search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோபி நயினார்"

    • இன்னும் ஜாதி இருக்கிறதா என கேட்பவர்களுக்கு, என்னுடன் வாருங்கள் இந்தியாவில் ஜாதி இருக்கிறது என்று அழைத்துச் சென்று காட்டுகிறேன்.
    • பள்ளிகளில் மாணவர்களுக்கு நந்தன் திரைப்படத்தை காண வழிவகை செய்ய வேண்டும்.

    சசிகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள நந்தன் படத்தை பாராட்டி இயக்குநர் கோபி நயினார் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை எழுதியுள்ளார்.

    அவரது பதிவில், "இந்தியாவில் இன்னும் விவாதத்திற்கு உட்பட்டிருக்கும் சனநாயக உரையாடலான, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் அதிகாரத்தை நேர்மையான திரை கதையின் வழியாக தன் சொந்த மக்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறது "நந்தன்".

    இந்தத் திரைப்படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால் நடித்தவர்கள் எல்லோருமே சமூகம் பொறுப்புள்ளவர்களாகவே இருந்தார்கள் என்பதுதான். குறிப்பாக இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி.

    "இன்னும் ஜாதி இருக்கிறதா என கேட்பவர்களுக்கு, என்னுடன் வாருங்கள் இந்தியாவில் ஜாதி இருக்கிறது என்று அழைத்துச் சென்று காட்டுகிறேன்..." என்ற வாசகத்துடன் துவங்குகிறது இத்திரைப்படம்.

    சனநாயகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட இயக்குநர் இரா. சரவணனின் தைரியத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

    காலணிக்குள் இன்னும் அனுமதிக்கப்படாத நந்தன் எனும் தேரை, தன் முதுகில் சுமந்து வந்த இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமாரை, இன்னும் நாடு முழுவதும் கொடியேற்ற முடியாமல், நாற்காலியில் அமர முடியாமல், ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நுழைய அனுமதிக்காத படி தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட எண்ணற்ற தலித் மற்றும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் சார்பாக நெஞ்சுயர்த்தி நன்றியை சொல்லிக் கொள்கிறோம்.

    தமிழ்நாட்டின் முதல்வர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள், நந்தன் எனும் இத்திரைப்படம் சமூக நீதியோடு தொடர்புடையது என்பதால்... தமிழ்நாடு அரசின் உயரிய சிறப்பு கலை விருதினை நந்தன் திரைப்படத்திற்கு வழங்க வேண்டும்.

    தமிழ்நாடு முழுவதும் இருக்கும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நந்தன் திரைப்படத்தை காண வேண்டிய சமூக அரசியலுக்கான அவசியத்தை உணரும் வகையில், தமிழ்நாடு அரசு ஒரு அறிவுறுத்தலை வழங்குவது என்பது சமூக நீதியோடு தொடர்புடையது என்பது என் பணிவான கருத்து.

    நந்தன் திரைப்படம் சனநாயக அறிவியல் கல்விக்கான திரைப்படம் என்பதால் இளம் தலைமுறையினருக்கும் மாணவ மாணவியருக்கும் போய் சேர வேண்டிய அவசியம் கருதி அந்தந்த பள்ளி ஆசிரியர்களின் வழியாக நந்தன் திரைப்படத்தை காண வழிவகை செய்ய வேண்டும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • இந்த படத்தில் ஆன்ட்ரியா ஜெர்மியா நடித்துள்ளார்.
    • இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் அறம் படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் கோபி நயினார். இவர் இயக்கிய அறம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார்.

    இயக்குநர் கோபி நயினாரின் அடுத்த படம் "மனுசி" என்ற தலைப்பில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை வெற்றி மாறன் தயாரித்துள்ளார். இயக்குநரின் முதல் படத்தை போன்றே இந்த படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை கொண்டிருக்கிறது. இதில் ஆன்ட்ரியா ஜெர்மியா நடித்துள்ளார்.

    இளையராஜா இசையமைத்துள்ள மனுசி படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படம் தொடர்பான அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    இப்படத்தில் நடிகர் நாசர், தமிழ் மற்றும் ஹக்கிம் ஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறம் படத்தை போன்றே இப்படமும் சமூக பிரச்சினைகளை பேசும் கதைக்களம் கொண்டிருக்கும் என்பது டிரைலரில் தெரியவந்துள்ளது. 



    • நயன்தாரா முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார்.
    • இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

    தமிழ் சினிமாவில் அறம் படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் கோபி நயினார். இவர் இயக்கிய அறம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார்.

    இந்த நிலையில், இயக்குநர் கோபி நயினாரின் அடுத்த படத்திற்கு "மனுசி" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை வெற்றி மாறன் தயாரிக்கிறார். இயக்குநரின் முதல் படத்தை போன்றே இந்த படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை கொண்டிருக்கிறது. இதில் ஆன்ரியா ஜெர்மியா நடித்துள்ளார்.

     


    இளையராஜா இசையமைத்துள்ள மனுசி படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ‘அறம்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் கோபி நயினார்.
    • இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.

    கடந்த 2017-ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான 'அறம்' படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் கோபி நயினார். இப்படத்தை தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'மனுஷி' படத்தை இயக்கினார். இப்படம் குறித்த தகவல் எதுவும் பின்னர் வெளியாகவில்லை.


    கருப்பர் நகரம் போஸ்டர்

    இயக்குனர் கோபி நயினார் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜேடி சக்கரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை ஆர்.ஆர்.பிலிம் மேக்கர்ஸ் மற்றும் ஏ.ஜி.எல் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

    இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'கருப்பர் நகரம்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும் இது தொடர்பான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    • நயன்தாரா நடிப்பில் வெளியான 'அறம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கோபி நயினார்.
    • இவர் மீது இலங்கையை சேர்ந்த சியாமளா பண மோசடி புகார் அளித்துள்ளார்.

    கடந்த 2017ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான 'அறம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கோபி நயினார். விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் அண்ட்ரியா நடிக்கும் 'மனுசி' என்ற படத்தை இயக்குகிறார்.

    இந்நிலையில் இயக்குனர் கோபி நயினார் மீது இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் சியாமளா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பண மோசடி புகார் அளித்துள்ளார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சியாமளா, "சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் தமிழில் படங்களை தயாரிக்க ஆசைப்பட்டேன். கடந்த 2018ம் ஆண்டு சினிமா வட்டாரங்கள் மூலம் ஆக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜின் அறிமுகம் கிடைத்தது.



    அவர் இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் கருப்பர் நகரம் படத்தை தயாரித்து வருவதாகவும், அப்படத்தில் என்னை இணைந்து தயாரிப்பாளராக செயல்படுமாறும் தெரிவித்தார். அதன்பின்னர் கோபி நயினாரை நேரில் சந்தித்தோம், அவரும் விஜய் அமிர்தராஜுடன் இணைந்து படம் தயாரிக்கலாம் என கூறினார். அதன்பின்னர் அவரது வாக்குறுதியை ஏற்று, பல்வேறு தவணைகளாக மொத்தம் 30 லட்சம் ரூபாயை விஜய் அமிர்தராஜிடம் கொடுத்தேன், ஐந்து லட்சத்தை கையில் பணமாக கொடுத்தேன்.


    சியாமளா
    சியாமளா

    பிறகு படப்பிடிப்பு தொடங்கியது, ஆறு மாதத்தில் படத்தை முடித்து விடலாம் எனவும் படத்தின் லாபத்தில் 25 சதவீதம் தருவதாகவும் தெரிவித்தனர். அதன்பிறகு நான் பிரான்சிற்கு சென்றுவிட்டேன், சில மாதங்கள் கழித்து விஜய் அமிர்தராஜிடம் படம் குறித்து கேட்டபோது தற்காலிகாமாக படம் நிறுத்தபட்டுவிட்டதாக கூறினார். இதனை தொடர்ந்து விஜய் அமிர்தராஜ் மற்றும் கோபி நயினார் இருவரும் எனது தொடர்பை முற்றிலுமாக துண்டித்து விட்டனர், பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. எனவே விஜய் அமிர்தராஜ் மற்றும் கோபி நயினார் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்" என்றார்.

    • கோபி நயினார் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ‘மனுசி’.
    • இந்த படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    கடந்த 2017-ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான 'அறம்' திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் கோபி நயினார். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் 'மனுசி'. இயக்குனர் வெற்றி மாறன் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    மனுசி ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

    'அனல் மேலே பனித்துளி' படத்திற்கு பிறகு ஆண்ட்ரியா நடிக்கும் இந்த திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆண்ட்ரியா பிறந்த நாளான இன்று படக்குழு இப்படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, 'மனுசி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    ×