என் மலர்
நீங்கள் தேடியது "ஒபலி என் கிருஷ்ண"
- சிம்பு தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’.
- இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சிம்பு தற்போது 'பத்து தல', 'கொரோனா குமார்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். பத்து தல படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பத்து தல
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை படக்குழு அறிவித்திருந்தனர். இதையடுத்து கவுதம் கார்த்திக்கும் பிரியா பவானி சங்கரும் தனது டப்பிங் பணிகளை முடித்ததாக தெரிவித்திருந்தார்கள்.

பத்து தல போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு நாளை மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
You asked and we've heard you! Gear up for the #PathuThalaFirstSingle announcement arriving tomorrow @ 5.04PM! ❤?#PathuThala #Atman #SilambarasanTR #AGR #PathuThalaFromMarch30
— Studio Green (@StudioGreen2) January 30, 2023
Starring : @SilambarasanTR_ @Gautham_Karthik @priya_Bshankar
An @arrahman Musical pic.twitter.com/MwZy4osgNZ