என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நுகர்வோர் கோர்ட்"
- உணவு பாதுகாப்பு துறையில் பீர்பாட்டில்களை கொடுத்து சோதனை செய்தார்.
- தனியார் மதுபான விற்பனையாளர், தயாரிப்பு நிறுவனத்தின் மீது நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தார்.
புதுச்சேரி:
புதுவை வேல்ராம்பட்டை சேர்ந்தவர் பீமாராவ். இவர் கடந்த 2021-ம் ஆண்டு லாஸ்பேட்டை கொட்டுப் பாளையத்தில் உள்ள தனியார் மதுக்கடையில் 6 பீர் பாட்டில் வாங்கினார்.
அதில் 2 பாட்டில் காலாவதியாக இருந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறையில் பீர்பாட்டில்களை கொடுத்து சோதனை செய்தார்.
சோதனை முடிவில் புதுவை மாவட்ட நுகர்வோர் தீர்வு ஆணையத்தில் மனு தாக்கல் செய்து, தனியார் மதுபான விற்பனையாளர், தயாரிப்பு நிறுவனத்தின் மீது நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு அமர்வு தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் சுவிதா, ஆறுமுகம் ஆகியோர், மதுபான கடை ரூ.75 ஆயிரத்து 240 இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
- பிஸ்கெட் சாப்பிட்டவருக்கு வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
- வடமலை தனது வக்கீல் சரவணன் மூலம் புதுவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி அருகேயுள்ள ஆண்டியார்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வடமலை (48). பால் வியாபாரி.
இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரலில் தனது சகோதரர் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு அப்பகுதியில் உள்ள கடையில் பிரபல நிறுவனத்தின் 5 பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கினார்.
அதைப் பிரித்து சாப்பிட்டபோது பிஸ்கெட் முழுவதும் தலைமுடி இருந்துள்ளது. இதனால் பிறந்தநாள் விழா பாதிக்கப்பட்டது. அதை சாப்பிட்டவருக்கு வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து திருபுவனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறப்பட்டது. பிஸ்கெட்டில் தலைமுடி இருந்தது குறித்து கடை, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை.
இதை தொடர்ந்து வடமலை தனது வக்கீல் சரவணன் மூலம் புதுவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணை நடந்து முடிந்த நிலையில் கடந்த 5-ந் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.
தீர்ப்பின் நகல் வழக்கு தொடுத்த வடமலைக்கு நேற்று வக்கீல் சரவணன் மூலம் அளிக்கப்பட்டது. அதன்படி பிஸ்கெட்டில் தலைமுடி இருந்தநிலையில், அதை வாங்கிய வடமலைக்கு சம்பந்தப்பட்ட பிஸ்கெட் நிறுவனம் ரூ.15 ஆயிரம் இழப்பீடும், வழக்கு செலவாக ரூ.5 ஆயிரம் வழங்கவும் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி முத்துவேல் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வடமலைக்கு ரூ.20 மதிப்புள்ள பிஸ்கெட் பாக்கெட்டும் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட் நீதிபதி அறிவுறுத்தினார்
- தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் உறுப்பினர்களுக்கும் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சியை வழங்க ஒவ்வொரு கூட்டுறவு நிறுவனங்களும் முன்வர வேண்டும்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டுறவு துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சியில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் கலந்து கொண்டு பேசியது: தற்போது இந்தியா முழுவதும் 5 லட்சம் கூட்டுறவு அமைப்புகளில் 21 கோடி மக்கள் உறுப்பினர்களாக உள்ளார்கள்.
குறைந்த விலையில் பொருள்களையும், சேவைகளையும் நுகர்வோர் பெறுவதற்காக தனியார் வணிக நிறுவனங்களைப் போல விற்பனை மற்றும் சேவை வழங்கும் பணிகளை கூட்டுறவு நிறுவனங்கள் வழங்குகின்றன. தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் பெருநகரங்கள் முதல் கிராமங்கள் வரை செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் உறுப்பினர்களுக்கும் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சியை வழங்க ஒவ்வொரு கூட்டுறவு நிறுவனங்களும் முன்வர வேண்டும்.
பிரச்சனை ஏற்படும் போது பாதிக்கப்படும் நுகர்வோர் மாவட்டத்திலுள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுகுவதற்கு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் உரிமை வழங்கியுள்ளது. கூட்டுறவு துறையில் செயல்படும் குடிமைப்பொருள் அங்காடிகள், விற்பனை நிலையங்கள், கடன் சங்கங்கள், வேளாண்மை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் கூட்டுறவு கூட்டமைப்புகள் அனைத்தும் நுகர்வோர் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட வேண்டும்.
கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, நியாயமற்ற வர்த்தக நடைமுறையை பின்பற்றுவது, நியாயமற்ற ஒப்பந்தத்தை திணிப்பது போன்ற நுகர்வோருக்கு எதிரான எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாது என்றார். பயிற்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி தலைமை வகித்தார். திருசெங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க மேலாண்மை இயக்குனர் விஜய்சக்தி பங்கேற்று பேசினார். முன்னதாக கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் ஜெயராமன் வரவேற்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்