என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சன்பிக்சர்ஸ்"

    • தனுஷ் நடிப்பில் ‘வாத்தி’ திரைப்படம் அடுத்த மாதம் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இவரின் 50-வது படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

    பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இப்படம் அடுத்த மாதம் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    தனுஷ்

    இந்நிலையில், தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் விரைவில் அப்டேட்கள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    தனுஷ்  பட போஸ்டர்

    சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து மீண்டும் சன்பிக்சர்ஸ் உடன் இணைந்துள்ளார் தனுஷ்.


    • தனுஷ் நடிப்பில் ‘வாத்தி’ திரைப்படம் அடுத்த மாதம் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

    தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படம் அடுத்த மாதம் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

     

    தனுஷ் 50

    தனுஷ் 50


    தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

     

    தனுஷ்

    தனுஷ்

    இந்நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாகவும், விஷ்ணு விஷால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

    இதற்கு முன்பு தனுஷ் பா.பாண்டி படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×