என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜிவி பிரகாஷ் குமார்"
- 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான அமரன் சுமார் ரூ.170 கோடி வரை வசூலித்துள்ளது
- சாய் பல்லவியின் இன்ட்ரோ பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது.
மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில், சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
ரசிகர்களின் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான அமரன் சுமார் ரூ.170 கோடி வரை வசூலித்துள்ளது. விரைவில் ரூ.200 கோடியை நெறுங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமரன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஹே மின்னலே பாடல் அனைவரது ரிங்டோனாக மாறி வருகிறது. மேலும், சாய் பல்லவியின் இன்ட்ரோ பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். 'அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு இனிய பரிசு வழங்கியதற்கு நன்றி' என எக்ஸ் தளத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் பதிவிட்டுள்ளார்.
Thanks @Siva_Kartikeyan for the sweet gift for #Amaran success ❤️✨ pic.twitter.com/HhnxCxI6w1
— G.V.Prakash Kumar (@gvprakash) November 9, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரசிகர்களின் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
- திரைப்பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் என அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது.
மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில், சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
ரசிகர்களின் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. மேலும் இத்திரைப்படத்தை பார்த்து பல திரைப்பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் என அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.
அமரன் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இணையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஹே மின்னலே பாடல் அனைவரது ரிங்டோனாக மாறி வருகிறது. மேலும், சாய் பல்லவியின் இன்ட்ரோ பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், ஹே மின்னலே பாடலில் இடம்பெற்றுள்ள "எங்கே இருள் என்றாலும் அங்கே ஒளி நீதானே.." என்கிற காதல் வரியை ஜி.வி. பிரகாஷ் குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஜி.வியின் இந்த பதிவுக்கும், அவரது இசைக்கும் லைக்ஸ்களும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
Enge irul endraalum….. ange oli needhaaney ….✨✨✨✨❤️❤️❤️ #Amaran pic.twitter.com/waRKrM9ApM
— G.V.Prakash Kumar (@gvprakash) November 6, 2024
- அமரன் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
- அமரன் படத்தை ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரித்துள்ளது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தின் தழுவலை கொண்டுள்ள இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் டிரைலரை நடிகரும், தயாரிப்பாளருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாடல் 'ஹே மின்னலே' ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
- இது தனுஷ் நடிக்கும் 52 ஆவது படமாகவும், அவர் இயக்கும் 4 ஆவது படமாகும்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் தனுஷ். சமீபத்தில் இவர் நடித்து, இயக்கி வெளியான ராயன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷ் நடிப்பில் வெளியான 50 ஆவது படமாக ராயன் அமைந்தது.
ராயன் படத்தைத் தொடர்ந்து தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கும் நான்காவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், இந்த படத்தில் அவரே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது தனுஷ் நடிக்கும் 52 ஆவது படமாகவும், அவர் இயக்கும் 4 ஆவது படமாகும்.
"இட்லி கடை" என தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை கிரன் கௌஷிக் மேற்கொள்ள படத்தொகுப்பு பணிகளை பிரசன்னா ஜிகே மேற்கொள்கிறார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தனுஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சூர்யா நடிப்பில் 2020-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'சூரரைப்போற்று'.
- சர்ஃபிரா படத்தின் சிறப்பு திரையிடல் நேற்று மும்பையில் நடைப்பெற்றது
சூர்யா நடிப்பில் 2020-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'சூரரைப்போற்று'. இத்திரைப்படம் நேரடியாக ஓடிடி ரிலீஸ் செய்யப்பட்டது. சூர்யாவிற்கு மிகப்பெரிய திரைப்படமாக இப்படம் அமைந்தது.
இதில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது.
தமிழில் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய சுதா கொங்கரா முடிவு செய்தார். இந்தியில் பிரபல நடிகர் அக்ஷய் குமார் , ராதிகா மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கும் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தியில் சர்ஃபிரா என தலைப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடமாகவே படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்துவந்த நிலையில். தற்பொழுது திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் சிறப்பு திரையிடல் நேற்று மும்பையில் நடைப்பெற்றது இதில் சர்ஃபிரா படக்குழுவினரும், நடிகர் சூர்யா, ஜோதிகா, ஜிவி பிரகாஷ் மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா பங்கேற்றனர்.
அப்பொழுது அக்ஷய் குமாருடன் இணைந்து சூர்யா மற்றும் ஜோதிகா புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தங்கலான் படத்தில் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் "தங்கலான்." மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த படம் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தங்கலான் படத்தின் டிரைலர் நாளை (ஜூலை 10) வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக இருக்கிறது.
முன்னதாக இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. டிரைலருடன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பும் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- லக்கி பாஸ்கர் வரும் செப்டம்பர் 27ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.
- ஜி.வி.பிரகாஷ் இசையில் ஆனந்த் அரவிந்தக்ஷன், ஸ்வேதே மோகன் இப்பாடலை பாடியுள்ளனர்.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்.
சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
பிப்ரவரி 3ம் தேதி வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது. அந்த போஸ்டரில், நடிகர் துல்கர் சல்மான் ஒரு வங்கியின் நுழைவாயிலை நோக்கி நடந்து செல்வது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து, இப்படத்தின் டீசர் வெளியானது. லக்கி பாஸ்கர் வரும் செப்டம்பர் 27ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'வாத்தி. இப்படம் ரூ.100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை அவர் இயக்கி வருகிறார்.
அதே சமயம், சீதா ராமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் இரண்டாவது தெலுங்கு படம் "லக்கி பாஸ்கர்" .
இந்நிலையில், லக்கி பாஸ்கர் படத்தின் முதல் பாடலான "கொல்லாமல் கொல்லாதே.." என்கிற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் இசையில் விக்னேஷ் ராமகிருஷ்ணா வரிகளில் ஆனந்த் அரவிந்தக்ஷன், ஸ்வேதே மோகன் இப்பாடலை பாடியுள்ளனர்.
- சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்து பிரிவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்த வண்ணம் உள்ளது.
- சமீபத்தில் ஜிவி பிரகாஷ் கொடுத்த அறிக்கை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்து பிரிவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்த வண்ணம் உள்ளது. நடிகை அமலா பால் தொடங்கி, சமந்தா, தனுஷ், டி இமான், இயக்குனர் பாலா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த லிஸ்ட்டில் மேலும் ஒரு ஜோடி இணைய உள்ளதாக நெட்டிசன்கள் சந்தேகத்தை கிளப்பி இருக்கின்றனர். அதற்கு காரணம் அந்த நடிகர் தன்னுடைய மனைவி பெயர் அடங்கிய டாட்டூவை நீக்கி உள்ளது தான்.
அதை செய்தது பாலிவுட் பிரபலம் சையிப் அலிகான் தான். இவருக்கு தற்போது 53 வயது ஆகிறது. இவர் கடந்த 1991-ம் ஆண்டு அம்ரிதா சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடியின் திருமண வாழ்க்கை 13 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. கடந்த 2004-ம் ஆண்டு அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்து பிரிந்தார் சையிப் அலிகான். இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அவர் பெயர் தான் சாரா அலிகான்.
கடந்த 2012-ம் ஆண்டு நடிகை கரீனா கபூரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் சையிப் அலிகான். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவருக்கும் 10 வயது வித்தியாசம். இருப்பினும் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களது இல்லற வாழ்க்கையில் விரிசல் ஏற்படுள்ளதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கு காரணம் சையிப் அலிகானின் டாட்டூ தான். அவர் தன்னுடைய காதல் மனைவி கரீனாவின் பெயரை தன்னுடைய கையில் டாட்டூ குத்தி இருந்தார். ஆனால் தற்போது அதனை நீக்கிவிட்டு சூலம் போன்ற டிசைனை டாட்டுவாக குத்தி இருக்கிறார். இதை கவனித்த நெட்டிசன்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிய உள்ளார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர். சையிப் அலிகான் - கரீனா கபூர் ஜோடிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்து வருகிறார்
- வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'வாத்தி. இப்படம் ரூ.100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார்.
சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
பிப்ரவரி 3-ம் தேதி வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது. அந்த போஸ்டரில், நடிகர் துல்கர் சல்மான் ஒரு வங்கியின் நுழைவாயிலை நோக்கி நடந்து செல்வது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், நாளை இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'வாத்தி. இப்படம் ரூ.100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை அவர் இயக்கி வருகிறார்.
அதே சமயம், சீதா ராமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் இரண்டாவது தெலுங்கு படம் "லக்கி பாஸ்கர்" என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அட்வென்ச்சர், ஆக்ஷன் கதைக்களம் கொண்ட படமாக கள்வன் உருவாகி இருக்கிறது.
- இந்த படத்தில் பாரதி ராஜா முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் இயக்குநராக அறிமுகமாகும் 'கள்வன்' படம் சிறப்பாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா மற்றும் தீனா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் ஜி. டில்லி பாபு தயாரிக்கும் இந்த பரபரப்பான அட்வென்ச்சர் - ஆக்ஷன் திரைப்படம் ஏப்ரல் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இந்த படம் தொடர்பாக ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பி.வி. ஷங்கர் கூறும்போது, "சில ஜானர் படங்கள் மொழி, பிராந்திய எல்லைகளைத் தாண்டி பார்வையாளர்களைக் கவரும். ஒரு ஒளிப்பதிவாளராக காடுகளை அடிப்படையாகக் கொண்ட படங்கள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாக உணர்ந்தேன்."
"ஆக்ஷன், அட்வென்ச்சர், எமோஷன் எனப் பல த்ரில்லர் தருணங்களை ஒன்றாகக் கொண்ட இந்தப் படம் பார்வையாளர்களுக்குத் தரமான எண்டர்டெயின்மெண்ட் ஆக இருக்கும். அழகான காதல், நகைச்சுவை என ஒரு ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படத்திற்கான அனைத்து அம்சங்களையும் இந்தப் படம் கொண்டுள்ளது."
'கள்வன்' படத்திற்காக, ஜி.வி.பிரகாஷ் குமாரின் அர்ப்பணிப்பு அளப்பரியது. ஒரே நேரத்தில் இசை மற்றும் நடிப்பு இரண்டிலும் கவனம் செலுத்துவது எளிதானது கிடையாது. ஆனால், இந்தப் படத்துக்கான இயல்பான நடிப்பு மற்றும் அழகான பாடல்கள் கொடுத்து எங்கள் எதிர்பார்ப்பை சிறப்பாக பூர்த்தி செய்துள்ளார்."
"இவானா திறமையான நடிகை. இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். பாரதிராஜா சாருடன் பணிபுரிய வேண்டும் என்பது பலருடைய கனவு. அந்தக் கனவு எனக்கு நிறைவேறி இருப்பதில் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்" என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தின் இயக்குநர் பி.வி. ஷங்கர் பல முன்னணி படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ராட்சன், முண்டாசுப்பட்டி, புரூஸ் லீ, மரகத நாணயம் இவர் ஒளிப்பதிவு செய்தப் படங்களாகும்.
- பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாக உள்ள படம் கள்வன்.
ஜி.வி. பிரகாஷ் குமார் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர். பல ஹிட்டான பாடல்கலை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து இருக்கிறார். இசையமைப்பில் இருந்தவர் பின் படங்கள் நடிக்க தொடங்கினார். 2015 ஆம் ஆண்டில் டார்லிங் படத்தில் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் திரிஷா இல்லனா நயன்தாரா, சர்வம் தாள மயம், நாச்சியார், சிவப்பு மஞ்சள் பச்சை, கடவுள் இருக்கான் குமாரு, பேச்சிலர் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார். ஒரு இசையமைப்பாளராக மட்டும் அல்ல ஒரு நல்ல நடிகனாகவும் அவர் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். மார்ச் 22-ஆம் தேதி ஜி.வி.பிரகாஷ் குமாரின் அடுத்த படமான ரெபெல் வெளியாகவுள்ளது.
இந்நிலையில்,பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாக உள்ள படம் கள்வன். ரமேஷ் அய்யப்பன் மற்றும் ஷங்கர் இத்திரைப்படத்தை எழுதியுள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் , இவானா மற்றும் பாரதி ராஜா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். டில்லி பாபு இப்படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையில் பி.வி ஷங்கர் ஒளிப்பதிவு மேற்கொள்ள ரேமண்ட் டெரிக் மற்றும் காஸ்டா படத்தொகுப்பில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தை ஏப்ரல் 4-ஆம் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இப்படத்தின் இயக்குநர் பி.வி. ஷங்கர் பல முன்னணி படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ராட்சன், முண்டாசுப்பட்டி, புரூஸ் லீ, மரகத நாணயம் இவர் ஒளிப்பதிவு செய்தப் படங்களாகும். ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் 2017-ஆம் ஆண்டு வெளிவந்தப் படம் மரகத நாணயம். ஏ.ஆர்.கே சரவணனுடன் இணைந்து பி.வி ஷங்கர் இப்படத்தை இயக்கினார்.
- டியர் திரைப்படம் ஒரு குடும்பக் கதை.
- திருமண துயரங்கள் பற்றிய சோகமான பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து பாடியுள்ளார்.
இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் டியர் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இப்படத்தின் தயாரிப்பாளர்கள் இப்போது படத்தின் ஒரு பாடலை இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளனர். 'கேடி லேடி தள்ளிப்போடி நீதான் என் தலைவலி...' என்ற பாடல் வரியுடன் கூடிய பாடலாக இது அமைந்து உள்ளது. இந்த சோகபாடல் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
டியர் திரைப்படம் ஒரு குடும்பக் கதை. இது ஒரு திருமணமான ஜோடியின் கதை மற்றும் திருமணத்தில் இருந்து தொடங்குகிறது மற்றும் நீண்ட கால திருமணத்திற்கு என்ன தேவை என்பதை இந்தபடத்தில் அறிவுரையாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் தலைவாசல் விஜய், ரோகினி, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், டியரின் படத்தின் முதல் பாடலான தலைவலி பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திருமண துயரங்கள் பற்றிய சோகமான பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து பாடியுள்ளார். விண்ணுலக கவி பாடல் வரிகளை எழுதி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்