என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனிமல்"

    • 2024 ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் நேற்றிரவு வழங்கப்பட்டன.
    • பாபி தியோலுக்கு சிறந்த வில்லனுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.

    2024 ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் நேற்றிரவு வழங்கப்பட்டன. இதில் சிறந்த இயக்குநருக்கான விருது, அனிமல் படத்தின் இயக்குநரான சந்தீப் ரெட்டி வாங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இதனை டீ சீரிஸ் தயாரிப்பு நிறுவனம் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    மேலும் அனிமல் படத்தில் வில்லனாக நடித்த பாபி தியோலுக்கு சிறந்த வில்லனுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த வருடம் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து பிரபாஸ் இயக்கத்தில், ஸ்பிரிட் எனும் திரைப்படத்தை சந்தீப் ரெட்டி வாங்கா இயக்க இருக்கிறார்.

    • சாய் பல்லவியும் ரன்பீர் கப்பூரும் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை.
    • ரன்பீர் கப்பூர் அயோத்யாவின் ராஜகுமாரனைப் போல் ஆடையணிந்து மிடுக்குடன் காணப்படுகிறார்.

    நிதேஷ் திவாரி அடுத்ததாக ராமாயணா திரைப்படத்தை மிக பிரமாண்டமான பொருட் செலவில் இயக்கி வருகிறார். இதற்கு முன் அவர் இயக்கிய சிச்சோரே, தங்கல் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

    முன்னதாக சாய் பல்லவி சீதா கதாப்பாத்திரத்திலும், ரன்பீர் கப்பூர் ராமன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. அதைத் தொடர்ந்து இப்பொழுது படப்பிடிப்பு தளத்தில் இருந்து சாய் பல்லவி மற்றும் ரன்பீர் கப்பூரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

    அதில் ரன்பீர் கப்பூர் அயோத்யாவின் ராஜகுமாரனைப் போல் ஆடையணிந்து மிடுக்குடன் காணப்படுகிறார். சாய் பல்லவி இராஜகுமாரியை போல் உடையணிந்து இருக்கிறார். சாய் பல்லவியும் ரன்பீர் கப்பூரும் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை.

    இதற்கு முன் ரன்பீர் கப்பூர் நடித்து வெளியான அனிமல் படத்தின் கதாப்பாத்திரத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

    இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக சீதாதேவி கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்து வருகிறார். அவரது லுக்கை பார்த்த ரசிகர்கள் இவரைப் பார்த்தால் சீதாம்மா போல இல்லை என்றும் சூர்ப்பனகை போல உள்ளார் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஒரு மனிதனை நம்புவதை விட பயங்கரமானது எதுவுமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் என ரசிகர் பதிவிட்டிருந்தார்.
    • அனிமல் படம் குறித்த ரசிகரின் கேள்விக்கு ராஷ்மிகா பதில் அளித்தது டிரெண்டாகி உள்ளது.

    கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனையடுத்து விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் மெகா ஹிட்டானது. மேலும் அந்தப் படத்திலிருந்து ராஷ்மிகாவுக்கு பலரும் ரசிகர்களாக மாறினர். தொடர்ந்து புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார்.

    தெலுங்கில் கொடிகட்டி பறக்கும் ராஷ்மிகா தமிழிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி, தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். சுல்தான் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். அதுவும் போதிய வரவேற்ப்பு இல்லை.


    தமிழில் அவர் திணறினாலும் ஹிந்தியில் அவருக்கு பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் குட் பை, மஜ்னு, அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இப்படி பல மொழிகளில் நடிக்க ஆரம்பித்திருக்கும் ராஷ்மிகா மந்தனாவை ரசிகர்கள் நேஷனல் க்ரஷ் என்றும், எக்ஸ்பிரஷன் குயின் என்றும் அழைக்கிறார்கள். கடைசியாக அவர் அனிமல் படத்தில் நடித்தார். படம் மோசமான விமர்சனங்களை பெற்றது. ராஷ்மிகாவும் ஓவர் கவர்ச்சியாக நடித்திருந்தார். படம் மோசமான விமர்சனத்தை பெற்றாலும் 900 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது.


    இந்நிலையில் அனிமல் படம் குறித்த ரசிகரின் கேள்விக்கு ராஷ்மிகா பதில் அளித்தது டிரெண்டாகி உள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனா சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க எப்போதும் தயங்கியது இல்லை என்றே கூறலாம். அப்படி தான் இப்போது அனிமல் படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்ட ரசிகர் ஒருவருக்கு பதில் அளித்து இருக்கிறார்.

    ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அனிமல் படத்தில் இடம்பெற்ற ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா இருவரும் பேசும் வீடியோவையும், படத்தில் ராஷ்மிகாவுக்கு பிறகு ரன்பீர் கபூருக்கு ட்ரிப்டி டிம்ரி நடித்த ஜோயா கதாபாத்திரத்தின் மீது பழக்கம் ஏற்படும் வீடியோவையும் சேர்த்து எடிட் செய்து வெளியீட்டு 'ஒரு மனிதனை நம்புவதை விட பயங்கரமானது எதுவுமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்' என பதிவிட்டுள்ளார்.

    இந்த வீடியோவை பார்த்த நடிகை ராஷ்மிகா மந்தனா, திருத்தம் ஒரு முட்டாள் மனிதனை நம்புவது பயப்படுவதற்கு சமம். அங்கேயும் நிறைய நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். அந்த மனிதர்களை நம்புவது எப்போதும் ஸ்பெஷல் என கூறி பதில் அளித்துள்ளார். ராஷ்மிகாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • 2024 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA) விழா அபு அதாபியில் யாஸ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில் நடைபெற்று வருகிறது
    • சிறந்த நெகட்டிவ் கதாபாத்திரத்திற்கான விருதுக்கு அனிமல் பட வில்லன் பாபி தியோல் தேர்வாகியுள்ளார்.

    2024 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA) விழா அபு அதாபியில் யாஸ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில் நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 27 [வெள்ளிக்கிழமை] தொடங்கிய இந்த மூன்று நாள் விழா இன்றுடன் [செப்டம்பர் 29] நிறைவடைகிறது. இந்நிலையில் சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான விருதுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி,

    ➽சிறந்த நடிகர் விருதுக்கு ஷாருக்கான் தேர்வாகியுள்ளார். அட்லீ இயக்கத்தில் வெளியான 'ஜவான்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.

    ➽சிறந்த படமான ரன்பீர் கபூர் நடித்த 'அனிமல் 'படம் தேர்வாகியுள்ளது. தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இந்த படத்தை இயக்கி இருந்தார்.

     

    ➽சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 'மிஸஸ் சாட்டர்ஜி vs நார்வே' படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.

    ➽சிறந்த இயக்குநராக '12த் பெயில்' படத்தை இயக்கிய விது வினோத் சோப்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்

    ➽சிறந்த துணை நடிகராக 'அனிமல்' படத்தில் நடித்த அனில் கபூர் தேர்வாகியுள்ளார்

    ➽சிறந்த துணை நடிகையாக ''ராக்கி அவுர் ராணி பிரேம் கஹானி' படத்திற்காக மூத்த நடிகை ஷபானா அஸ்மி தேர்வாகியுள்ளார்

    ➽சிறந்த நெகட்டிவ் கதாபாத்திரத்திற்கான விருதுக்குஅனிமல் பட வில்லன் பாபி தியோல் தேர்வாகியுள்ளார்

    ➽'ராக்கி அவுர் ராணி பிரேம் கஹானி' படம் சிறந்த கதைக்கான விருதுக்குத் தேர்வாகியுள்ளது

    ➽சிறந்த தழுவல் [உண்மை சம்பவத்திலிருந்து] கதை விருதுக்கு '12த் பெயில்' தேர்வாகியுள்ளது

    ➽சிறந்த இசைக்காக அனிமல் படம் தேர்வாகியுள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் ஆவார்.

    ➽சிறந்த பாடல் வரிகள் விருதுக்கு அனிமல் படத்தில் பாடல் எழுதிய சித்தார்த் கரிமா மற்றும் சத்ரங்கா ஆகியோர் தேர்வாகியுள்ளனர் .

    மூன்றாம் நாள் நிகழ்வாக இன்று (செப்.29) ஹனி சிங், ஷில்பா ராவ் மற்றும் ஷங்கர்-எஹ்சான்-லாய் உள்ளிட்ட கலைஞர்களின் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் ஹீரமண்டி இந்தி வெப் சீரிஸ் முதலிடம் பிடித்துள்ளது.
    • மிர்சாபூர் சீசன் 3 இப்பட்டியலில் 4-ம் இடம் பிடித்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டில் முடிவிலும் அந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 விஷயங்களை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இந்தாண்டு பாகிஸ்தான் நாட்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

     ஆச்சரியப்படும் வகையில் இந்த டாப் 10 பட்டியலில் 8 இந்திய திரைப்படங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் இடம்பிடித்துள்ளது. இந்திய சினிமாக்களை பாகிஸ்தான் மக்கள் அதிக அளவில் விரும்புகின்றனர் என்பதையே இது காட்டுகிறது.

     இந்த டாப் 10 பட்டியலில் ஹீரமண்டி இந்தி வெப் சீரிஸ் முதலிடம் பிடித்துள்ளது. பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இப்படத்தை இயக்கியுள்ளார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட இந்தியாவில் சுதந்திரம் பெற, ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய லாகூரில் இருக்கும் ஹீரமண்டியின் தவைஃப்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்களை மையப்படுத்தி இந்த சீரிஸ் எடுக்கப்பட்டுள்ளது. ஆடல், பாடல் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களை தவைஃப்கள் என்று கூறுவார்கள்.

    பாகிஸ்தானின் தலைநகரான லாகூரில் இந்த வெப் சீரிஸின் கதை நடப்பதால் பாகிஸ்தான் மக்கள் இதனை அதிக அளவில் தேடியுள்ளனர்.

     இந்த டாப் 10 பட்டியலில் 5 பாலிவுட் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் '12-த் பெயில்' திரைப்படம் 2-ம் இடத்தையும் ரன்பீர் கபூரின் 'அனிமல்' திரைப்படம் 3-ம் இடத்தையும் ஷ்ரத்தா கபூரின் 'ஸ்ட்ரீ 2' திரைப்படம் 5-ம் இடத்தையும் 'பூல் பூலையா 3' திரைப்படம் 7-ம் இடத்தையும் ஷாருக்கானின் 'டங்கி' திரைப்படம் 8-ம் இடத்தையும் பிடித்துள்ளது.

    ஹீரமண்டி இந்தி வெப் சீரிசை தொடர்ந்து மிர்சாபூர் சீசன் 3 இப்பட்டியலில் 4-ம் இடம் பிடித்துள்ளது. இந்தி பிக் பாஸ் 17 ஆவது சீசன் 9-ம் இடத்தையும் பிடித்துள்ளது.

     இந்த டாப் 10 பட்டியலில் 'இஷ்க் முர்ஷித்' என்ற 'கபி மெயின் கபி தும்' ஆகிய பாகிஸ்தான் நாட்டை 2 டிவி ஷோக்கள் இடம்பெற்றுள்ளது.

    2024ம் ஆண்டு கூகுளில் பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள், வெப் சீரிஸ், ரியாலிட்டி ஷோக்கள்:

    1. ஹீரமண்டி

    2. 12-த் பெயில்

    3. அனிமல்

    4. மிர்சாபூர் சீசன் 3

    5, ஸ்ட்ரீ 2

    6. இஷ்க் முர்ஷித் (பாகிஸ்தான் தொடர்)

    7. பூல் பூலையா 3

    8. டங்கி

    9. இந்தி பிக் பாஸ் சீசன் 17

    10. கபி மெயின் கபி தும் (பாகிஸ்தான் தொடர்)

    ×