search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக தேர்தல் அதிகாரி"

    • இணையதளம் வாயிலாகவும் பெயர்களை சேர்க்கலாம்.
    • வாக்காளர் ஹெல்ப் லைன் மொபைல் ஆப் மூலமும் வாக்காளர் பட்டியலை பார்த்து விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    சென்னையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் இன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

    இதன் பிரதியை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் வழங்கி உள்ளோம்.

    ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வரைவு வாக்காளர் பட்டியலை வைக்க உள்ளோம். அதை பொதுமக்கள் பார்த்து தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? முகவரி மாற்றம் வேண்டுமா? என்பதை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

    தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல்படி மொத்தம் 6 கோடியே 11 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 கோடி ஆண் வாக்காளர்களும் 3 கோடியே 10 லட்சம் பெண் வாக்காளர்களும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 8,016 பேர் உள்ளனர்.

    வாக்காளர் பட்டியலில் 17 வயது நிரம்பிய புது வாக்காளர்களும் தங்களது பெயர்களை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு 18 வயது பூர்த்தியாகும் காலாண்டில் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

    இதற்காக ஜனவரி-1, ஏப்ரல்-1, ஜூலை-1, அக்டோபர்-1 ஆகிய தேதிகளில் 18 வயது ஆகும்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.

    இணைய தளம் வாயிலாகவும் பெயர்களை சேர்க்கலாம். வாக்காளர் ஹெல்ப் லைன் மொபைல் ஆப் மூலமும் வாக்காளர் பட்டியலை பார்த்து விண்ணப்பிக்கலாம்.

    அடுத்த மாதம் 4, 5, 18, 19 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதில் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். பரிசீலனைக்கு பிறகு பெயர்கள் சேர்ப்பு, திருத்தம் நடைபெறும்.

    இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ந்தேதி வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாகு அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கும் கடிதம் அனுப்பி இருந்தார்.
    • கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    சென்னை:

    உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வசித்து வருவோர் தங்களது சொந்த மாநில தேர்தல்களில் வாக்களிப்பதற்கு வசதியாக மார்க்-3 என்கிற மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு தமிழக தேர்தல் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த கூட்டம் ஜனவரி 16-ந்தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

    அந்த வகையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாகு அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கும் கடிதம் அனுப்பி இருந்தார். அதில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிடப்பட்டு இருந்தது. அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அனுப்பப்பட்ட கடிதத்தை அ.தி.மு.க. தலைமை கழகம் ஏற்க மறுத்துள்ளது. தலைமை கழக நிர்வாகிகள் அதனை வாங்காமல் திருப்பி அனுப்பி உள்ளனர்.

    • ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மாதிரியுடன் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கருத்து கேட்டு ஆலோசனை நடத்த ஜனவரி 16-ந்தேதி கூட்டம் ஒன்றுக்கு தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது.
    • அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு கடிதம் அனுப்பி வருகிறார்.

    சென்னை:

    உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வசித்து வருவோர் தங்களது சொந்த மாநில தேர்தல்களில் வாக்களிக்க வகை செய்யும் மார்க் 3 எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் கமிஷனுக்காக ஒரு பொதுத்துறை நிறுவனம் உருவாக்கி உள்ளது.

    இதற்கு 'ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்' என பெயரிடப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவது குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மாதிரியுடன் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கருத்து கேட்டு ஆலோசனை நடத்த ஜனவரி 16-ந்தேதி கூட்டம் ஒன்றுக்கு தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது.

    இதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு கடிதம் அனுப்பி வருகிறார்.

    இந்த நிலையில் கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்குமாறு சத்யபிரத சாகு அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், அ.தி.மு.க. இரட்டை தலைமையை குறிப்பிடும் வகையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

    ஏற்கனவே அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி பெயரில் வரவு செலவு கணக்கு இந்திய தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமி பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட கணக்கை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு அதை தனது இணையதளத்திலும் பதிவேற்றம் செய்தது.

    அதே போல் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க.வின் கருத்துக்களை கேட்கும் வகையில் தேசிய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியது. அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டு அந்த கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு அனுப்பிய கடிதத்தில் இரட்டை தலைமையை குறிக்கும் வகையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டுள்ளார்.

    ×