என் மலர்
நீங்கள் தேடியது "அவதார்-2"
- இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்'.
- இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் தனுஷ் தனது மகன்களுடன் அவதார்-2 படத்தை பார்த்துள்ளார்.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்' இன்று (டிசம்பர்16) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தின் சிறப்பு முன்னோட்ட காட்சிகளை பார்த்தவர்கள், பிரம்மிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் காட்சியமைப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அவதார்-2
இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 52 ஆயிரம் திரையரங்குகளில் மொத்தம் 160 மொழிகளில் வெளியானது. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் அவதார் 2 வெளியானது. இந்தியாவில் இப்படம் முன்பதிவில் மட்டும் சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேலாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியானது.

அவதார்-2
மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உருவான 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ராவுடன் அவதார் படத்தை பார்த்து ரசித்துள்ளார்.
நடிகர் தனுஷ் இன்று காலை சமூக வலைத்தளப் பக்கத்தில் 'இது அவதார் தினம்' என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்'.
- இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் தனுஷ் தனது மகன்களுடன் அவதார்-2 படத்தை பார்த்துள்ளார்.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்' இன்று (டிசம்பர்16) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தின் சிறப்பு முன்னோட்ட காட்சிகளை பார்த்தவர்கள், பிரம்மிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் காட்சியமைப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பிரகாஷ் ராஜ்
இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 52 ஆயிரம் திரையரங்குகளில் மொத்தம் 160 மொழிகளில் வெளியானது. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் அவதார் 2 வெளியானது. இந்தியாவில் இப்படம் முன்பதிவில் மட்டும் சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேலாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியானது.

அவதார்-2 படம் பார்த்த பிரகாஷ் ராஜ்
மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உருவான 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை நடிகர் தனுஷ் தனது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ராவுடன் படத்தை பார்த்து ரசித்துள்ளார். இந்நிலையில் தனுஷை தொடர்ந்து அவதார் படத்தை தனது மகனுடன் பார்த்து ரசித்ததாக நடிகர் பிரகாஷ் ராஜ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.