என் மலர்
நீங்கள் தேடியது "அல் நசர்"
- அல்-நசர் அணியுடன் ரொனால்டோ, 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஒப்பந்தம் செய்துள்ளார்.
- இதையடுத்து அல்-நசர் அணியின் டி-சர்ட் ரொனால்டோவிடம் வழங்கப்பட்டது.
லிஸ்பன்:
பிரபல கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இங்கிலாந்தை சேர்ந்த மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடி வந்த ரொனால்டோ அந்த கிளப் அணியில் இருந்து சமீபத்தில் வெளியேறினார். இதையடுத்து அவரை ஒப்பந்தம் செய்ய பல கிளப் அணிகள் போட்டியிட்டன.
இதில் சவுதி அரேபியாவை சேர்ந்த கிளப் அணியில் ரொனால்டோ இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் சவூதி அரேபியாவை சேர்ந்த கிளப் அணியான அல்-நசர் அணியுடன் ரொனால்டோ ஒப்பந்தம் செய்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் படி அவர் ஆண்டுக்கு 200 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1770 கோடி) பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்-நசர் அணியுடன் ரொனால்டோ, 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஒப்பந்தம் செய்துள்ளார். இதையடுத்து அல்-நசர் அணியின் டி-சர்ட் ரொனால்டோவிடம் வழங்கப்பட்டது. அவரது பெயர் பொறித்த டி-சர்ட்டை அறிமுகப்படுத்தினார்.
புதிய அணியில் இணைந்தது குறித்து ரொனால்டோ கூறியதாவது:-
ஐரோப்பிய கால்பந்தில் நான் பெற்ற வெற்றியால் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். ஆசியாவில் எனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இதுவே சரியான தருணம் என்று கருதுகிறேன்.
எனது புதிய அணியின் வீரர்களுடன் இணைவதை எதிர்நோக்கி இருக்கிறேன். அவர்களுடன் சேர்ந்து வெற்றியை அடைய உதவுவேன் என்றார். அல்-நசர் கிளப் அணி டுவிட்டரில் கூறும் போது, வரலாறு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இது எங்கள் கிளப்பை இன்னும் பெரிய வெற்றியை அடைய ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், எங்கள் லீக், தேசம், எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்கும் ஒரு கையொப்பமாகும். ரொனால்டோவை வரவேற்கிறோம் என்று தெரிவித்து உள்ளது.
37 வயதில் ரொனால்டோ விளையாட உள்ள 6-வது அணி அல்-நசர் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- கால் பந்து வீரர்கள் என்று கூறினாலே நமக்கு முதலில் மனதில் வருவது கிறிஸ்டியானோ ரொனால்டோ.
- இவரது முதல் கோல் போர்சுகளுக்காக ஜூன் 12 ஆம் தேதி 2004 அடித்தார்.
கால் பந்து வீரர்கள் என்று கூறினாலே நமக்கு முதலில் மனதில் வருவது கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் போர்சுகல் கால்பந்து அணி வீரராவார். இவரது முதல் கோல் போர்சுகளுக்காக ஜூன் 12 ஆம் தேதி 2004 அடித்தார். இவர் இதுவரை கால் பந்து வரலாற்றத்தில் பல சாதனைகளை படைத்துள்ளார்,
கடந்த 2022 டிசம்பரில், அல் நசர் என்ற கால்பந்து அணி 37 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோவை ஆண்டுக்கு $75 மில்லியன் தொகைக்கு ஒப்பந்தம் செய்தது. இதன் மூலம் கால்பந்து வரலாற்றில் அதிக சம்பளம் பெறும் கால்பந்து வீரராக ரொனால்டோ மாறினார்.
கடந்த வாரம் இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படத்திற்கு சுமார் 45 லட்சத்திற்கும் அதிக கமெண்டுகள் குவிந்தன. இது சமூக வலைதளத்தில் அதிக கமெண்டுகள் பெற்ற பதிவு என்ற சாதனையாக மாறியது.
தற்பொழுது இவர் மற்றொரு சாதனையை படைத்துள்ளார். சர்வதேச கால்பந்து போட்டிகளில் 2004 ஆம் ஆண்டில் இருந்து 2024 வரை தொடர்ந்து 21 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படத்தார்.