search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து கோவில் சேதம்"

    • மிசிகாகாவில் உள்ள ராமர் கோவில் இந்தியாவுக்கு எதிரானவர்களால் சிதைக்கப்பட்டதை இந்திய தூதரகம் கடுமையாக கண்டிக்கிறது.
    • கடந்த ஜனவரி மாதம் பிராம்ப்டனில் உள்ள இந்து கோவிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    கனடாவின் மிசிகாகா மாகாணத்தில் ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சுவரில் பிரதமர் மோடி மற்றும் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை மர்ம நபர்கள் எழுதி இருந்தனர்.

    இச்சம்பவத்துக்கு கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தூதரகம் டுவிட்டரில் கூறும்போது, மிசிகாகாவில் உள்ள ராமர் கோவில் இந்தியாவுக்கு எதிரானவர்களால் சிதைக்கப்பட்டதை கடுமையாக கண்டிக்கிறோம். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கனடா அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

    கடந்த ஜனவரி மாதம் பிராம்ப்டனில் உள்ள இந்து கோவிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கும் கோவிலை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.
    • கோவில் சேதப்படுத்தப்பட்ட செயலுக்கு டொரோண்டாவில் உள்ள இந்திய துணை தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    ஒட்டாவா:

    கனடாவில் உள்ள பிராம்ப்டனில் கவுரிசங்கர் மந்திர் என்று அழைக்கப்படும் ஒரு பிரபலமான இந்து கோவில் உள்ளது.

    இந்திய பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கும் இந்த கோவிலை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இந்த செயலுக்கு டொரோண்டாவில் உள்ள இந்திய துணை தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக துணை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனடாவில் வசிக்கும் இந்திய சமூகத்தினருக்கு இந்த செயலானது கடும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. வெறுக்கத்தக்க காழ்ப்புணர்ச்சி காரணமாக செய்யப்பட்ட இந்த செயல் இந்திய சமூகத்தினரின் உணர்வுகளை ஆழமாக காயப்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக நாங்கள் கனடா அதிகாரிகளிடம் எங்களின் கவலைகளை தெரிவித்துள்ளோம் என கூறப்பட்டுள்ளது.

    காளிஸ்தான் ஆதரவாளர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக கனடா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பிராம்ப்டனில் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இதுவரை 3 முறை கோவில்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×