search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணா நூற்றாண்டு நூலகம்"

    • முதல்வன் திட்டத்திலும் அதிகளவில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • வடசென்னை வளர்ச்சியில் முதலமைச்சரின் திராவிட மாடல் அரசு உயர்ந்த அக்கறை கொண்டுள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மாதவரம் தொகுதியில் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்க அரசு முன்வருமா என சுதர்சனம் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூறியதாவது:-

    சென்னையில் ஏற்கனவே வண்ணாரப்பேட்டையில் தியாகராஜா கல்லூரி, நந்தனம் கல்லூரியிலும் தலா ஒரு பயிற்சி மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மதுரை, கோயம்புத்தூர், சேலம் போன்ற இடங்களிலும் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

    சென்னையை பொறுத்த வரை போட்டி தேர்வுக்கான பயிற்சி குடிமை தேர்வுக்கான பயிற்சி மையம் இயங்கி வருவதோடு, முதன்மை தேர்வாக இருந்தாலும் ஏறத்தாழ 300 மாணவர்கள் பயிற்சி கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், போட்டி தேர்வில் ஈடுபடும் மாணவர்களை அரசு கருத்தில் கொண்டு தான் பல நூலகங்களிலும் போட்டி தேர்வுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இதற்கான வசதி உள்ளதோடு, முதலமைச்சரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்திலும் அதிகளவில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    அதேபோல் வடசென்னை வளர்ச்சியில் முதலமைச்சரின் திராவிட மாடல் அரசு உயர்ந்த அக்கறை கொண்டுள்ளது. சென்னை, மதுரை மட்டுமல்லாமல் கோவையிலும் திருச்சியிலும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தது போல, எதிர்காலத்தில் வட சென்னையில் அறிவுசார் மையம் மற்றும் நூலகம் அமைக்கப்படும் என்றார்.

    • புத்தகங்கள் வழங்கும் நடைமுறை இன்னும் 3 மாதங்களில் அமலுக்கு வர உள்ளது.
    • அதிக உறுப்பினர்களை ஈர்க்க, அனைத்து உறுப்பினர்களுக்கும் கட்டணத்தை ரூ.100-க்கு கீழ் குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசியாவிலேயே 2-வது பெரிய நூலகம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த நூலகம் தொடங்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகிறது.

    இதுவரை அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு செல்பவர்கள் அங்கிருந்தே புத்தகங்களை படிக்க முடியும். மேலும் பொது மக்கள் தங்கள் சொந்த நூல்கள் மற்றும் மடிக் கணினியை கொண்டு வந்து படிப்பதற்கான தனிப்பிரிவும் உள்ளது.

    இந்நிலையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டு 13 ஆண்டுகளுக்கு பிறகு புத்தகங்களை வாசகர்களுக்கு வழங்க உள்ளது. இனி அண்ணா நூற்றாண்டு நூலக புத்தகங்களை வாசகர்கள் வீடுகளுக்கு எடுத்து சென்று படிக்கலாம். புத்தகங்கள் வழங்கும் நடைமுறை இன்னும் 3 மாதங்களில் அமலுக்கு வர உள்ளது. 6 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களை கொண்டுள்ள இந்த நூலகம் அதில் இருந்து புத்தகங்களை வாசகர்களுக்கு கொடுக்கிறது. அங்குள்ள பிரதிகளின் எண்ணிக்கை, விலை மற்றும் கிடைக்கும் நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் புத்தகங்கள் பிரிக்கப்பட்டு வாசகர்களுக்கு வழங்கப்படும். மற்றும் புத்தகங்களில் இருந்து 1 லட்சம் புத்தகங்களை மட்டும் உறுப்பினர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    புத்தகங்களை தனித் தனியாக பிரித்த பிறகு ஒவ்வொரு தளத்திலும் உறுப்பினர்களுக்கு வழங்கும் பிரிவு தொடங்கப்படுகிறது.

    இந்த நூலகத்தில் சட்டம், மருத்துவம், பொறியியல், உளவியல், சமூகவியல், மதம், தத்துவம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் முன்னணி வெளியீட்டாளர்களின் புத்தகங்கள் அதிக அளவில் உள்ளன.

    பிரெய்லி பிரிவில் 1500 புத்தகங்கள் உள்ளன. தற்போது உறுப்பினர் கட்டணம் ரூ.2500 ஆகும். ஆண்டு சந்தா கட்டணம் ரூ.100 ஆகும்.

    இந்த நூலகம் குடும்ப உறுப்பினர்களுக்கு சலுகைகளையும், முதியோர்கள் மற்றும் மாணவர்களுக்கு குறைந்த கட்டணங்களையும் விதிக்க உள்ளது. அதிக உறுப்பினர்களை ஈர்க்க, அனைத்து உறுப்பினர்களுக்கும் கட்டணத்தை ரூ.100-க்கு கீழ் குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.

    மேலும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 300 பேர் பார்க்கும் வகையிலான திறந்தவெளி தியேட்டரும் விரைவில் திறக்கப்பட உள்ளது.

    இதில் நாடகம், இசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் நடத்த வசதியாக இருக்கும். விரைவில் கூடுதல் புத்தகங்களையும் அதன் இ-புத்த கங்களின் சேகரிப்பையும் தொடங்க உள்ளது. மேலும் இங்கு கேண்டீன் தொடங்குவதற்கான டெண்டர் பணிகளும் நடந்து வருகிறது.

    • இலக்கிய திருவிழாவில் ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு தமிழ் காற்றை சுவாசித்தனர்.
    • இலக்கிய திருவிழாவின் நிறைவு நாளான 8-ந்தேதி காலையில் தமிழ் சமூகத்தில் பெண்ணியம் என்ற தலைப்பில் கனிமொழி எம்.பி. பேசுகிறார்.

    சென்னை:

    அறிவு சுரங்கமாக திகழ்ந்து கொண்டிருக்கும் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் சென்னை இலக்கிய திருவிழாவால் அங்கு பிரபல எழுத்தாளர்கள் சங்கமித்துள்ளனர்.

    இதனால் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் தமிழ் மணம் கமழ்கிறது. பல்வேறு தலைப்புகளில் பிரபலங்கள் பங்கேற்று பேசி வருகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்த இந்த இலக்கிய திருவிழா 3 நாட்கள் நடைபெறுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் 100 நூல்களை வெளியிட்டு பேசியபோது இன்றைய இளம் தலைமுறையினரிடம் தமிழ் உணர்வை எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தி உள்ளார்.

    இலக்கியம்தான் மனிதனை மேம்படுத்தும் என்றும், சிறு வயதிலேயே மாணவர்களிடம் தமிழ் மற்றும் இலக்கிய ஆர்வத்தை உருவாக்க இத்தகைய நிகழ்ச்சிகள் உறுதுணையாக இருக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். அதற்கேற்ப இலக்கிய திருவிழாவில் பல்வேறு தலைப்புகளில் பிரபல எழுத்தாளர்கள் தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் பங்கேற்று பேசி வருகிறார்கள். முதல் நாளான நேற்று திராவிடத்தின் வருகையும் சமூக மாற்றமும் என்ற தலைப்பில் ஜெயரஞ்சனும், திராவிடமும் தமிழ் சினிமாவும் என்ற தலைப்பில் ராஜனும், தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவை தொடர்பாக காமராசனும் பேசினார்கள்.

    மக்களுக்கான சினிமா ஒரு புரிதல் என்ற தலைப்பில் டைரக்டர் வெற்றி மாறனும், திரைக்கு பின்னால் இலக்கியம் என்கிற தலைப்பில் டைரக்டர் மிஸ்கினும் பல்வேறு கருத்துக்களை எடுத்து கூறினார்கள். காலநிலை மாற்றமும், தமிழ்நாடும் பற்றி சுந்தர்ராஜன் பேசினார்.

    இரண்டாம் நாளான இன்று பாலின சமத்துவம் பற்றி நர்த்தகி நடராஜ், 'நவீன கோடுகள்' தலைப்பில் விஸ்வம், "வரலாறு ஏன் படிக்க வேண்டும்" என வெண்ணிலா, "வட சென்னை மண்ணும், மனிதர்களும்" பற்றி பாக்கியம் சங்கர், இலக்கியமும், சினிமாவும் பற்றி கவிஞர்கள் யுகபாரதி, கபிலன் ஆகியோரும் பல்வேறு கருத்துக்களை அள்ளி தெளித்தனர்.

    திரைப்படமும்... இசையும் பற்றி ஷாஜி, தமிழ் திரையும் தமிழக வரலாறும் பற்றி கடற்கரய், பாரதி காலத்து சென்னை என்கிற தலைப்பில் மணிகண்டன், கலை இலக்கியங்களில் கால இணைப்புகள் என்ற தலைப்பில் ராஜேந்திரன் ஆகியோரும் உரையாற்றினர். இலக்கிய திருவிழாவின் நிறைவு நாளான நாளை (8-ந்தேதி) காலையில் தமிழ் சமூகத்தில் பெண்ணியம் என்ற தலைப்பில் கனிமொழி எம்.பி. பேசுகிறார். அவருடன் கவிதா முரளிதரன் கலந்துரையாடுகிறார்.

    சமூகம் பழகு என்ற தலைப்பில் டைரக்டர் கரு.பழனியப்பன் உரையாற்றுகிறார். நாளை மாணவர்கள் கலை திருவிழாவும் நடைபெறுகிறது. கதை சொல்லி சதீஷ், "கோமாளியின் ஆஹா கதைகள்" பற்றி கதை சொல்கிறார்.

    ஒவ்வொரு நாளும் மாலையில் பல்வேறு கலைகள் தொடர்பாக தொடக்க நாளான நேற்று தண்டரை உமா-ராஜேஸ்வரி சகோதரிகளின் மக்களிசை பாடல்களை பாடி மகிழ்வித்தனர். இன்று மாலையில் ராப் இசை மரப்பாச்சி குழுவினரின் இசை நிகழ்ச்சி மற்றும் சென்னை கலைகுழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    நாளை மாலையில் கரிசல் கிருஷ்ணசாமி, கரிசல் கருணாநிதி, வசந்தி, உடுமலை துரையரசன் ஆகியோரின் மக்கள் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து நாளை மாலை 6 மணிக்கு நிறைவு விழா நடக்கிறது.

    கலை இலக்கிய திருவிழா அண்ணா நூலக வளாகத்தில் 3 அரங்குகளில் நடைபெறுகிறது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு தமிழ் காற்றை சுவாசித்தனர்.

    நிகழ்ச்சியில் சங்க கவுரவ தலைவர் ஆர்.டி.பிரபு, மாநில அமைப்பாளர் சி.சிவகுமார், சங்க ஆலோசகர்கள் ஆர்.மகாதேவன், எல்.சுப்பிரமணி, துணை தலைவர் எம்.செந்தாமரை, பொருளாளர் ஆர்.ஜனனிரமேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் பி.வெள்ளிக் கண்ணன். செயலாளர் எம்.அன்பழகன், எஸ்.ரேணுகாதேவி, பொருளாளர், செயலாளர். பி.பாஸ்கர், அலுவலக செயலாளர் எம்.ரூபன் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

    ×