என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நிகோஸ் கிறிஸ்டோடவுலைட்ஸ்"
- சைப்ரஸ் நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 72.4 சதவீதம் வாக்கு பதிவானது.
- இதில் 51.9 சதவீத வாக்குகளுடன் நிகோஸ் கிறிஸ்டோடவுலைட்ஸ் வெற்றி பெற்றார்.
நிக்கோசியா:
சைப்ரஸ் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில், 4.05 லட்சத்திற்கும் கூடுதலான வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். 72.4 சதவீதம் வாக்கு பதிவானது.
இந்தத் தேர்தலில் முன்னாள் வெளியுறவு மந்திரி நிகோஸ் கிறிஸ்டோடவுலைட்ஸ் (49), 51.9 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆண்டிரியாஸ் மேவ்ராய்யன்னிசுக்கு 48.1 சதவீத வாக்குகள் கிடைத்தன.
சைப்ரசில் விலைவாசி உயர்வு, முறையற்ற புலம்பெயர்வு ஆகியன தேர்தலில் எதிரொலித்துள்ளது. சைப்ரசில் கிரேக்கம் பேசக்கூடிய தெற்கு பகுதி மற்றும் துருக்கியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வடக்கு பகுதியில் அரை நூற்றாண்டாக காணப்படும் பிரிவினையும் தேர்தலில் எதிரொலித்துள்ளது.
இதையடுத்து, தேர்தலில் தோல்வியடைந்த மேவ்ராய்யன்னிஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், சைப்ரஸ் விரும்பிய மாற்றங்களை செய்ய முடியாததற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிகோசுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.