search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாந்தி"

    • எடிட்டர் பி.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு, இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”.
    • இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு விழாவில் படக்குழு உள்ளிட்ட திரைபிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

    மேப்பிள் லீஃப் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் எடிட்டர் பி.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு, இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் "கட்டில்". இப்படத்திற்கு வைட் ஆங்கிள் ரவிசங்கர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ஶ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

     

    கட்டில் படக்குழு

    கட்டில் படக்குழு


    இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு விழாவில் படக்குழு உள்ளிட்ட திரைபிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இதில் இயக்குனர் இ.வி.கணேஷ் பாபு பேசியதாவது, நானும் பத்திரிக்கையாளனாக இருந்து வந்தவன் தான். 2023ல் முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் நான் கலந்துகொள்வது மகிழ்ச்சி. நான் இங்கு இன்று இந்த மேடையில் இருக்க முக்கிய காரணம் எடிட்டர் லெனின் அவர்கள் தான் அவரது ஊக்கத்தில் தான் இந்த திரைப்படம் நடந்தது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் இந்த நிகழ்விற்கு வந்து வாழ்த்துவது மிக மகிழ்ச்சி.

    கட்டில் படக்குழு

    கட்டில் படக்குழு

     

    ஶ்ரீகாந்த் தேவா இப்படத்தில் அருமையான இசையைத் தந்துள்ளார். சித் ஶ்ரீராம் மிக அரிதாக தேர்ந்தெடுத்து பாடல்கள் பாடுகிறார். எங்கள் படத்தில் நான்கு மொழிகளில் அவர் பாடித் தந்தது மகிழ்ச்சி. நடிகை சிருஷ்டி டாங்கே கட்டிலில் தமிழ்ப் பெண்ணாகவே மாறிவிட்டார். இந்த படம் அவருக்கு முக்கியமான படமாக அமையும். வைட் ஆங்கிள் ரவிசங்கரன் ஒளிப்பதிவு இப்படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. நம் பாரம்பரியத்தை போற்றும் படமாக இப்படம் இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி என்றார்.


    கட்டில் படக்குழு

    கட்டில் படக்குழு

    நடன இயக்குனர் மெட்டி ஒலி சாந்தி பேசியதாவது, அந்தக் காலத்தில் காதலுக்கு குழந்தைக்கு எனத் தனித்தனியாக பாடல் இருக்கும் கதையோடு சேர்ந்து இருக்கும். இப்போது பாடல் கமர்ஷியலாக மாறிவிட்டது. இதை நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன். நடன இயக்குநராக பல நேரங்களில் இது எனக்கு தோன்றியிருக்கிறது. இப்போது ஆடியன்ஸ் மாறியுள்ளார்கள். கதைக்காக படம் பார்க்கிறார்கள். இப்படத்தில் நீங்கள் பாடலுக்காகவே படம் பார்ப்பீர்கள். பாடலே கதையை சொல்லும். ஶ்ரீகாந்த தேவா சாருக்கு ஸ்பெஷல் நன்றி. இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு சார் மிக அற்புதமாக உருவாக்கியுள்ளார். . படம் வெற்றி பெற பிரார்த்திக்கிறேன் நன்றி என்றார். 

    ×