என் மலர்
நீங்கள் தேடியது "கணேஷ் கே பாபு"
- இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளார்.
- இப்படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த திரைப்படம் 'டாடா'. இதில் பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கவுள்ள படத்தில் ஆதித்யா வர்மா, மகான் படங்களில் நடித்த துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கிருத்திகா உதயநிதி இயக்கும் "காதலிக்க நேரமில்லை" படத்தில் ஜெயம் ரவி நடித்து முடித்துள்ளார்.
- டாடா படத்தை போன்றே வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் உருவாகும் என சொல்லப்படுகிறது.
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஜெயம் ரவி. இவர் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கும் "காதலிக்க நேரமில்லை" படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்த நிலையில், டாடா பட இயக்குநர் கணேஷ்பாபு இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
டாடா படத்தை போன்றே வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் உருவாகும் என சொல்லப்படுகிறது.
கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த 'டாடா' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'இறைவன், சைரன்' படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.
- ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, வெளியான 'இறைவன், சைரன்' படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்பொழுது 'பிரதர்', 'ஜீனி' மற்றும் 'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், ஜெயம் ரவியின் 34-வது படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குவதாக போஸ்டரை பகிர்ந்து பட நிறுவனம் அறிவித்துள்ளது. விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்குகிறது.
ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இது ஜெயம் ரவியுடன் அவர்கள் இணையும் 3-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
We are beyond proud & excited to announce that our next film is @actor_jayamravi's #JR34
— Screen Scene (@Screensceneoffl) October 5, 2024
Directed by @ganeshkbabu
from the director of "DADA"
A @Jharrisjayaraj Musical ?
????? ?????? ????....?@screensceneoffl @senthilkumarsmc @skiran_kumar @onlynikil pic.twitter.com/BieVIpimRF
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜெயம் ரவியின் 34-வது படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கவுள்ளார்.
- பிரதர் திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, வெளியான 'இறைவன், சைரன்' படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்பொழுது 'பிரதர்', 'ஜீனி' மற்றும் 'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் பிரதர் திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், ஜெயம் ரவியின் 34-வது படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கவுள்ளார். படத்தில் பிரதீப் ஆண்டனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இது ஜெயம் ரவியுடன் அவர்கள் இணையும் 3-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு கூடுதல் திரைக்கதையை இயக்குனர் ரத்னம் எழுதியுள்ளார். படப்பிடிப்பு பணிகள் டிசம்பரில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜெயம் ரவியின் 34-வது படத்தை 'டாடா' பட இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கவுள்ளார்.
- ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, வெளியான 'இறைவன், சைரன், பிரதர்' படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்பொழுது 'ஜீனி' மற்றும் 'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இதனையடுத்து ஜெயம் ரவியின் 34-வது படத்தை 'டாடா' பட இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கவுள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்
இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. பூஜை தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன் .
- ரவி மோகனின் 34-வது படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கி வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன் .
இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, வெளியான 'இறைவன், சைரன்' படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியானது 'காதலிக்க நேரமில்லை' திரைப்படம். இப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது. சுதா கொங்கரா இயக்கும் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே ரவி மோகனின் 34-வது படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குவதாக போஸ்டரை பகிர்ந்து பட நிறுவனம் கடந்த அக்டோபரில் அறிவித்தது. ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில் ரவி மோகனின் 34 படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோவை நாளை காலை 11 மணிக்கு படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் ரவி மோகன் ஒரு அரசியல்வாதியாகவும் கராத்தே மாஸ்டராகவும் நடித்துள்ளார் என தகவல் வெளியாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
- இந்தப் படத்தை ஸ்கிரீன் ஸீன் நிறுவனம் தயாரிக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ரவி மோகன். இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, வெளியான 'இறைவன், சைரன்' படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'காதலிக்க நேரமில்லை.' இப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இதுதவிர நடிகர் ரவி மோகன் சுதா கொங்கரா இயக்கும் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையே ரவி மோகனின் 34-வது படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குவதாக போஸ்டரை பகிர்ந்து பட நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் அறிவித்து இருந்தது. ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
ரவி மோகனின் 34 படத்திற்கு கராத்தே பாபு என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு அதிகாரப்பூர்வ வீடியோ வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் ரவி மோகன் அரசியல்வாதி மற்றும் கராத்தே மாஸ்டராகவும் நடித்துள்ளார் என்று தெரிகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எம்ஜி ஸ்டூடியோஸ் அவர்கள் தயாரிக்கும் முதல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
- இது ஒரு ஹாரர் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது.
தயாரிப்பு நிறுவனமான எம்ஜி ஸ்டூடியோஸ் அவர்கள் தயாரிக்கும் முதல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் மூலம் அஜய் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை கல்யாண் கே ஜெகன் இயக்கவுள்ளார். இப்படத்தின் கதையை டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு ஹாரர் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் நெல்சன் திலிப்குமார் மற்றும் நடிகர் சூரி அவர்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்டனர்.
படத்தின் தொழில்நுட்ப குழு பின் வருமாறு
ஒளிப்பதிவு - ரவி சக்தி
படத்தொகுப்பு - கதிரேஷ் அழகேசன்
இசை - மனு ரமேசன்
கலை - ஷன்முகராஜா
ஆடை வடிவமைப்பு - காயத்ரி
ஸ்டண்ட் - நைஃப் நரேன்
திரைப்படத்தின் மற்ற செய்திகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கராத்தே பாபு திரைப்படத்தின் டைட்டில் லுக் சமீபத்தில் வெளியானது.
- கராத்தே பாபு படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ரவி மோகன். இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, வெளியான 'இறைவன், சைரன்' படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'காதலிக்க நேரமில்லை.' இந்தப் படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது.
இதுதவிர நடிகர் ரவி மோகன் சுதா கொங்கரா இயக்கும் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையே ரவி மோகனின் 34-வது படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குவதாக போஸ்டரை பகிர்ந்து பட நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் அறிவித்து இருந்தது. ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். ரவி மோகனின் 34 படத்திற்கு கராத்தே பாபு என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் ரவி மோகன் அரசியல்வாதி மற்றும் கராத்தே மாஸ்டராகவும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், கராத்தே பாபு திரைப்படத்தில் நடிகர் சக்தி வாசுதேவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை படக்குழு தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், படத்தில் சக்தி வாசுதேவன் "பாக்சர் செல்வராஜ்" என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. மேலும், படக்குழு சார்பில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.