search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்கூட்டர"

    • ராஜஸ்தானில் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • இந்தத் திட்டத்துக்காக ஸ்கூட்டர்களை மாநில அரசு கொள்முதல் செய்து வருகிறது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் ஏழை மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்காக ஸ்கூட்டர்களை மாநில அரசு கொள்முதல் செய்து வருகிறது.

    ராஜஸ்தான் அரசின் முதன்மைத் திட்டமாக இது கருதப்படுகிறது. சுமார் 80 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட இந்த ஸ்கூட்டர்கள் மூலம் 12 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

    ஆண்டு வருமானம் இரண்டரை லட்சம் ரூபாய்க்கும் குறைவான குடும்பங்களில் இருந்து 11, 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரியில் மேற்படிப்பைத் தொடர ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது.

    இந்தத் திட்டத்தில் தேர்வு பெற, மாணவிகள் மாநில வாரியத் தேர்வுகளில் 65 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாகவும், 10 அல்லது 12 ஆம் வகுப்புகளில் சிபிஎஸ்இ தேர்வுகளில் 75 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாகவும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

    இந்நிலையில், கடந்த ஆண்டு முதல் வாங்கப்பட்டு வந்த சுமார் 1,500க்கும் மேற்பட்ட ஸ்கூட்டர்கள் தெற்கு ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் உள்ள வித்யாமந்திர் கல்லூரி மற்றும் ஹர்தேவ் ஜோஷி அரசு பெண்கள் கல்லூரி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ஆனால் அவை மாணவிகளுக்கு விநியோகம் செய்யப்படாமல், வெயிலில் காய்ந்தும், புற்கள் மண்டியும் உள்ளதால் வீணாகப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஸ்கூட்டர்களை விரைவில் தகுதியானவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு பிற்பகுதியில் ஏற்பட்ட அரசு மாற்றம் மற்றும் மக்களவைத் தேர்தலுக்கான மாதிரி நடத்தை விதிகள் ஆகியவற்றால் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • யமஹா நிறுவனம் தனது இரு ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் அப்டேட் செய்து இருக்கிறது.
    • புதிய 2023 ஸ்கூட்டர்களின் விலை ரூ. 78 ஆயிரத்து 600 என துவங்குகின்றன.

    யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் 2023 ஃபசினோ மற்றும் ரே ZR சீரிஸ் ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இரு ஸ்கூட்டர்களும் 125சிசி என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கின்றன. புதிய ஃபசினோ 125 மாடல் Fi ஹைப்ரிட் எனும் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது.

     

    எனினும், ரே ZR மாடல்- ரே ZR 125 Fi ஹைப்ரிட் மற்றும் ரே ZR ஸ்டிரீட் ரேலி1 25 Fi ஹைப்ரிட் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய 2023 மாடல்களில் 125 சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் மற்றும் ஃபியூவல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் அதிகபட்சம் 8 ஹெச்பி பவர், 10.3 நியியூட்டன் டார்க் இழுவிசசையை வெளிப்படுத்துகிறது.

     

    புதிய ஸ்கூட்டர்கள் தற்போது OBD-II சென்சார் மற்றும் E-20 ஃபியூவல் சப்போர்ட் கொண்டிருக்கிறது. OBD-II சென்சார் கொண்டு என்ஜின் ஆரோக்கியம் மற்றும் செயல்திறன் பற்றிய விவரங்களை ரியல்டைமில் அறிந்து கொள்ளலாம். 125சிசி ஹைப்ரிட் ஸ்கூட்டர் ப்ளூடூத் கனெக்டிவிட்டியை Y கனெக்ட் செயலிக்கான சப்போர்ட் கொண்டிருக்கிறது.

    விலை விவரங்கள்:

    ஃபசினோ டிரம் (விவிட் ரெட், எல்லோ காக்டெயில், சியான் புளூ மற்றும் மெட்டாலிக் பிளாக்) ரூ. 78 ஆயிரத்து 600

    ஃபசினோ டிரம் (கூல் புளூ மெட்டாலிக் மற்றும் டார்க் மேட் புளூ) ரூ. 79 ஆயிரத்து 600

    ஃபசினோ டிஸ்க் (விவிட் ரெட், எல்லோ காக்டெயில், சியான் புளூ மற்றும் மெட்டாலிக் பிளாக்) ரூ. 88 ஆயிரத்து 230

    ஃபசினோ டிஸ்க் (கூல் புளூ மெட்டாலிக், டார்க் மேட் புளூ) ரூ. 89 ஆயிரத்து 230

    ஃபசினோ டிஸ்க் (விவிட் ரெட் ஸ்பெஷல், மேட் பிளாக் ஸ்பெஷல்) ரூ. 90 ஆயிரத்து 230

    ஃபசினோ டிஸ்க் (டார்க் மேட் புளூ ஸ்பெஷல்) ரூ. 91 ஆயிரத்து 030

    ரே ZR டிரம் (மெட்டாலிக் பிளாக், சியான் புளூ மற்றும் மேட் ரெட்) ரூ. 82 ஆயிரத்து 730

    ரே ZR டிஸ்க் (சியான் புளூ, மேட் ரெட் மற்றும் மெட்டாலிக் பிளாக்) ரூ. 88 ஆயிரத்து 530

    ரே ZR டிஸ்க் (ரேசிங் புளூ மற்றும் டார்க் மேட் புளூ) ரூ. 89 ஆயிரத்து 530

    ரே ZR ஸ்டிரீட் ரேலி (மேட் காப்பர்) ரூ. 92 ஆயிரத்து 530

    ரே ZR ஸ்டிரீட் ரேலி (மேட் பிளாக் மற்றும் லைட் கிரே வெர்மிலன்) ரூ. 93 ஆயிரத்து 530

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    ×