என் மலர்
நீங்கள் தேடியது "மரியான் பயோடெக்"
- மரியான் பயோடெக் நிறுவனத்தின் டோக்-1 மேக்ஸ் மற்றும் அம்ப்ரோனால் ஆகிய இரண்டு இருமல் மருந்துகளையும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வு குழு பரிசோதித்தது.
- இரண்டு இருமல் மருந்துகளிலும் அளவுக்கு அதிகமான எத்திலீன் கிளைக்கால் ரசாயனம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெனீவா:
உஸ்பெகிஸ்தான் நாட்டில் இந்தியாவை சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனத்தின் இருமல் மருந்தை எடுத்து கொண்ட 18 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டியது. அந்த மருந்தில் எத்திலீன் கிளைக்கால் ரசாயனம் இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
இதையடுத்து உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் செயல்படும் மரியான் பயோடெக் நிறுவனத்தின் டோக்-1 மேக்ஸ் மற்றும் அம்ப்ரோனால் ஆகிய இரண்டு இருமல் மருந்துகளையும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வு குழு பரிசோதித்தது. இதில் இரண்டு இருமல் மருந்துகளிலும் அளவுக்கு அதிகமான எத்திலீன் கிளைக்கால் ரசாயனம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த மருந்துகள் குழந்தைகளுக்கு பயன்படுத்துவதற்கு உகந்ததல்ல என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த மருந்துகளை தரமற்றது என்று அறிவித்துள்ளது. எனவே இந்த இருமல் மருந்துகளின் பயன்பாட்டை கைவிடுமாறு உலக நாடுகளை கேட்டுக்கெண்டுள்ளது. ஏற்கனவே மரியான் பயோடெக் நிறுவனத்தின் அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.