என் மலர்
நீங்கள் தேடியது "சாய் பிரனீத்"
- தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் நேற்று இரண்டாவது சுற்று போட்டி நடந்தது.
- இதில் இந்தியாவின் சாய் பிரனீத் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
பாங்காங்:
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த காலிறுதிக்கு முந்திய சுற்றில் இந்தியாவின் சாய் பிரனீத், தென் கொரியாவின் ஜின் ஜியோனை எதிர்கொண்டார்.
முதல் செட்டை சாய் பிரனீத் கைப்பற்றினார். இரண்டாவது செட்டை ஜியோன் வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்டு ஆடிய சாய் வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை தனதாக்கினார்.
இறுதியில், சாய் பிரனீத் 24-22, 7-22, 22-20 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
- தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் நேற்று காலிறுதி போட்டி நடந்தது.
- இதில் இந்தியாவின் சாய் பிரனீத் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
பாங்காங்:
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த காலிறுதி சுற்றில் இந்தியாவின் சாய் பிரனீத், சீனாவின் லீ ஷீ பெங்குடன் மோதினார்.
முதல் செட்டை சீன வீரர் கைப்பற்றினார். இரண்டாவது செட்டை சாய் பிரனீத் வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை லீ ஷீ பெங் தனதாக்கினார்.
இறுதியில், சீன வீரர் 21-17, 21-23, 21-18 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த தோல்வியின் மூலம் சாய் பிரனீத் தொடரில் இருந்து வெளியேறினார்.