என் மலர்
நீங்கள் தேடியது "ஆப்பம்"
- சிறுதானியங்களில் நிறைய தாதுச்சத்துகளும், வைட்டமின்களும் உள்ளன.
- அரிசியில் இருப்பதைவிட இதில் அதிக நார்ச்சத்தும் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்:
குதிரைவாலி அரிசி - 100 கிராம்,
இட்லி அரிசி - 100 கிராம்,
உளுந்து - 25 கிராம்,
வெந்தயம் - அரை தேக்கரண்டி,
கருப்பட்டி - 200 கிராம்,
இளநீர் - அரை கப்.
செய்முறை:
குதிரைவாலி அரிசியுடன் இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் நைசாக அரைக்கவும். இளநீரை முதல் நாளே வாங்கி வைத்துப் புளிக்க வைக்க வேண்டும்.
புளித்த இளநீரை அரைத்து வைத்துள்ள மாவுடன் கரைத்து 6 மணி நேரம் புளிக்க விடவும்.
கருப்பட்டியில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து அடுப்பில் வைத்து, கொதித்ததும் அப்படியே சூடாக வடிகட்டி மாவுடன் சேர்க்கவும்.
ஆப்பச் சட்டியை அடுப்பில் வைத்து லேசாக எண்ணெய் தடவி தேவையான மாவினை ஊற்றி ஒரு சுற்று சுற்றி மூடி வைத்து வேக விடவும்.
ஓரங்களில் முறுகலாகவும், நடுவில் மெத்தென்று பஞ்சு போன்றும் சுட்டு எடுக்கவும்.
சத்தும், சுவையுமிக்க குதிரைவாலி கருப்பட்டி ஆப்பம் தயார்.
- கேழ்வரகில் பல்வேறு சத்தான ரெசிபிகளை செய்யலாம்.
- கேழ்வரகில் ஆப்பம் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு - 1 கப்
சாதம் - 1/4 கப்
சோடா மாவு - 1/4 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 3/4 கப்
நாட்டுச்சர்க்கரை அல்லது கருப்பட்டி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
கேழ்வரகு மாவை சலித்து அதை ஒரு கடாயில் கொட்டி மிதமான தீயில் சூடேற பிரட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஆற வையுங்கள்.
பின் மிக்ஸியில் சாதம், தேங்காய், நாட்டுச்சர்க்கரை சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
தற்போது அதில் பிரட்டி வைத்துள்ள மாவையும் சேர்த்து கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
தற்போது அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி சோடா மாவு மற்றும் உப்பு சேர்த்து கரைத்து மூடி ஓரமாக வையுங்கள்.
இது 8 மணி நேரம் ஊற வேண்டும்.
மறுநாள் நன்கு புளித்து மாவு தயார் நிலையில் இருக்கும். நன்கு கிளறி ஆப்ப சட்டியில் ஊற்றி சுட்டு எடுங்கள்.
அவ்வளவுதான் கேழ்வரகு ஆப்பம் தயார்.
இதற்கும் தேங்காய்பால் சூப்பராக இருக்கும்.
- சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
- தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு - 2 கப்
சாதம் - அரை கப்
சோடா மாவு - அரை டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 1/2 கப்
நாட்டுச்சர்க்கரை - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
கேழ்வரகு மாவை சலித்து அதை ஒரு கடாயில் கொட்டி மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுத்து ஆற வையுங்கள்.
மிக்ஸியில் சாதம், தேங்காய், நாட்டுச்சர்க்கரை சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் அதனுடன் வறுத்த கேழ்வரகு மாவை போட்டு கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
தற்போது அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதில் சோடா மாவு மற்றும் உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.
மறு நாள் நன்கு புளித்து மாவு தயார் நிலையில் இருக்கும்.
ஆட்ட கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி மாவை ஊற்றி சுட்டு எடுங்கள்.
அவ்வளவுதான் கேழ்வரகு ஆப்பம் தயார்.
இதற்கும் தேங்காய்பால், முட்டை குருமா சூப்பராக இருக்கும்.