search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் காயிதே மில்லத் நகரில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படாது - கலெக்டர் தலைமையிலான பேச்சுவார்த்தையில் முடிவு
    X

    கோப்புபடம்

    திருப்பூர் காயிதே மில்லத் நகரில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படாது - கலெக்டர் தலைமையிலான பேச்சுவார்த்தையில் முடிவு

    • கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்பதே எங்களின் இறுதியான நிலைபாடு என்று கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
    • சம்பந்தப்பட்ட இடத்தை சுற்றி கம்பிவேலி அமைத்து மாநகராட்சி வசம் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டுக்கு உட்பட்ட காயிதே மில்லத்நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயத்த பணிகள் தொடங்கியதால் காயிதே மில்லத்நகர் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் எதிர்ப்பு கூட்டமைப்பினர் சார்பில் 45-வது வார்டில் ஒருநாள் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது. மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) மாநகராட்சி அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் காயிதேமில்லத்நகர் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மாநகரில் 3 திட்டங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தும்போது அதை பார்த்து உங்களிடம் கருத்து கேட்டு உங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அந்த பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படாது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். தங்கள் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க வேண்டாம். வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்பதே எங்களின் இறுதியான நிலைபாடு என்று கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும், தற்போதைய நிலையில் அங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படாது என்றும் அதிகாரிகள் உறுதி அளித்ததாக கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட இடத்தை சுற்றி கம்பிவேலி அமைத்து மாநகராட்சி வசம் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×