search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உன்னி முகுந்தன்"

    • வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளது.
    • படம் திரையரங்குகளில் ஓடி இதுவரை 55 கோடி ரூபாய்க்கு மேல் வசூலளித்துள்ளது

    இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் என பல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் நடித்திருக்கும் கருடன் அதிரடி திரில்லர் திரைப்படமாக அமைந்தது. இப்படத்தினை தயாரிப்பாளர் கே குமார் மாற்றம் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    குடும்பங்களோடு ரசிக்கும் வகையில் அதிரடி - திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள 'கருடன்' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆர்தர் எ வில்சன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ ராகவ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி, ரோஷ்ணி ஹரிப்ரியன், ரேவதி சர்மா, மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    கருடன் திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. திரைக்கதை, வசனங்கள், நடிப்பு என இப்படம் பெரிய அளவில் ரசிகர்களின் மனதை வென்று புகழ் பெற்றுள்ளது. கிராமத்து திரைக்கதையில் வெளியான இப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்று இந்த ஆண்டின் வெற்றி பட வரிசையில் இணைந்துள்ளது.

    விடுதலை படத்தின் மூலம் நாயகனாக நடிக்க தொடங்கிய நகைச்சுவை நடிகர் சூரி, இப்படத்தில் நாயகனாக நடித்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். இப்படத்தில் சூரியின் நடிப்பை பலரும் பாராட்டினர். நகைச்சுவை நடிகராக நடித்துக் கொண்டு இருந்தவர். விடுதலை படத்திற்கு பிறகு முற்றிலும் மாறுப்பட்ட சூரியாக திரையில் வந்தார். அதற்கடுத்து கருடன் படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக களம் இறங்கி மக்கள் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.

    படம் திரையரங்குகளில் ஓடி இதுவரை 55 கோடி ரூபாய்க்கு மேல் வசூலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் நாளை [ஜூலை 3] வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'கருடன்' திரைப்படத்தில் பிரபல நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'கருடன்' படத்தில் நடித்துள்ளார்.

    'கருடன்' திரைப்படத்தில் பிரபல நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் உன்னி முகுந்தன், சூரி, சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    சூரி பல திரைப்படங்களில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார், ஆனால் கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து மக்கள் மனதை வென்றார். இப்படம் சூரி திரைப் பயணத்தில் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. சூரிக்கு மாபெரும் அங்கீகாரத்தை கொடுத்தது.

    இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விடுதலை- 2 பாகம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'கருடன்' படத்தில் நடித்துள்ளார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இந்நிலையில் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வரும் மே 21 ஆம் தேதி காலை  சென்னை சத்யம் சினிமாவில் 9.30 மணியளவில் நடைப்பெறவுள்ளது. இதில் யுவன் ஷங்கர் ராஜா, வெற்றி மாறன் மற்றும் படக்குழுவினர் பங்குப்பெறவுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரதமர் மோடி திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • பின்னர் கொச்சி மெட்ரோ படகு சேவையை தொடங்கி வைத்தார்.

    கேரளாவில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நேற்று கேரளா வந்தார். கொச்சியில் ரோடு ஷோவில் பங்கேற்ற பிரதமர் மோடி இளைஞர் அமைப்பினர் நடத்திய மாநாட்டிலும் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கேரள மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். எனவே விரைவில் கேரளாவில் பாரதிய ஜனதா ஆட்சி அமையும் என்றார்.

    இதைத்தொடர்ந்து, திருவனந்தபுரம் சென்ட்ரல் ரெயில் நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடி திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியம் சென்றார். அங்கு கொச்சி மெட்ரோ படகு சேவையை தொடங்கி வைத்தார்.


    நரேந்திர மோடி -உன்னி முகுந்தன்

    இந்நிலையில், நடிகர் உன்னி முகுந்தன் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள உன்னி முகுந்தன், "நன்றி சார், 14 வயதில் உங்களைத் தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு இப்போது உங்களைச் சந்தித்ததில் இருந்து மீளவில்லை. உங்களுடன் பேசிய அந்த 45 நிமிடங்கள் என் வாழ்வின் சிறந்த நிமிடங்கள். நீங்கள் சொன்ன வார்த்தையை என்னால் மறக்கவே முடியாது. ஒவ்வொரு அறிவுரையும் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும்" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.


    • விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மாளிகப்புரம்’.
    • இப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    அறிமுக இயக்குனர் விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில் உன்னி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'மாளிகப்புரம்'. இப்படத்தில் குழந்தை நட்சத்திரங்களான தேவானந்தனா, ஸ்ரீபாத் யான், சைஜு குருப், ரமேஷ் பிஷாரடி, ரஞ்சி பணிக்கர், டி.ஜி.ரவி, ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


    மாளிகப்புரம்

    விஷ்ணு நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அபிலாஷ் பிள்ளை திரைக்கதை எழுதியுள்ளார். சந்தோஷ் வர்மா, பி.கே. ஹரிநாராயணன் பாடல்கள் எழுத, ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார். அன் மேகா மீடியா (Ann Mega Media) மற்றும் காவ்யா பிலிம்ஸ் (Kavya Film Company) சார்பில் பிரியா வேணு மற்றும் நீதா பின்டோ இணைந்து தயாரித்துள்ள இப்படம் சமீபத்தில் தமிழில் வெளியானது.


    மாளிகப்புரம் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'மாளிகப்புரம்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 15-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    ×