என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உத்தரகாண்ட் நிலச்சரிவு"
- உங்களுடைய 'ஹெல்ப்' இல்லையென்றால் எங்களால் வந்திருக்க முடியாது என்றார்.
- முதற்கட்டமாக 10 பேர் மீட்கப்பட்டோம். பிறகு 20 பேர் என 30 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உள்ள பராசக்தி என்ற பெண்ணிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
வணக்கம் நான் ஸ்டாலின் பேசுகிறேன் என்றார். அதற்கு அந்த பெண் வணக்கம் தெரிவித்து விட்டு நல்லபடியா வந்திட்டோம் என்றார். உங்களுடைய 'ஹெல்ப்' இல்லையென்றால் எங்களால் வந்திருக்க முடியாது என்றார்.
உடனே முதலமைச்சர் அவரிடம், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்று கேட்டார்.
மருத்துவ பரிசோதனையில் இருக்கிறோம் என்று பதில் அளித்தார். அங்கிருந்து வந்ததும் இங்கு ஏற்பாடு செய்து ஊருக்கு செல்ல உதவிடுமாறு சொல்லி இருக்கிறேன் என்றார்.
அப்போது அந்த பெண், முதற்கட்டமாக 10 பேர் மீட்கப்பட்டோம். பிறகு 20 பேர் என 30 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
உடனே முதலமைச்சர், "தைரியமாக இருங்கள்" என்று ஆறுதல் கூறினார். "நான் பேசியதாக எல்லோரிடமும் சொல்லுங்கள். அங்கிருக்கும் கலெக்டரிடமும் தொடர்ந்து பேசி வருகிறோம்" என்றார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.அங்கு பாதுகாப்பாக உள்ள தமிழர்களில் ஒருவரான திருமிகு. பராசக்தி அவர்களைத் தொடர்புகொண்டு பேசினேன்.பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலமுடன் தங்களது ஊருக்குத் திரும்ப… pic.twitter.com/TEHjsiRvYT
— M.K.Stalin (@mkstalin) September 15, 2024
- உத்தரகாண்டில் அடுத்தடுத்த ஏற்பட்ட நிலச்சரிவால் வீடுகள் மண்ணில் புதைந்தன.
- 3 ஆயிரம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியது.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலம் இமயமலை பகுதியில் அமைந்துள்ளது ஜோஷிமத் நகரம். இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உண்டு.
இந்நிலையில், இந்தப் பகுதியில் திடீரென அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் ஏறத்தாழ 570 வீடுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. பல வீடுகள் மண்ணில் புதைந்துவிட்டதால் அங்கு வசித்து வரும் மக்கள் பீதியில் உள்ளனர்.
தகவலறிந்த முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி ஜோஷிமத் நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பலர் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். பாதுகாப்பற்ற சூழல் காரணமாக 60 குடும்பங்கள் அப்பகுதியில் இருந்து வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். 29 குடும்பங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 500 குடும்பங்கள் தங்களது பாதுகாப்பற்ற வீடுகளில் தொடர்ந்து வசித்து வருகின்றனர்.
மேலும், இந்த நிலச்சரிவால் 3 ஆயிரத்திறகும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீடுகள் பாதிக்கப்பட்டு வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியவர்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு வீட்டு வாடகையாக மாதம் 4,000 ரூபாய் முதல் மந்திரியின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்