என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படகு தீவிபத்து"

    • பன்டாக்கா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென படகில் தீ விபத்து ஏற்பட்டது.
    • பயணிகள் உயிர் தப்பிப்பதற்காக படகில் இருந்து அடுத்தடுத்து ஆற்றில் குதித்தனர்.

    கின்சாசா:

    மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஆறுகளில் படகு போக்குவரத்து மக்களின் முக்கிய போக்குவரத்தாக இருக்கிறது.

    இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் வடமேற்கு காங்கோவில் உள்ள மடான் குமு துறைமுக பகுதியில் இருந்து போலோம்பா பகுதிக்கு ஒரு மோட்டார் படகு புறப்பட்டது. அந்தப் படகில் சுமார் 400 பேர் பயணம் செய்தனர். பன்டாக்கா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென படகில் தீ விபத்து ஏற்பட்டது.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உயிர் தப்பிப்பதற்காக படகில் இருந்து அடுத்தடுத்து ஆற்றில் குதித்து உள்ளனர். அப்போது துரதிருஷ்டவசமாக படகும் ஆற்றில் கவிழ்ந்தது.

    இந்தக் கோர விபத்தில் படகில் இருந்து 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். சுமார் 100 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். காணாமல் போன மற்றவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர்.

    படகு தீப்பிடித்த விபத்துக்கு பெண் ஒருவர் சமையல் செய்ததே காரணம் என கூறப்படுகிறது.

    • படகில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 2 பேரை கடற்படையினர் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
    • 2 பேர் பலத்த காயம் அடைந்ததால் போர்பந்தரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    போர்பந்தர்:

    குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே அரபிக்கடலில் மீன்பிடி படகு சென்று கொண்டு இருந்தது. திடீரென அந்த படகில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென படகு முழுவதும் பரவியது.

    இது பற்றி அறிந்ததும் இந்திய கடற்படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். படகில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 2 பேரை கடற்படையினர் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்கள் பலத்த காயம் அடைந்ததால் போர்பந்தரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் அவர்களுடன் படகில் சென்ற 5 பேர் மாயமானார்கள். இதையடுத்து கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணியில் இறங்கினார்கள். அப்போது கடலில் தத்தளித்து கொண்டு இருந்த 5 பேரையும் அவர்கள் பத்திரமாக மீட்டனர். தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

    ×