search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங் பரிவார்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குஜராத் காங்கிரஸ் அலுவலகம் மீதான வன்முறை தாக்குதல் பாஜக மற்றும் சங் பரிவார் குறித்த என்னுடைய கருத்தை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது.
    • குஜராத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்பதை மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.

    நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் பேசும்போது வன்முறை, வெறுப்பு கொண்ட பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அல்லது மோடி எந்த வகையிலும் இந்துக்கள் என அழைக்க முடியாது எனக் கூறினார். மேலும், இவர்கள் இந்துக்களை பிரதிநிதித்துவம் படுத்துவர்கள் அல்ல என்றார்.

    இதற்கு பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் கடுமையான வகையில் பதில் அளித்தனர். மேலும், ஒட்டுமொத்த இந்துக்களை அவமதித்ததாக குற்றம்சாட்டினர். இது தொடர்பாக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

    ராகுல் காந்திக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது. குஜராத் மாநிலத்தில் பாஜகவினர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை தாக்கியதாக தெரிகிறது. இதனால் இருகட்சியின் தொண்டர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

    இந்த நிலையில் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    குஜராத் காங்கிரஸ் அலுவலகம் மீதான கோழைத்தளமான மற்றும் வன்முறை தாக்குதல் பாஜக மற்றும் சங் பரிவார் குறித்த என்னுடைய கருத்தை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது. வன்முறை மற்றும் வெறுப்பை பரப்பும் பாஜகவினர் இந்து மதத்தின் அடிப்படை கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை.

    அவர்களுடைய பொய்களை குஜராத் மக்களால் தெளிவாக பார்க்க முடிகிறது. இவர்கள் தீர்க்கமான பாடம் புகட்டுவார்கள். குஜராத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்பதை மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    நாங்கள் அமைதியாக போராட்டம் நடத்தினோம். காங்கிரஸ் தொண்டர்கள்தான் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர் என பாஜக குற்றம்சாட்டுகிறது. அதேவேளையில் பாஜக-வினர்தான் வன்முறையை தூண்டினார்கள் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக இரு தரப்பிலும் போலீசார் பலரை கைது செய்துள்ளனர்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு குற்றச்சாட்டு

    நாகர்கோவில் :

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் கனக ராஜ் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திரு விழாவின் போது ஹைந்துவ சேவா சங்கம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

    ஆன்மிகத்தை பெயராக வைத்துக் கொண்டு அரசியல் மற்றும் வெறுப்பு பிரச்சாரத்தை முன் வைக்கும் நிகழ்ச்சி அங்கு நடந்து வருகிறது. ஆன்மிக நிகழ்ச்சிக்கு தடை இருப்பதாக சங் பரிவார அமைப்புகள் போராடி வருகிறது. ஆனால் ஆன்மிக நிகழ்ச்சியில் பொன்.ராதா கிருஷ்ணன், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணா மலை, மீனா தேவ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

    இவர்களுக்கும் ஆன்மீகத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது. கடந்த முறை நடந்த நிகழ்ச்சியின் போது பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அரசியல் பேசியுள்ளார். முழுக்க முழுக்க இந்த நிகழ்ச்சி அரசியல் நிகழ்ச்சியாகும்.

    குமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில், நாகராஜா கோவில் மற்றும் ஆதி கேசவ பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பல நிகழ்ச்சி கள் சிறப்பாக நடத்தப்பட்டு உள்ளது. ஆனால் சங் பரிவார் அமைப்புகள் சாமியின் பெயரை கூறி வசூல் செய்து வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் இந்து மத சமயத்தை பின்பற்றும் மக்கள் இது பற்றி தெரிந்தி ருக்க வேண்டும். பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து முன்னணியினர் நடத்தும் பிரச்சாரத்திற்கு தான் இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்துள்ளது. ஆன்மிக நிகழ்ச்சிகள் தடை செய்யப்படவில்லை. அது வழக்கமாக நடத்தப்படும்.

    சங் பரிவார அமைப்புகள் கலவரத்தை தூண்டும் வகையில் பேசினால் அவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹைந்துவ சேவா சங்கம் சார்பில் நடைபெற இருந்த மாநாடுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சிவாலய ஓட்டத்தின் போதும் திருநந்திக்கரை நந்தீஸ்வரர் ஆலயத்தில் பணம் வசூல் செய்வதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக விசாரித்து நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    பேட்டியின் போது முன்னாள் எம்பி பெல்லார்மின், முன்னாள் எம்.எல்.ஏ., லீமாரோஸ், மாவட்ட செயலாளர் செல்ல சாமி ஆகியோர் உடனிருந்தனர்.

    ×