என் மலர்
நீங்கள் தேடியது "மித்ரன் ஜவஹர்"
- இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'திருச்சிற்றம்பலம்'.
- இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
2008-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மித்ரன் ஜவஹர். அதன்பின் மீண்டும் தனுஷ் நடிப்பில் குட்டி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கினார். இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் இயக்கியிருந்தார். சில தினங்களுக்கு முன்பு வெளியான திருசிற்றம்பலம் படத்தை இயக்கி அனைவரின் கவனத்தை ஈர்த்தார். தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ் ராஜா, ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை திருப்பியுள்ளது. அதில், திருசிற்றம்பலம் படத்திற்கு பிறகு அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் இருக்கிறேன்.வேறு எந்த படமும் பண்ணவில்லை. என் பெயரில் வெளியிலிருந்து வரும் பொய்யான செய்திகளையோ, விளம்பரங்களையோ யாரும் நம்ப வேண்டாம். விரைவில் அடுத்த படத்திற்கான செய்தியை என் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
- மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'.
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இந்த படத்தில் நடிகை நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

திருச்சிற்றம்பலம்
"திருச்சிற்றம்பலம்" திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூலை குவித்தது. இப்படத்தில் தனுஷ் எழுதி பாடியுள்ள 'மேகம் கருக்காதா' பாடல் காதலர்கல் மத்தியில் வரவேற்பை பெற்று அடிக்கடி முணுமுணுக்கும் பாடலாக அமைந்தது.

திருச்சிற்றம்பலம்
இந்நிலையில், இந்த பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படம் நல்ல வரவேற்பை பெற்றது.
- தற்போது மித்ரன் ஜவஹர் புதிய படத்தில் மாதவனுடன் இணைந்துள்ளார்.
2008-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மித்ரன் ஜவஹர். அதன்பின் மீண்டும் தனுஷ் நடிப்பில் குட்டி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கினார். இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் இயக்கியிருந்தார். சில தினங்களுக்கு முன்பு வெளியான திருசிற்றம்பலம் படத்தை இயக்கி அனைவரின் கவனத்தை ஈர்த்தார். தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ் ராஜா, ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

மாதவன்
இந்நிலையில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் தற்போது புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் மூலம் நடிகர் மாதவனுடன் கைகோர்த்துள்ளதாக மித்ரன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மாதவன்-மித்ரன் இணைந்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
After the blockbuster success of Thiruchitrambalam, kicking off my next directorial project starring uber-talented, and fan-favourite @ActorMadhavan. Produced by the acclaimed Mediaone Global Entertainment. Let's Roll! ?@Mediaone_M1 @sharmilamandre
— Mithran R Jawahar (@MithranRJawahar) February 11, 2023
- மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’.
- இப்படம் வசூல் ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இந்த படத்தில் நடிகை நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

திருச்சிற்றம்பலம்
"திருச்சிற்றம்பலம்" திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூலை குவித்தது. இப்படத்தில் தனுஷ் எழுதி பாடியுள்ள 'தாய் கிழவி' பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று அடிக்கடி முணுமுணுக்கும் பாடலாக அமைந்தது.

திருச்சிற்றம்பலம்
இந்நிலையில், 'தாய் கிழவி' பாடல் தற்போது 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
100 Million views and counting! ? Indha song-la irukka andha energy-eh vera! ? #ThaaiKelavi
— Sun Pictures (@sunpictures) February 20, 2023
▶️ https://t.co/8EB1qgAhen@dhanushkraja @anirudhofficial #Bharathiraja @prakashraaj @MithranRJawahar #NithyaMenen #RaashiiKhanna @priya_Bshankar @dancersatz pic.twitter.com/A3VSl6OP6t
- இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அரியவன்’.
- இப்படம் வருகிற மார்ச் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' 'திருச்சிற்றம்பலம்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ரணாலி நடிப்பில் கமர்ஷியல் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் 'அரியவன்'.

அரியவன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா
எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நவீன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன், வேத் சங்கர், கிரி நந்த் ஆகியோர் இசை மற்றும் பாடல் எழுதியுள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள சமீபத்தில் நடைபெற்றது.

அரியவன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பாக்யராஜ் பேசியதாவது, "அரியவன் படம் டிரைலர் நன்றாக உள்ளது எல்லோருக்கும் வாழ்த்துகள். எப்போதும் நம் மனதில் சில பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் பல காலமாக ஒலித்த பாடல் கண்கள் இரண்டால் பாடல். ஜேம்ஸ் வசந்தனின் அந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்தப்படத்திலும் அருமையான பாடல் தந்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள்.
இயக்குனர் மித்ரனுடன் 'உத்தம புத்திரன்' படத்தில் வேலை பார்த்துள்ளேன். மிக நல்ல மனிதர் சாந்தமானவர். அவர் புது முகத்தை வைத்து எடுக்கிறார் என்றால் கண்டிப்பாகக் கதை மிக நல்ல கதையாக இருக்கும் எனும் நம்பிக்கை உள்ளது. புது ஹீரோவை வைத்து தைரியமாகப் படமெடுத்த தயாரிப்பாளர் நவீனுக்கு நன்றி. நாயகனுடைய கண் உயிரோட்டமாக இருக்கிறது. அவர் நல்ல படங்கள் செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள். படத்தில் உழைத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்று பேசினார்.

அரியவன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேசியதாவது, " இப்படத்தில் இரண்டாவது பாடலை நான் இசையமைத்துள்ளேன். இந்தப் பாடல் உருவானதே ஒரு ஆச்சரியம் தான். நான் இருவரைப் பாட வைத்து ஒரு ரஃப் வெர்ஷனாக ஒரு பாடலை உருவாக்கி வைத்தேன். அது நண்பரிடத்தில் இருந்தது. அவர் இப்பாடலை ஒரு நல்ல படத்தில் பயன்படுத்தக் கேட்கிறார்கள் என்றார். யாரெனக் கேட்டேன். இயக்குனர் மித்ரன் ஜவஹர் என்றவுடன் உடனே ஓகே சொல்லிவிட்டேன். அவர் மிகப்பெரிய இயக்குனர் மிக நன்றாகப் பாடலை உருவாக்கியுள்ளார். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்" என்று பேசினார்.
- மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’.
- இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் தற்போதுவரை ரசிகர்களின் பேவரைட்டாக உள்ளது.
இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இந்த படத்தில் நடிகை நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூலை குவித்தது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் உள்ளது. அதிலும், தனுஷ் வரிகளில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியிருந்த தேன்மொழி பாடல் தற்போது வரை அடிக்கடி முணுமுணுக்கும் பாடலாக அமைந்துள்ளது.

இந்நிலையில், இந்த பாடலின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, தேன்மொழி பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது. இந்த
Indha paatuku vibe agadha aale iruka mudiyadhu? #ThenMozhi vibes everywhere! 50M+ views!
— Sun Pictures (@sunpictures) April 8, 2023
▶️ https://t.co/XPQkaRtrsw@dhanushkraja @anirudhofficial @Music_Santhosh #Bharathiraja @prakashraaj @MithranRJawahar #NithyaMenen #RaashiiKhanna @priya_Bshankar #Thiruchitrambalam pic.twitter.com/f1AkvbFY1a
- அதிர்ஷ்டசாலி படத்தை இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார்.
- படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா மேற்கொண்டுள்ளார்.
நடிகர் மாதவன் தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமாவிலும் களமிறங்கி கலக்கி வருகிறார். அந்த வகையில் மாதவன் கடைசியாக சைத்தான் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. அதே சமயம் இவர் தமிழில் ஏற்கனவே டெஸ்ட் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில் தற்போது அதிர்ஷ்டசாலி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் மாதவன்.
இப்படத்தை இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். மித்ரன் ஜவஹர் இதற்கு முன் தனுஷ் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற திரைப்படமான திருசிற்றம்பலம், உத்தம புத்திரன் மற்றும் யாரடி நீ மோகினி போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
மாதவன் இந்த இயக்குனருடன் இணைவது இதுவே முதல்முறையாகும். படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை நாளை காலை 9 மணிக்கு படக்குழு வெளியிடவுள்ளது. இதுக்குறித்து வெளியான போஸ்டரில் மாதவன் தான் ஒரு சாதாரண இருசக்கர வாகனத்தில் இருந்து பெரிய சொகுகுசு ரக காரை வாங்குவதற்கான வளர்ச்சியை பார்ப்பதுபோல் ஃபர்ஸ்ட்லுக் அமைந்துள்ளது. இப்படத்தின் கதையை ஜெயமோகன் எழுதியுள்ளார். படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா மேற்கொண்டுள்ளார்.
அதிர்ஷ்டசாலி திரைப்படம் பிரபல தொழிலதிபரான ஜி.டி நாயுடு வின் வாழ்க்கை கதையை தழுவி உருவாகும் திரைப்படமாகும். இப்படத்தில் சஹர்மிலா மண்ட்ரே, ராதிகா சரத்குமார், மடோனா செபாஸ்டியன், சாய் தன்ஷிகா மற்றும் ஜகன் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை மீடியா ஒன் க்லோப் எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அதிர்ஷ்டசாலி படத்தின் கதையை ஜெயமோகன் எழுதியுள்ளார்.
- யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
நடிகர் மாதவன் தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமாவிலும் களமிறங்கி கலக்கி வருகிறார். அந்த வகையில் மாதவன் கடைசியாக சைத்தான் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அதிர்ஷ்டசாலி எனும் திரைப்படத்தில் மாதவன் நடித்து வருகிறார்.
மித்ரன் ஜவஹர் இதற்கு முன் தனுஷ் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற திரைப்படமான திருசிற்றம்பலம், உத்தம புத்திரன் மற்றும் யாரடி நீ மோகினி போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் கதையை ஜெயமோகன் எழுதியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் ராதிகா சரத்குமார், மடோனா செபாஸ்டியன், சாய் தன்ஷிகா ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை மீடியா ஒன் க்லோப் எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. போஸ்டரில் 2 விதமான கெட்டப்பில் இருக்கும் மாதவனின் புகைப்படம் கவனம் ஈர்த்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.