என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கழிவுநீர் சுத்திகரிப்பு மையம்"
- பயிற்சி கல்லூரி ஐ.ஜி. அஜய் பரதன் ரிப்பன் வெட்டி சுத்திகரிப்பு மையத்தை திறந்து வைத்தார்
- சுத்திக்கரிக்கப்படும் தண்ணீரை சி.ஆர்.பி.எப்.வளாகத்தில் உள்ள மரம், செடிகள், பூங்காக்களுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளனர்
கவுண்டம்பாளையம்,
கோவை துடியலூர் அடுத்த ராக்கிபாளையத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரி சுமார் 400 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கியது. இங்கு 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அவர்களின் சொந்த உபயோகத்துக்காக தினமும் சுமார் 4 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதனால் அங்கு உள்ள வளாகத்தில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசியது.
இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு பொல்யூசன் கண்ட்ரோல் போர்டு மற்றும் டி.ஆர்.டி.ஒ. அனுமதி பெற்று நிறுவனம் ஆகியவை சுமார் ரூ.2.16 கோடி மதிப்பில் கழிவு நீரை சுத்தப்படுத்தும் பயோ சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைத்து உள்ளது. இதன் மூலம் அந்த பகுதியில் துர்நாற்றம் துளியும் இன்றி 100 சதவிகிதம் கழிவு நீர் சுத்திகரிப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துடியலூர் சி.ஆர்.பி.எப். போலீஸ் பயிற்சி கல்லூரி மைதானத்தில் அதிநவீன சுத்திகரிப்பு மையம் திறப்பு விழா நடந்தது.
அப்போது பயிற்சி கல்லூரி ஐ.ஜி. அஜய் பரதன் ரிப்பன் வெட்டி சுத்திகரிப்பு மையத்தை திறந்து வைத்தார். அதன்பிறகு அவர் சுத்திகரிப்பு மையத்தை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் மதுரை சி.பி.டபுள்யூ. மூத்த பொறியாளர் பவன் குமார் குப்தா, மேக் நிறுவனர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர், சி.ஆர்.பி.எப்.கமாண்டர் ராஜேஷ் குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், துடியலூர் சுத்திகரிப்பு மையம் வாயிலாக ஒரு நாளைக்கு 400 கிலோ லிட்டர் அளவில் தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது. அந்த தண்ணீரை சி.ஆர்.பி.எப்.வளாகத்தில் உள்ள மரம், செடிகள், பூங்காக்களுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளனர்.
- கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்பதே எங்களின் இறுதியான நிலைபாடு என்று கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
- சம்பந்தப்பட்ட இடத்தை சுற்றி கம்பிவேலி அமைத்து மாநகராட்சி வசம் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டுக்கு உட்பட்ட காயிதே மில்லத்நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயத்த பணிகள் தொடங்கியதால் காயிதே மில்லத்நகர் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் எதிர்ப்பு கூட்டமைப்பினர் சார்பில் 45-வது வார்டில் ஒருநாள் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது. மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) மாநகராட்சி அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் காயிதேமில்லத்நகர் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாநகரில் 3 திட்டங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தும்போது அதை பார்த்து உங்களிடம் கருத்து கேட்டு உங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அந்த பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படாது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். தங்கள் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க வேண்டாம். வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்பதே எங்களின் இறுதியான நிலைபாடு என்று கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும், தற்போதைய நிலையில் அங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படாது என்றும் அதிகாரிகள் உறுதி அளித்ததாக கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட இடத்தை சுற்றி கம்பிவேலி அமைத்து மாநகராட்சி வசம் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
- இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டு கோம்பை தோட்டம் பகுதியில் திருப்பூர் மாநகராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். நேற்று வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தநிலையில் இன்று காலை கழிவுநீர் சுத்திகரிப்பு மைய எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் நிருபர்களிடம் கூறியதாவது :- இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு தங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வரும் நிலையில், மேயர், எம்.எல்.ஏ., அமைச்சர் என 3 பேரும் தனித்தனியாக செயல்படுகின்றனர்.
நாளை மாநகராட்சி மேயர்., எம்.எல்.ஏ, ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை என்றால் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்களை திரட்டி 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாநகராட்சி அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.
- கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டால் கோம்பைதோட்டம் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும்.
- மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ., உள்ளிட்டோரிடம் கோரிக்கை விடுத்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டு கோம்பை தோட்டம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு மாநகராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டால் கோம்பைதோட்டம் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும். வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறிவிடும்.
எனவே கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கக்கூடாது என்றனர். மேலும் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ., உள்ளிட்டோரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இதனை கண்டித்து இன்று கோம்பைதோட்டம் பகுதி பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- வளாகத்தை சுற்றிலும் தற்போது சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெறுகிறது.
- 7.2 கோடி லிட்டர் அளவிலான கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படும்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சியில் நகரின் மையப்பகுதிகள் மட்டும் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.கடந்த 2007ல் தொடங்கிய இத்திட்டம் 2009ல் பயன்பாட்டுக்கு வந்தது. புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகத்தின் கட்டுப்பாட்டில் இதற்கான சுத்திகரிப்பு மையம் எஸ்.பெரியபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.
இத்திட்டத்தில் ஏறத்தாழ 16 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்ரூத் திட்டத்தில், மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகள் மற்றும் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.இதற்காக ஆண்டிபாளையம் மற்றும் எஸ்.பெரியபாளையம் ஆகிய பகுதிகளில் மேலும் இரு சுத்திகரிப்பு மையம் அமைக்கும் வகையில் பணி திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவற்றின் மூலம் 7.2 கோடி லிட்டர் அளவிலான கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படும். இத்திட்டத்தில் ஏறத்தாழ 75 ஆயிரம் பாதாள சாக்கடை குழாய் இணைப்பு வழங்கப்படவுள்ளது.அவ்வகையில் இதற்கான குழாய்கள் பதிப்பு பணி மாநகராட்சி பகுதியில் பெருமளவு நிறைவடைந்துள்ளது.இத்திட்டத்தில் ஆண்டிபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு மையம் கட்டுமானம் மற்றும் எந்திரங்கள் பொருத்தப்பட்டு இயக்கத்துக்கு தயார் நிலையில் உள்ளது. தற்போது இந்த வளாகத்தை சுற்றிலும் தற்போது சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்