்தில், "நீண்ட காலமாக இருக்கும் பிரச்சனையை தீர்க்காமல் வைத்திருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும், மத்திய அரசை தலையிட வைக்க அழுத்தம் கொடுக்காத எம்.பி.க்களையும் கேட்பதற்கு பதிலாக, சாதாரண மக்களையும் , சித்தார்த் போன்ற கலைஞர்களையும் தொந்தரவு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு கன்னடராக அனைத்து கன்னட மக்களின் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

அடுத்து நடிகர் சிவராஜ்குமார் "மற்றவர்களின் உணர்வுகளை நாம் எந்த வகையிலும் புண்படுத்தக் கூடாது. கன்னட திரையுலகம் சார்பாக நாங்கள் மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் சித்தார்த். இதைச் செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை. ஆனால், அதைக் கண்டு நாங்கள் மிகுந்த மன வருத்தம் அடைகிறோம். இனி இப்படி நடக்காது" என்று கூறினார்.
இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் சிவராஜ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து பார்த்திபன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "'ஜெயிலர்'படத்தில் கிளப்பிய Mass-ஐ விட,நிஜத்தில் இன்று கன்னடத்தில் கண்டனம் தெரிவித்து தெறிக்க விட்டு இருக்கும் நண்பர் திரு சிவராஜ்குமார் அவர்களுக்கும், சினிமாவில் மட்டுமே வில்லனாகவும் நிஜத்தில் முதல் ஹீரோவாகவும் குரல் எழுப்பிய நண்பர் திரு பிரகாஷ்ராஜ் அவர்களுக்கும் பாராட்டு !!!!
எதற்கு?மனதில் உள்ளதை தில் உள்ள மனிதர்களாக நேர்மையாக சொல்லி இருக்கிறார்கள். நீண்ட(கால)காவேரி பிரச்சனையை அதன் நீள அகலங்களில் அரசுகள் அலசி ஆராய்ந்து இன்னும் நீண்ட காலம் தீரா பிரச்சனையாக்கி அரசியல் செய்வதை விட்டு விட்டு,ஒரு கலைஞனை காயப் படுத்தி ஆவதென்ன?
அவர்கள் …. எதிரிகளாக நினைக்கும் நம்மிடமிருந்து எதிர்ப்பு எழுவதை விட,அவர்கள் தெய்வமென மதித்த மறைந்த திரு ராஜ்குமார் அவர்களின் வம்சாவழியும், அவர்கள் பெரிதும் நேசிக்கும் திரு சி.ரா.கு எதிர்ப்பையும் மன்னிப்பையும் வெளிபடுத்தும் போது, அநாவசியமாக அநாகரிகமாக நடந்துக் கொண்ட மிக சிலர் (அவர்கள் மட்டுமல்ல கர்நாடகா என்பது) திருந்த வாய்ப்புள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
'ஜெயிலர்'படத்தில் கிளப்பிய Mass-ஐ விட,நிஜத்தில் இன்று கன்னடத்தில் கண்டனம் தெரிவித்து தெறிக்க விட்டு இருக்கும் நண்பர் திரு சிவராஜ்குமார் அவர்களுக்கும், சினிமாவில் மட்டுமே வில்லனாகவும் நிஜத்தில் முதல் ஹீரோவாகவும் குரல் எழுப்பிய நண்பர் திரு பிரகாஷ்ராஜ் அவர்களுக்கும் பாராட்டு !!!!…
— Radhakrishnan Parthiban (@rparthiepan) September 29, 2023
- பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- சிவராஜ்குமார் விஜய்-இன் அரசியல் வருகை குறித்து கருத்து.
இந்திய திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய். தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்களிலும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் ஏராளம். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார்.
சினிமா மட்டுமின்றி அரசியலிலும் கால்பதிக்கும் நோக்கில் நடிகர் விஜய் பல்வேறு நலத்திட்ட பணிகளை பொதுவெளியில் செய்ய துவங்கியுள்ளார். நடிகர் விஜய் அரசியலில் களமிறங்குவது பற்றி பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "எனது 100-வது படம் தொடர்பான விழாவில் நடிகர் விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர். விஜய்யின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். விஜய்யிடம் வித்தியாசமான ஸ்டைல் இருக்கு. அவர் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார். அவர் ஒரே இரவில் ஸ்டார் ஆனவர் இல்லை. அவர் நிறைய கஷ்டப்பட்டிருக்கார்."
"அவர் தனது தோற்றம், நடிக்கும் விதம், கதைகளை தேர்வு செய்யும் விதம் என அனைத்திலும் முழுமையாக தன்னை செதுக்கிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு முன்னேறுபவர்களை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அவர் மாணவர்களுக்கு உதவி செய்து, அவர்களுடன் உரையாடும் வீடியோவை பார்த்தேன். அவரை பற்றி நல்ல விதமாக உணர்கிறேன்."
"அரசியலுக்கு வருவதற்கான திறன் அவரிடம் இருக்கு. அவர் தன்னை மிகவும் நம்புகிறார். அந்த நம்பிக்கை மக்களுக்கும் பிடித்துள்ளது. நடிகர் அரசியலுக்கு வந்தால், ஏன் வரவேண்டும் என்பார்கள். மக்கள் அவரை ஏற்றுக் கொள்கிறார்கள். அவரிடம் அதற்கான ஆளுமை இருக்கிறது," என தெரிவித்தார்.
- முதற்கட்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ளது.
- திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் போட்டியிடுகிறார்.
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி அதற்கான பணிகளை வேகப்படுத்தி உள்ளன. அந்த வகையில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
இந்த பட்டியலில் 39 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்ற விவரம் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலின் படி காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் போட்டியிடுகிறார்.

இந்த வரிசையில் புகழ்பெற்ற நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமார் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இவர் பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவின் ஷிமோகா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகல் ராக்நந்த்கான் தொகுதியிலும், கே.சி. வேனுகோபால் ஆலப்புழா தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
- போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்
- ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்

ராம்சரண் மற்றும் ஜான்வி கப்பூர் இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்னும் தலைப்பிடாத புதிய படம் தற்போதைக்கு ராம்சரண் 16 என அழைக்கப்படுகிறது. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. புதிய பட துவக்க விழா வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இவ்விழாவில் நடிகர் சிரஞ்சீவி, ராம் சரணின் மனைவி, உபாசனா காமினேனி, இயக்குநர் ஷங்கர் மற்றும் ஏ.ஆர். ரகுமான் பங்கேற்றனர. புச்சி பாபு சனா இந்த படத்தை இயக்க இருக்கிறார்.
முன்னணி தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் இந்த படத்தின் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். ஜான்வி கபூர் 2018 ஆம் ஆண்டு வெளியான தடக் என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.



ஜான்வி கபூரின் அடுத்த படமாக இப்படம் அமைந்து இருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். இதனால் ராம்சரணின் 16 வது படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்தார்.
- அதற்கு பின் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் சிவராஜ்குமார். கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார். அதற்கு பின் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
இந்நிலையில் சிவராஜ்குமார் தற்பொழுது தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்திற்கு ஜாவா என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை ரவி அரசு இயக்க சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளனர். இதற்கு முன், நடிகர் அதர்வா முரளி கதாநாயகனாக நடித்த 'ஈட்டி' மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான 'ஐங்கரன்'ஆகிய திரைப்படங்களை இயக்கிய ரவி அரசு மூன்றாவதாக தமிழில் இந்தப் படத்தை இயக்குகிறார்.
சிவராஜ்குமார் காவல்துறை அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் சமுத்திரகனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. படப்பிடிப்பு பணிகள் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது என தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தளபதி 69 என்ற தலைப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது.
- தளபதி 69 படத்தை இயக்குநர் எச். வினோத் இயக்குகிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியான 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரேவற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் தனது அரசியல் கட்சியின் முதல் மாநில மாநாடு, கட்சி சார்ந்த கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.
இதனிடையே நடிகர் விஜய், இயக்குநர் எச். வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பது குறித்த தகவல் வெளியானது. மேலும், இந்தப் படத்தின் பூஜை தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. தற்காலிகமாக 'தளபதி 69' என்ற தலைப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில், 'தளபதி 69' படத்தில் அழகிய கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழு தன்னை தொடர்பு கொண்டதாக கன்னட சூப்பர்ஸ்டார் நடிகரான சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய சிவராஜ்குமார் இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார்.
இதுபற்றி பேசிய நடிகர் சிவராஜ்குமார், "விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் நல்ல கதாபாத்தித்தில் நடிக்க கேட்டிருக்கிறார்கள். எனது தேதிகள் சார்ந்த விஷயங்களால் இது எப்படி முடியும் என்பது தெரியவில்லை. ஆனால், நடிகர் விஜய் நல்ல மனிதர், சிறப்பான நடிகர். சினிமா மற்றும் அரசியல் சார்ந்த அவரின் முடிவு அற்புதமானது. இவை இரண்டையும் நான் மதிக்கிறேன்," என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில், வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது , “பைரதி ரணகல்” படம்,
- வெற்றி பெற்ற மஃப்டி படத்தின் ப்ரீக்குவலாக உருவான படம் தான் “பைரதி ரணகல்”.
கீதா பிக்சர்ஸ் சார்பில், தயாரிப்பாளர் கீதா சிவராஜ்குமார் தயாரிப்பில், இயக்குநர் நாரதன் இயக்கத்தில், கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில், வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற , ஆக்சன் அதிரடி திரைப்படமான "பைரதி ரணகல்" படம், இப்போது தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் SUN NXT தளத்தில் ஸ்ட்ரீமாகிறது.
பிரம்மாண்ட வெற்றி பெற்ற மஃப்டி படத்தின் ப்ரீக்குவலாக உருவான படம் தான் "பைரதி ரணகல்". இப்படம் தான் தமிழில் சிலம்பரசன் டி ஆர் நடிப்பில் "பத்து தல" படமாக வெளியானது என்பது குறிப்பிடதக்கது.
மஃப்டி படத்தில், பைரதி ரணகல் எனும் டான் கதாப்பத்திரத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவாராஜ்குமார் நடித்திருந்தார். இந்தக் கதாப்பத்திரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து, அந்த கதாப்பாத்திரத்தின் முன் கதையை மையமாக வைத்து உருவான படம் தான் "பைரதி ரணகல்".
ஒரு சாதாரண வழக்கறிஞராக இருந்த பைரதி ரணகல், எப்படி நாடே திரும்பிப் பார்க்கும் டானாக மாறுகிறான் என்பது தான் இப்படத்தின் கதை. அதிரடி ஆக்சன் படமாக, கமர்ஷியல் அம்சங்களுடன், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாகியிருந்த இப்படம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
நடிகர் சிவராஜ்குமார், முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், ராகுல் போஸ், ருக்மணி வசந்த், அவினாஷ், சாயா சிங், தேவராஜ், ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். நவீன் குமார் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக ஆகாஷ் ஹிரேமத் பணியாற்றியுள்ளார்.
ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பாரட்டுக்களைக் குவித்த இப்படம், கன்னட மொழியில், திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, ஓடிடி வெளியீட்டிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது தமிழ் மற்றும் மலையாளம் ரசிகர்கள் ரசிக்கும் வகையில், இப்படம் SUN NXT ஓடிடி தளத்தில் தற்போது தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் ஸ்ட்ரீமாகி வருகிறது.
"பைரதி ரணகல்" திரைப்படத்தை SUN NXT தளத்தின் மூலம் அனைவரும் பார்த்து ரசியுங்கள்!!
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.