search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரவிந்தர் ஆசிரமம்"

    • ஜனாதிபதி நடைபயிற்சிக்காக துப்புரவு பணியாளர்கள் கடற்கரை சாலையை சுத்தப்படுத்தியிருந்தனர்.
    • அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்ற ஜனாதிபதி அங்கு அரவிந்தர் மற்றும் அன்னை சமாதி முன்பு அமர்ந்து தியானம் செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு அரசு முறை பயணமாக வந்துள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று இரவு கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

    இன்று காலை 6 மணி முதல் 6.45 மணி வரை ஜனாதிபதி திரவுபதி முர்மு நடைபயிற்சி மேற்கொள்வார் என்பதால் அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள போலீசார் தடை விதித்திருந்தனர்.

    இன்று காலை 5.25 மணிக்கே தங்கியிருந்த விருந்தினர் மாளிகையிலிருந்து ஜனாதிபதி நடைபயிற்சிக்கு கிளம்பினார்.

    தொடர்ந்து ஜனாதிபதி கடற்கரை சாலையில் நடைபயிற்சி செய்தார். ஜனாதிபதி நடைபயிற்சிக்காக துப்புரவு பணியாளர்கள் கடற்கரை சாலையை சுத்தப்படுத்தியிருந்தனர். நகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் கடற்கரையில் இருந்தனர்.

    ஜனாதிபதி முன்கூட்டியே நடைபயிற்சி தொடங்கியதை தொடர்ந்து அவர்களும் ஜனாதிபதியோடு நடந்தனர். புஸ்சி வீதி விருந்தினர் மாளிகையிலிருந்து பழைய கலங்கரை விளக்கம் வரை ஜனாதிபதி நடந்து சென்று திரும்பினார்.

    அப்போது காந்தி சிலையை நின்று பார்த்தார். அங்கிருந்த அதிகாரிகள், சிலை வரலாறு குறித்து தெரிவித்தனர். பழைய கலங்கரை விளக்கம், புதிதாக நிறுவப்பட்டுள்ள தியாகச்சுவர், தேசிய கொடிக்கம்பம் ஆகியவற்றை ஜனாதிபதி பார்த்தார். அவரோடு நடந்து வந்த அதிகாரிகள் சிலர் ஜனாதிபதியுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

    மீண்டும் ஜனாதிபதி 6.05 மணிக்கு விருந்தினர் மாளிகைக்கு திரும்பினார். சுமார் 40 நிமிடம் ஜனாதிபதி நடைபயிற்சி மேற்கொண்டார்.

    பின்னர் காலை உணவு சாப்பிட்ட பின் புதுவை முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். அதன் பின்னர் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்ற ஜனாதிபதி அங்கு அரவிந்தர் மற்றும் அன்னை சமாதி முன்பு அமர்ந்து தியானம் செய்தார்.

    அதனைதொடர்ந்து அங்கிருந்து ஜனாதிபதி ஆரோவில் சென்றார். அங்குள்ள மாத்ரி மந்திரில் தியானம் செய்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த ஓவிய கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்.

    அதன்பின்னர் அங்கு நடந்த அரவிந்தரின் 150-வது ஆண்டு விழாவில் பங்கேற்று பேசினார்.

    ஜனாதிபதி வருகையையொட்டி புதுவை ஆரோவில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னையின் அறை 21-ந்தேதி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது.
    • பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    பக்தர்களால் அன்புடன் அன்னை, என்று அழைக்கப்படும் மீரா அல்பாசா 1878-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி, பாரீஸில், துருக்கி எகிப்து யூத தம்பதியின் 2-வது குழந்தையாக பிறந்தார். 1914-ம் ஆண்டு புதுவையில் அரவிந்தரை சந்தித்து, ஆன்மீக பணியில் ஈடுபட்டார்.

    அதை தொடர்ந்து புதுவையில் அரவிந்தர் ஆசிரமம் நிறுவி 1968-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி ஆரோவில் சர்வதேச நகரத்தை உருவாக்க அடிக்கல் நாட்டி பணியை தொடங்கினார்.

    அன்னை வாழ்ந்த காலத்தில் அரவிந்தர் ஆசிரமத்தில் உள்ள தனது அறை அருகில் இருக்கும் பால்கனியில் நாள்தோறும் காலை 6 மணிக்கு நின்று, பக்தர்களை ஆசிர்வதித்து தனது தினந்தோறும் பணியை தொடங்குவது வழக்கம்.

    வருகிற பிப்ரவரி 21-ந் தேதி அன்னையின் 145-வது ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் ஆரோவில் நகரம் 55-ம் ஆண்டு விழாவையொட்டி புதுவை ஒயிட்டவுன் மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில், முதலில் ஆசிரம வாசிகளின் சிறப்பு தியானம் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து அன்னையின் அறை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அன்று பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×