என் மலர்
நீங்கள் தேடியது "ஜூனியர் என்டிஆர்"
- ‘ஜெயிலர்-2' படத்துக்கு பிறகு நெல்சன் யாரை இயக்க போகிறார்? என்று எதிர்பார்ப்பு எழுந்தது.
- புதிய படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
'கோலமாவு கோகிலா', 'டாக்டர்', 'பீஸ்ட்' போன்ற தொடர் வெற்றி படங்களை இயக்கி கவனிக்க வைத்தவர், நெல்சன். ரஜினிகாந்தை வைத்து இயக்கிய 'ஜெயிலர்' படம் மூலம் முன்னணி இயக்குனராகவும் உயர்ந்து நிற்கிறார். இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ள நெல்சன், தற்போது ரஜினிகாந்தை வைத்து 'ஜெயிலர்-2' படத்தை இயக்கி வருகிறார்.
'ஜெயிலர்-2' படத்துக்கு பிறகு நெல்சன் யாரை இயக்க போகிறார்? என்று எதிர்பார்ப்பு எழுந்தது. அந்தவகையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆருடன் நெல்சன் கைகோர்ப்பார் என தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை ஜூனியர் என்.டி.ஆரும் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜூனியர் என்.டி.ஆர்., 'நெல்சன் இயக்கத்தில் படம் நடிக்க ஆசைப்படுகிறார். நாக வம்சி (முன்னணி தயாரிப்பாளர்) மனது வைத்து வேகமான நடவடிக்கையில் இறங்க வேண்டும்', என்றார்.
இதன் மூலம் ஜூனியர் என்.டி.ஆர். - நெல்சன் கூட்டணியில் புதிய படம் உருவாக போவதாக எதிர்பார்க்கப்படுகிறது. புதிய படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
- நடிகர், நடிகைகள் பயன்படுத்தும் பொருட்களின் விலையை கூகுளில் தேடி கண்டுபிடித்து பகிர்வதை சில ரசிகர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.
- பலரும் கைக்கடிகாரம் இவ்வளவு விலையா என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
கோடி கோடியாய் சம்பாதிக்கும் நடிகர், நடிகைகள் விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்துவது வழக்கம். உடை, காலணி, நகைகள், கைப்பை, கைக்கடிகாரம், கார்கள் போன்றவற்றை அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள்.
இன்னொரு புறம் நடிகர் நடிகைகள் பயன்படுத்தும் பொருட்களின் விலையை கூகுளில் தேடி கண்டுபிடித்து பகிர்வதை சில ரசிகர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.
பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஏற்கனவே விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் வைத்துள்ள நிலையில் சமீபத்தில் தான் நடிக்கும் படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்க மும்பை விமான நிலையம் வந்து இறங்கியபோது அவர் கையில் அணிந்திருந்த புதிய கைக்கடிகாரம் பலரின் கவனத்தையும் கவர்ந்தது.
அதன் விலையை ரசிகர்கள் கூகுளில் தேடி ரூ.7 கோடியே 47 லட்சம் என்று கண்டிபிடித்து வெளியிட்டுள்ளனர். அதை பார்த்த பலரும் கைக்கடிகாரம் இவ்வளவு விலையா என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் கோல்டன் குளோப் விருது நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
- இவருக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.

ராஜமவுலி
மேலும், 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் கோல்டன் குளோப் விருது நாமினேஷன் பட்டியலில் இரண்டுப் பிரிவுகளில் இடம்பிடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து பலரும் ராஜமவுலிக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் ராஜமவுலி பாலிவுட்டின் தொடர் தோல்விக்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.

ராஜமவுலி
அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, "பாலிவுட் சினிமாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வர ஆரம்பித்து நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் அதிக சம்பளம் தருவதினால் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட்டது. இந்த ஆண்டு பாலிவுட்டில் ஒரு சில படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிஸ் வெற்றிபெற்றன.
பார்வையாளர்கள் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு இயக்குவதே வெற்றிக்கான ஒரே மந்திரம். தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை இந்த ஆண்டு நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. இதேபோன்ற சூழல் பாலிவுட் திரையுலகுக்கு வேண்டும் என்றால் அவர்கள் சற்று அதிகமாக நீந்த வேண்டும். இல்லையெனில் மூழ்கிவிடுவார்கள்" என்று பேசியுள்ளார்.
- 95வது ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியல் வரும் ஜனவரி 24-ம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.
- சிறந்த நடிகருக்கான பட்டியலில் ஜூனியர் என்டிஆர் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக சர்வதேச பத்திரிக்கை ஒன்று புதிய கணிப்பை வெளியிட்டுள்ளது.
டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் கடந்த மார்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இதில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி 3 மொழிகளில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. உலகளவில் பாராட்டை பெற்ற ஆர்ஆர்ஆர் திரைப்படம் பல்வேறு விருதுகளை குவித்து வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுக்கு ஆர்ஆர்ஆர் படமும் போட்டியிட்டு சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்று சாதனை படைத்தது. அடுத்ததாக கிரிடிக் சாய்ஸ் விருதையும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வென்றது. மேலும் 28வது விமர்சகர்களின் சாய்ஸ் விருதுகளையும் வென்றது.
இந்நிலையில் 95வது ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியல் வரும் ஜனவரி 24-ம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இந்தப் பட்டியலில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் சிறந்த ஒரிஜினல் பாடல் உள்ளிட்ட பல பிரிவுகளில் இடம்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான பட்டியலில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் கதாநாயகன் ஜூனியர் என்டிஆர் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக தற்போது சர்வதேச பத்திரிக்கை ஒன்று புதிய கணிப்பை வெளியிட்டுள்ளது.
யுஎஸ்ஏ டுடே இணையதளம் ஜூனியர் என்டிஆரை சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்கான வலுவான போட்டியாளர்களில் ஒருவராக பெயரிட்டுள்ளது. ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ள 10 நடிகர்களின் பட்டியலை அந்த நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஜூனியர் என்டிஆர் பெயர் முதல் வரிசையில் உள்ளது. டாம் குரூஸ், மியா கோத், பால் மெஸ்கல், பால் டேனோ, ஜோ கிராவிட்ஸ் ஆகிய நடிகர்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்டிஆர், எஸ்எஸ் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் கொமரம்பீமாக நடித்தவர். 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரையைப் பெறுவதற்கான சிறந்த போட்டியாளர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார்.
- கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் என்டிஆர்30.
- இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.
ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் அடுத்ததாக கொரடலா சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக என்டிஆர்30 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். இப்படத்தை என்டிஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் சார்பில் சுதாகர் மிக்கிலினேனி மற்றும் ஹரிகிருஷ்ணா கே தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

என்டிஆர்30
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக ஆர்.ஆர்.ஆர். படத்தின் இயக்குனர் ராஜமவுலி மற்றும் கேஜிஎஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் கலந்துக் கொண்டனர். மேலும் ராஜமவுலி கிளாப் போர்ட் அடித்து படத்தை தொடங்கி வைத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Pics from the #NTR30 puja and opening ceremony❤️
— NTR Arts (@NTRArtsOfficial) March 23, 2023
An energetic event to kickstart the mammoth project??#NTR30Begins@tarak9999 #JanhviKapoor #KoratalaSiva @NANDAMURIKALYAN @anirudhofficial @sreekar_prasad @RathnaveluDop @sabucyril @YuvasudhaArts pic.twitter.com/EiYvRhBQp2
- கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் என்டிஆர்30 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
- இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சைஃப் அலிகான் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் தற்போது கொரடலா சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக என்டிஆர்30 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். இப்படத்தை என்டிஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் சார்பில் சுதாகர் மிக்கிலினேனி மற்றும் ஹரிகிருஷ்ணா கே தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது.

என்டிஆர்30
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சைஃப் அலிகான் இணைந்துள்ளதாக புகைப்படம் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
- கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் என்டிஆர்30 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
- இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை ஜூனியர் என்டிஆர் படக்குழு வெளியிடவுள்ளது.
ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் தற்போது கொரடலா சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக என்டிஆர்30 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.

என்டிஆர்30 படக்குழு
இப்படத்தை என்டிஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் சார்பில் சுதாகர் மிக்கிலினேனி மற்றும் ஹரிகிருஷ்ணா கே தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சைஃப் அலிகான் சில தினங்களுக்கு முன்பு இணைந்துள்ளதாக புகைப்படம் வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது.

என்டிஆர்30
இந்நிலையில் ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளான மே 19ம் தேதியன்று இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
- கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் புதிய படத்தில் நடிக்கிறார்.
- இப்படத்தில் நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.
ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் தற்போது கொரடலா சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக என்டிஆர்30 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.

என்டிஆர்30
இப்படத்தை என்டிஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் சார்பில் சுதாகர் மிக்கிலினேனி மற்றும் ஹரிகிருஷ்ணா கே தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சைஃப் அலிகான் சில தினங்களுக்கு முன்பு இணைந்துள்ளதாக புகைப்படம் வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது.

தேவரா போஸ்டர்
இந்நிலையில், ஜூனியர் என்டிஆர் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'தேவரா' என பெயரிடப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கையில் ரத்த கறையுடனான கத்தியுடன் ஆக்ரோஷமாக ஜூனியர் என்டிஆர் நிற்கும் முதல் தோற்ற போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
#Devara pic.twitter.com/bUrmfh46sR
— Jr NTR (@tarak9999) May 19, 2023
- கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் திரைப்படம் ’தேவரா’.
- ’தேவரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இயக்குனர் கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் திரைப்படம் 'தேவரா'. இப்படத்தின் கதாநாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். இப்படத்தை என்டிஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் சார்பில் சுதாகர் மிக்கிலினேனி மற்றும் ஹரிகிருஷ்ணா கே தயாரிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கையில் ரத்த கறையுடனான கத்தியுடன் ஆக்ரோஷமாக ஜூனியர் என்டிஆர் நிற்கும் 'தேவரா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'தேவரா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், 'இந்த கடல்ல மீன விட அதிகமா ரத்தமும் கத்தியும் கொட்டி கிடக்கு. அதுனால் தான் இதுக்கு பெயரு செங்கடல்' என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இதனால் வைபான ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
- ஹிரித்திக் ரோஷன் கடந்த சில வாரங்களாக பயிற்சி எடுத்திருந்தார்.
- ஜுனியர் என்.டி.ஆர். இணைவது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஃபைட்டர் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் கூட நிறைவு பெறாத நிலையில் ஹிரித்திக் ரோஷன் ஏஜெண்ட் கபீர் கதாபாத்திரத்தில் நடிக்க மீண்டும் ஆயத்தமாகி வருகிறார். கடந்த ஜனவரி 25-ம் தேதி ஃபைட்டர் வெளியான நிலையில் ஹிரித்திக் ரோஷன் வார் படத்திற்கு தயாராகி வருகிறார்.
2019-ம் ஆண்டு ஹிரித்திக் ரோஷன் ஏற்று நடித்திருந்த ஏஜெண்ட் கபீர் கதாபாத்திரம் பேசு பொருளாக மாறியது. மேலும் இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் ஹிரித்திக் ரோஷன் வார் 2 படத்தை அடுத்த வாரத்திலேயே துவங்க இருக்கிறார்.

வார் 2 மூலம் இந்த ஆக்ஷன் யூனிவர்சில் ஜுனியர் என்.டி.ஆர். இணைவது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. வை.ஆர்.எஃப். ஸ்பை யுனிவர்ஸ் மூலம் ஹிரித்திக் ரோஷனின் இதுவரை பார்த்திராத கோணத்தை இயக்குனர் அயன் முகர்ஜி வெளிக்கொண்டுவர ஆயத்தமாகி வருகிறார்.
அந்த வகையில் வார் 2 படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 23-ந் தேதி துவங்குகிறது. தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக ஹிரித்திக் ரோஷன் கடந்த சில வாரங்களாக பயிற்சி எடுத்திருந்தார்.
இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய ஹிரித்திக் ரோஷன், "கபீர் குறிப்பிடத்தக்க தடத்தை பதித்துள்ளான். இதனால் மீண்டும் கபீராக மாறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் கபீரை இந்த முறை வித்தியாசமான தோற்றத்தில் வெளிப்படுத்து எனக்கு சவாலாக இருக்கும். அவனின் மற்றொரு கோணம் வித்தியாசமாக இருக்க போகிறது," என்று தெரிவித்தார்.
- சொத்தை கையகப்படுத்துவதற்கான உத்தரவை நீதிமன்றம் வழங்கியது.
- எனது ஆவணங்கள் உண்மையானவை என உறுதிப்படுத்தப்பட்டதாக ஜூனியர் என்டிஆர் கூறினார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆர், 24 கோடி மதிப்பு சொத்து விவகாரம் தொடர்பாக நிவாரணம் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
ஜூப்லி ஹில்ஸ், ரோடு எண். 75ல் உள்ள 681 சதுர முற்றம் கொண்ட இந்த சொத்தை, ஜூபிலி ஹில்ஸ் ஹவுசிங் சொசைட்டியைச் சேர்ந்த சுங்கு கீதா லட்சுமி என்பவரிடமிருந்து ஜூனியர் என்டிஆர் 2003ல் ரூ.36 லட்சத்திற்கு வாங்கினார். இப்போது நடிகர் கட்டிய ஆடம்பரமான வீட்டை உள்ளடக்கிய இந்த நிலம் தற்போதைய சந்தை விலை சதுர அடிக்கு ரூ. 3.5 லட்சம் என்ற நிலையில் கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சொத்து விவகாரத்தில் முந்தைய உரிமையாளரின் உறவினர்கள் போலி ஆவணங்களை உருவாக்கி வங்கிகளில் கடன் பெற்றதாக அவர் குற்றம்சாட்டினார். வங்கிகள் டிஆர்டியை அணுகியதை அடுத்து, சொத்தை கையகப்படுத்துவதற்கான உத்தரவை நீதிமன்றம் வழங்கியது.
இந்நிலையில், இந்த சொத்து தொடர்பான நிலத் தகராறில் நிவாரணம் கோரி ஜூனியர் என்டிஆர் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
இதுகுறித்து ஜூனியர் என்டிஆர் கூறுகையில், "வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட உரிமை ஆவணங்கள் மற்றும் என்னிடம் உள்ள உரிமை ஆவணங்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன, மேலும் எனது ஆவணங்கள் உண்மையானவை என உறுதிப்படுத்தப்பட்டது. அனைத்து வங்கியாளர்கள் மீதும் தற்போது குற்ற வழக்குகள் உள்ளன" என்றார்.
- தேவரா வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- தேவராவின் படத்தின் படப்படிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் '' இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1 படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்து வருகிறார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார்.
இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் சமீபத்தில் வெளியாகி மக்கள் வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து, இப்படத்தில் இரண்டாவது பாடலான 'சுத்தமல்லி' வெளியாகி அதுவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடலை காவாலா பாடலை பாடிய சில்பா ராவ் பாடியுள்ளார்.
இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தேவராவின் படத்தின் படப்படிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஜூனியர் என்.டி.ஆர் தனது படப்பிடிப்பு பகுதியை முடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்