என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதல்"

    • பயங்கரவாதிகளை முன்னேற விடாமல் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் துப்பாக்கி சூடு நடத்துகின்றனர்.
    • இதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், போலீசார் 15 பேர் காயமடைந்தாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    கராச்சி:

    பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள காவல்துறை தலைமையகத்தை பயங்கரவாதிகள் இன்று திடீரென சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். முதலில் கையெறி குண்டுகளை பிரதான வாயிலில் வீசி தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், உள்ளே நுழைந்து துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினர். அவர்களை உள்ளே முன்னேற விடாமல் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் துப்பாக்கி சூடு நடத்துகின்றனர். இதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், போலீசார் 15 பேர் காயமடைந்தாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நீடிப்பதால் உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கராச்சி காவல் தலைமையகம் தாக்குதலுக்குள்ளானதை காவல்துறை செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

    இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. எத்தனை பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    தாக்குதல் நடைபெறும் கராச்சி காவல்துறை அலுவலகம் கராச்சி நகரத்திலிருந்து விமான நிலையத்திற்குச் செல்லும் பிரதான சாலைக்கு அருகில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தானில் தலைமை போலீஸ் நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
    • இந்த தாக்குதலில் 5 பயங்கரவாதிகள், 4 போலீசார் உயிரிழந்தனர்.

    லாகூர்:

    பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள காவல்துறை தலைமையகத்தை பயங்கரவாதிகள் நேற்று இரவு திடீரென சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.

    பயங்கர ஆயுதங்களுடன் காவல்துறை தலைமையகத்தில் புகுந்து கையெறி குண்டு, துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் காவல் நிலையத்தை கைப்பற்ற முயற்சித்தனர். காவல் நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 4 போலீசாரும் உயிரிழந்தனர். பல மணிநேர சண்டைக்கு பின் போலீஸ் அலுவலகத்தை போலீசார் மீட்டனர்.

    காவல்துறை தலைமையகத்தில் நடந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    • பழங்குடி மக்கள் பயணம் செய்த வாகனங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு.
    • வாகனங்கள் சென்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக தகவல்.

    பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையில் பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

    இதில் லஷ்கர்-இ-இஸ்லாம் அமைப்பைச் சேர்ந்த இரண்டு முக்கிய கமாண்டர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 6 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த சண்டையில் அருகில் இருந்து வீடுகளில் வசித்த பொதுமக்கள் சிலரும் காயம் அடைந்தனர்.

    இந்நிலையில், இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் இன்று பழங்குடி மக்கள் பயணம் செய்த வாகனங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 8 பெண்கள் மற்றும் 5 குழந்தைகள் அடங்குவர்.

    மேலும், படுகாயமடைந்த 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வாகனங்கள் சென்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×