என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கட்டில்"
- கட்டிலில் படுத்தபடி ரூ.500 நோட்டுக்களை உடல் மீது கொட்டி தூங்குவது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.
- இந்தப் படத்தை பார்த்த பலர் சமூக வலைதளங்களில் பல விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
அசாமின் ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (யுபிபிஎல்) தலைவர் பெஞ்சமின் பாசுமாதாரி. உடல்குரி மாவட்டத்தில் உள்ள பைரகுரியில் கிராம சபை மேம்பாட்டுக் குழுவின் தலைவராக உள்ளார்.
தற்போது இவர் கட்டிலில் படுத்தபடி ரூ.500 நோட்டுக்களை உடல் மீது கொட்டி தூங்குவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தப் படத்தை பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அந்த அரசியல் தலைவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் தற்போது எழுந்து வருகின்றன. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், இவ்விவகாரம் பாஜகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த புகைப்படம் அதிகளவில் தற்போது பரவி வருகிறது. இந்தப் படத்தை பார்த்த பலர் சமூக வலைதளங்களில் பல விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
NDA மற்றும் UPPL ஆகிய இரு கட்சிகளும் ஊழலற்ற ஆட்சியை உறுதி செய்வதாக உறுதியளித்து வரும் நிலையில், இப்படி ஒரு புகைப்படம் வெளியாகி இருப்பது இரு கட்சிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- இ.வி.கணேஷ்பாபு, இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”.
- இப்படத்திற்கு ஶ்ரீகாந்த்தேவா இசையமைத்துள்ளார்.
பிரபல எடிட்டர் பி.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு, இயக்கி நடித்துள்ள திரைப்படம் "கட்டில்". மேப்பிள் லீப்ஸ் புரொடக்ஷன்ஸ் (Maple Leafs Productions) தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஶ்ரீகாந்த்தேவா இசையமைத்துள்ளார். வைட் ஆங்கிள் ரவிசங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவினில் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
இந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது, கட்டில் மாதிரியான சிறு படங்கள் ஓடினால் தான் தமிழ் சினிமாவிற்கு நல்லது. இது மாதிரி படங்களில் தான் புதிய கலைஞர்கள் நமக்கு கிடைப்பார்கள். பெரிய படங்கள் திட்டமிட்டுப் பார்க்க வைக்கப்படுகிறது, துப்பாக்கி சத்தங்களுக்கு மத்தியில் கணேஷ்பாபு புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கிறார். சிறு படங்கள் தான் நம்மைச் சிறகடித்துப் பறக்கவைக்கும் நம் சிந்தனையை வளர்க்கும். பழைய படங்களின் போஸ்டர் பார்த்தால் அதில் எல்லாமே பெண்களும் முக்கியமாக இடம் பெற்றிருப்பார்கள்.
ஆனால், இப்போது சினிமாக்களில் பெண்களின் படங்களைப் பார்க்க முடிகிறதா? பெண்ணுக்கு சரிசமமான இடம் தந்த சினிமா தான் தமிழ் சினிமாவின் பொற்காலம், அந்த பொற்காலத்தை தன் கட்டில் மூலம் மீட்டுக்கொண்டு வந்திருக்கிறார் கணேஷ்பாபு . இது மாதிரியான சின்னப்படங்கள் ஜெயிப்பது தான் மக்களுக்கு மகிழ்வைத்தரும் என் போல் சமூக செயல்பாட்டாளர்கள் அதைத்தான் ஆசைப்படுகிறோம். கண்ணதாசன், வாலி இருந்தபோது அவர்களோடு போட்டி போட்டு அவர்களோடு நான் நின்றேன் அவர்களை ஜெயிக்க முடியாது எனத் தெரியும், ஆனால் அவர்களோடு நானும் இருக்கிறேன் என நின்றேன்.
அது மட்டும் போதுமா ? இப்போது நான் மதன்கார்கியோடு போட்டிபோடுகிறேன். அவரை ஆஸ்திரேலியாவிற்கு படிக்க அனுப்பினேன். விஞ்ஞானம் படித்துவிட்டு வந்து பேராசிரியர் ஆனார். ஆனால் எனக்குப் போட்டியாக வருவார் என நினைக்கவில்லை. இந்தப்படத்தில் அருமையான வரிகள் தந்துள்ளார். அவருக்கு இந்தப்படத்திற்குத் தேசியவிருது கிடைக்க வாழ்த்துக்கள். கணேஷ்பாபு நினைவுகளின் வலியை இப்படம் மூலம் பதிவு செய்துள்ளார். அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று பேசினார்.
- எடிட்டர் பி.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு, இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”.
- இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு விழாவில் படக்குழு உள்ளிட்ட திரைபிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.
மேப்பிள் லீஃப் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் எடிட்டர் பி.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு, இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் "கட்டில்". இப்படத்திற்கு வைட் ஆங்கிள் ரவிசங்கர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ஶ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு விழாவில் படக்குழு உள்ளிட்ட திரைபிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இதில் இயக்குனர் இ.வி.கணேஷ் பாபு பேசியதாவது, நானும் பத்திரிக்கையாளனாக இருந்து வந்தவன் தான். 2023ல் முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் நான் கலந்துகொள்வது மகிழ்ச்சி. நான் இங்கு இன்று இந்த மேடையில் இருக்க முக்கிய காரணம் எடிட்டர் லெனின் அவர்கள் தான் அவரது ஊக்கத்தில் தான் இந்த திரைப்படம் நடந்தது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் இந்த நிகழ்விற்கு வந்து வாழ்த்துவது மிக மகிழ்ச்சி.
ஶ்ரீகாந்த் தேவா இப்படத்தில் அருமையான இசையைத் தந்துள்ளார். சித் ஶ்ரீராம் மிக அரிதாக தேர்ந்தெடுத்து பாடல்கள் பாடுகிறார். எங்கள் படத்தில் நான்கு மொழிகளில் அவர் பாடித் தந்தது மகிழ்ச்சி. நடிகை சிருஷ்டி டாங்கே கட்டிலில் தமிழ்ப் பெண்ணாகவே மாறிவிட்டார். இந்த படம் அவருக்கு முக்கியமான படமாக அமையும். வைட் ஆங்கிள் ரவிசங்கரன் ஒளிப்பதிவு இப்படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. நம் பாரம்பரியத்தை போற்றும் படமாக இப்படம் இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி என்றார்.
நடன இயக்குனர் மெட்டி ஒலி சாந்தி பேசியதாவது, அந்தக் காலத்தில் காதலுக்கு குழந்தைக்கு எனத் தனித்தனியாக பாடல் இருக்கும் கதையோடு சேர்ந்து இருக்கும். இப்போது பாடல் கமர்ஷியலாக மாறிவிட்டது. இதை நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன். நடன இயக்குநராக பல நேரங்களில் இது எனக்கு தோன்றியிருக்கிறது. இப்போது ஆடியன்ஸ் மாறியுள்ளார்கள். கதைக்காக படம் பார்க்கிறார்கள். இப்படத்தில் நீங்கள் பாடலுக்காகவே படம் பார்ப்பீர்கள். பாடலே கதையை சொல்லும். ஶ்ரீகாந்த தேவா சாருக்கு ஸ்பெஷல் நன்றி. இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு சார் மிக அற்புதமாக உருவாக்கியுள்ளார். . படம் வெற்றி பெற பிரார்த்திக்கிறேன் நன்றி என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்