என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காண்டாமிருகம்"

    • அசாமில் காண்டாமிருகம் தாக்கியதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
    • காண்டாமிருகம் தாக்கி பொதுமக்கள் காயமடைந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தின் கோலகட் மாவட்டத்தில் கஜிரங்கா தேசிய பூங்கா செயல்பட்டு வருகிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன் பூங்காவில் உள்ள காண்டாமிருகம் ஒன்று வெளியேறியது. மோஹிமா காவோன் என்ற இடத்திற்கு வந்த காண்டாமிருகம் அங்கிருந்த கூட்டத்தினரை தாக்கியது. இதனால் அச்சமடைந்த அவர்கள் அலறியபடி ஓடினர்.

    காண்டாமிருகம் தாக்கியதில் படுகாயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் வனத்துறை அலுவலர்களும் அடங்குவர்.

    தகவலறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று காட்டுப்பகுதியில் தஞ்சமடைந்துள்ள காண்டாமிருகத்தைத் தேடி வருகின்றனர்.

    காண்டாமிருகம் தாக்கியதில் பொதுமக்கள் காயமடைந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • காண்டாமிருகம் தாக்கியதில் காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அசாம் மாநிலத்தின் மோரிகான் பகுதியில் போபிடோரா வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இப்பகுதியில் பைக்கில் வந்த ஒருவரை காண்டாமிருகம் துரத்திச் சென்று கொடூரமாக தாக்கியது.

    இதனால் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உயிரிழந்த நபர் கம்ரூப் மாவட்டத்தை சேர்ந்த சதாம் உசேன் (37) என போலீசார் தெரிவித்தனர்.

    வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து காண்டாமிருகம் எப்படி வெளியே வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் தாயகம் அசாம்
    • சுற்றுலாப் பயணிகளின் ஜீப்பை நோக்கி மற்றொரு காண்டாமிருகம் ஆக்ரோஷமாக வருவதைக் காண்கிறோம்.

    ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் தாயகமான அசாமில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்கா இயற்கை ஆர்வலர்களுக்கு விருப்பமான இடமாகும்.

    இங்கு ஜீப் வண்டி சஃபாரி சவாரி மூலம் பார்வையாளர்களுக்கு ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் மற்றும் பிற விலங்குகளைப் பார்க்கும் வாய்ப்பை கிடைக்கிறது. வழக்கான இந்த சஃபாரி ஒரு தாய் மற்றும் அவரது மகளுக்கு கொடுங்கனவாக மாறியுள்ளது.

    இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவில், ஆக்ரோஷத்துடன் காண்டாமிருகங்கள் வந்துகொண்டிருக்கின்றன. பார்வையாளர்களை ஏற்றிக்கொண்டு மூன்று ஜீப் வண்டிகள் அங்கு வருகிறது.

    அதில் ஒரு ஜீப் வலதுபுறம் திரும்பும்போது உள்ளே ஒரு தாய் தனது மகளுடன்  சேர்ந்து தரையில் விழுகிறார்.  தாய் உதவி கேட்டு கூப்பாடுபோடத் தொடங்கினார்.

    அந்த நேரத்தில், சுற்றுலாப் பயணிகளின் ஜீப்பை நோக்கி மற்றொரு காண்டாமிருகம் ஆக்ரோஷமாக வருவதைக் காண்கிறோம்.

    பதறியடித்த தாய் சுதாரித்துக்கொண்டு மகளுடன் வேகமாக ஓடி ஜீப்பில் ஏறி ஆக்ரோஷத்துடன் நெருங்கிய காண்டாமிருகத்திடம் இருந்து அதிஷ்டவசமாக உயிர்தப்பினார். மற்றொரு ஜீப்பில் இருந்த சுற்றுலாப்பயணி இந்த பயங்கர சம்பவத்தை கேமராவில் படம்பிடித்துள்ளார். இந்த இந்த சம்பவம் காசிரங்கா தேசிய பூங்காவின் பகோரி மலைத்தொடரில் நடந்துள்ளது.

    ×