என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அஜித் ரசிகர்"
- 23 ஆண்டுகளுக்கு பின் 'தீனா' படம் டிஜிட்டல் முறையில் இன்று (மே 1 ) அஜித்குமார் பிறந்த நாளில் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட்டது
- சென்னை காசி தியேட்டரில் தீனா படத்தின் ரீரிலீஸை பேனர் வைத்து கொண்டாடிய அஜித் ரசிகர்கள், ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினார்கள்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2001-ல் வெளிவந்த படம் 'தீனா'.இப்படத்தில் அஜித்குமார், லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் இணைந்து நடித்தனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்தார். இந்த படத்திற்கு பின் அஜித்திற்கு 'தல' என்ற பட்டம் பிரபலமானது.
இந்நிலையில் 23 ஆண்டுகளுக்கு பின் 'தீனா' படம் டிஜிட்டல் முறையில் இன்று (மே 1 ) அஜித்குமார் பிறந்த நாளில் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் இன்று 'தீனா' படம் ஓடிக்கொண்டு இருந்தது.
அப்போது ரசிகர்கள் மத்தாப்பு மற்றும் சரவெடி பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியில் துள்ளல் ஆட்டம் போட்டனர். இதனால் தியேட்டரில் பட்டாசு தீப்பொறி புகை மூட்டம் சூழ்ந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது இணைய தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதே போல், சென்னை காசி தியேட்டரில் தீனா படத்தின் ரீரிலீஸை பேனர் வைத்து கொண்டாடிய அஜித் ரசிகர்கள், ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினார்கள். அஜித் ரசிகர் ஒருவர் அதே தியேட்டரில் வைக்கப்பட்டு இருந்த கில்லி படத்தின் பேனரை கிழித்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது.
இந்நிலையில், கில்லி பட பேனரைக் கிழித்த அஜித் ரசிகர் எபினேஷ் என்பவரை போலீஸ் கைது செய்துள்ளது. பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் எம்.ஜி.ஆர்.நகர் போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அஜித் நடித்த துணிவு திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது.
- அப்படத்தின் கொண்டாட்டத்தின் போது சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த 19 வயது ஆன பரத்குமார் உயிரிழந்தார்.
அஜித் நடித்த துணிவு திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. அப்படத்தின் முதல் நாள் சிறப்பு காட்சி காண இரவு முதலே ரசிகர்கள் திரையரங்குகளை சூழ்ந்து கொண்டாடினர். அப்போது சென்னையில் ரோகினி திரையரங்கில் துணிவு படம் பார்க்க வந்த சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த 19 வயது ஆன பரத்குமார் என்ற அஜித் ரசிகர் ஒருவர் திரையரங்கின் முன்பு சாலையில் சென்ற லாரி மீது ஏறி நின்று நடனமாடியபோது கீழே விழுந்து உயிரிழந்தார்.
இந்நிலையில் உயிரிழந்த அஜித் ரசிகர் பரத்குமாரின் குடும்பத்திற்கு ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரசிகர் என்ற வகையில் நாங்கள் உதவி செய்துள்ளோம் என ரஜினி ரசிகர் மன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
- உயிரிழந்த அஜித் ரசிகர் சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த 19 வயது ஆன பரத்குமார் என தெரியவந்துள்ளது.
- விபத்து குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. திரைப்படத்தை காண நேற்று இரவு முதலே ரசிகர்கள் திரையரங்குகளை சூழ்ந்து கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் ரோகினி திரையரங்கில் துணிவு படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் ஒருவர் திரையரங்கின் முன்பு சாலையில் சென்ற லாரி மீது ஏறி நின்று நடனமாடியபோது கீழே விழுந்து உயிரிழந்தார்.
முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த அஜித் ரசிகர் சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த 19 வயது ஆன பரத்குமார் என தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்