search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மில்க் ஷேக்"

    • கேழ்வரகில் அரிசியைவிட குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் அதிகளவு நார்ச்சத்து உள்ளது.
    • கேழ்வரகில் அதிக அளவில் புரதம் உள்ளது.

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு – 50 கிராம்

    பாதாம், முந்திரி, திராட்சை (ஊற வைத்தது) – தலா 4

    பேரீச்சை – 5

    காய்ச்சியப் பால் – 200 மி.கி

    ஏலப்பொடி – 1 தேக்கரண்டி

    நாட்டு சர்க்கரை – சுவைக்கேற்ப

    செய்முறை:

    ஊற வைத்து தோல் நீக்கிய பாதாம், முந்திரி, திராட்சை, பேரீச்சையை சிறிது பால் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    முதல்நாள் இரவில் ஊற வைத்த கேழ்வரகை நீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். சக்கையை மீண்டும் சிறிது நீர் விட்டு அரைத்து வடிக்கட்டவும். இப்போது இரண்டு கேழ்வரகு பாலையும் ஒன்றாக சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் காய்ச்சவும்.

    அதனுடன் அரைத்த பாதாம் விழுது, மீதம் உள்ள பால், ஏலப்பொடி சேர்த்து மேலும் சிறிது நேரம் காய்ச்சி இறக்கவும்.

    இப்போது நீங்கள் எதிர்பார்த்த சத்தான மற்றும் ஆரோக்கியமான கேழ்வரகு டிரை ஃப்ரூட்ஸ் மில்க் ஷேக் தயார்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு சத்தான பானங்களை வீட்டிலேயே செய்துகொடுக்கலாம்.
    • இந்த மில்க் ஷேக் உடலுக்கு புத்துணர்ச்சியை தரும்.

    தேவையான பொருட்கள்

    வாழைப்பழம் - 2

    பேரீச்சம் பழம் - 10

    பாதாம் - 20

    பிஸ்தா - சிறிதளவு

    முழு கொழுப்புள்ள பால் - 1/2 லிட்டர்

    சர்க்கரை - 2 தேக்கரண்டி

    வெண்ணிலா எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)

    ஐஸ் கட்டிகள்

    குங்குமப்பூ - அலங்கரிக்க

    செய்முறை

    * வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * பேரீச்சம் பழத்தை விதை நீக்கி எடுத்துக்கொள்ளவும்.

    * பாதாமை ஊறவைத்து தோல் உரித்து எடுத்துக்கொள்ளவும்.

    * பிஸ்தா, 8 பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மிக்ஸி ஜாரில் நறுக்கிய வாழைப்பழம், பேரீச்சம் பழம், பாதாம் - 12, சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ், ஐஸ் கட்டி, பால் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

    * கண்ணாடி கப்பில் ஊற்றி அதன் மேல் நறுக்கிய பாதாம், பிஸ்தா மற்றும் குங்குமப்பூ தூவி அலங்கரித்து பரிமாறவும்.

    * பனானா பேரீச்சம் பழ மில்க் ஷேக் தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு குல்ஃபி என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இந்த குல்ஃபி ஷேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    தயாரித்து வைத்திருக்கும் குல்ஃபி - 2 கப்

    கொழுப்பு நீக்காத பால் - 1 கப் (காய்ச்சி ஆறவைத்தது)

    சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

    முந்திரி - 1 டீஸ்பூன் (பொடிதாக நறுக்கியது)

    குங்குமப்பூ - ¼ டீஸ்பூன்

    செய்முறை:

    பிளண்டரில் பால், சர்க்கரை, ஒரு கப் குல்ஃபி ஆகியவற்றை போட்டு நுரைக்கும் வரை பிளண்ட் செய்யவும்.

    பின்னர் அதை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே துண்டுகளாக வெட்டிய ஒரு கப் குல்ஃபியை போடவும்.

    பின்பு அதன் மேல் முந்திரி மற்றும் குங்குமப்பூவைத் தூவி சில்லென்று பரிமாறவும்.

    இப்போது சூப்பரான குளுகுளு குல்ஃபி ஷேக் ரெடி

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பாதாமில் கால்சியம் அதிகம் இருக்கிறது.
    • இந்த ரெசிபியை 10 நிமிடத்தில் செய்து விடலாம்.

    தேவையான பொருட்கள் :

    பாதாம் பருப்பு - 100 கிராம்,

    பால் (காய்ச்சி ஆறவிடவும்) - அரை லிட்டர்,

    சர்க்கரை - 3 டீஸ்பூன்,

    வெனிலா ஐஸ்கிரீம் - ஒரு கப்.

    செய்முறை :

    பாதாமை முதல் நாளிரவே ஊற வைத்து, மறுநாள் அதன் தோலை உரித்து, மிக்ஸியில் கொஞ்சம் பால் சேர்த்து விழுதாக அரைத்து, சர்க்கரை சேர்க்கவும்.

    இதனுடன் ஒரு கப் வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி, மீதமுள்ள பாலுடன் சேர்த்துப் பரிமாறவும்.

    இப்போது சூப்பரான பாதாம் மில்க் ஷேக் ரெடி.

    • பப்பாளி பழத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • இந்த மில்க் ஷேக் செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள் :

    பழுத்த பப்பாளிப்பழம் - 1/2

    தேங்காய்ப் பால் - 1 கப்

    வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை - 1/4 கப்

    ஏலக்காய் தூள் - சிறிதளவு

    செய்முறை :

    பப்பாளி பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    பப்பாளிப்பழத்துடன் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, தேங்காய்ப் பால் ஊற்றி, ஏலக்காய் தூள் சேர்த்து லேசாக மிக்ஸியில் அடித்து, ஃபிரிட்ஜில் வைக்கவும்.

    நன்கு குளிர்ந்தவுடன் பரிமாறவும்.

    சூப்பரான பப்பாளிப்பழ மில்க் ஷேக் ரெடி.

    ×