என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சென்னை பல்கலைக்கழக தடகளம்"
- பெண்களுக்கான குண்டு எறிதலில் ஷர்மிளா 13.20 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்தார்.
- 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் டி.லதா 37 நிமிடம் 34.34 வினாடியில் கடந்து புதிய சாதனை நிகழ்த்தினார்.
சென்னை:
சென்னை பல்கலைக்கழகம் சார்பில் 56-வது ஏ.எல். முதலியார் பொன்விழா நினைவு தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 1120 கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
2-வது நாளான நேற்று 5 புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது. பெண்களுக்கான குண்டு எறிதலில் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி வீரர்களை ஷர்மிளா 13.20 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்தார். 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் எம்.ஓ.பி. வீராங்கனை டி.லதா 37 நிமிடம் 34.34 வினாடியில் கடந்து புதிய சாதனை நிகழ்த்தினார். 100 மீட்டர் ஓட்டத்தில் கிருத்திகா (எத்திராஜ்) சாதனை படைத்தார்.
ஆண்களுக்கான குண்டு எறிதலில் டி.ஜி. வைஷ்ணவா மாணவர் ஆர்யன் தியாகி (17.91 மீட்டர் தூரம்), ஈட்டி எறிதலில் தனுஜ் காலிரா (டி.ஜி.வைஷ்ணவா, 74.50 மீட்டர் தூரம்) ஆகியோர் சாதனை படைத்தனர். இன்றுடன் போட்டி முடிகிறது.
- சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கவுரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
- சென்னை பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் வி.மகாதேவன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
சென்னை:
சென்னை பல்கலைக்கழக கல்லூரிகள் இடையேயான 54-வது ஏ.எல். முதலியார் பொன்விழா நினைவு தடகள போட்டி நேரு ஸ்டேடியத்தில் கடந்த 3 தினங்களாக நடந்தது. போட்டி முடிவில் பெண்கள் பிரிவில் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி 14 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் ஆக மொத்தம் 30 பதக்கம் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது. ஆண்கள் பிரிவில் லயோலா 12 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் பதக்கம் பெற்று முதல் இடத்தை பிடித்தது.
சிறந்த வீராங்கனையாக சுமத்ரா (எத்திராஜ்), சிறந்த வீரராக அருண் குமார் (டி.ஜி. வைஷ்ணவா) தேர்ந்தெடுக்கப்பட்டனர். சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கவுரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். சென்னை பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் வி.மகாதேவன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்