என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கொள்ளு சமையல்"
- வரகரிசி உணவுகளை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
- கொள்ளு அதிக புரதச்சத்து நிறைந்தது.
தேவையான பொருட்கள்:
வரகு அரிசி - 200 கிராம்
கொள்ளு - 50 கிராம்
சீரகம் - 2 டீஸ்பூன்
மிளகு - 15
நெய் - 3 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - ஒன்று
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கொள்ளுப் பயறை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
வரகரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியுடன் பச்சை மிளகாய் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும்.
குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும்.
அதனுடன் இஞ்சி - பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
அதனுடன் கொள்ளு, வரகு சேர்த்து குக்கரை மூடி ஆறு விசில்விட்டு இறக்கவும்.
குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
சத்தான சுவையான வரகு அரிசி கொள்ளு பொங்கல் ரெடி.
குறிப்பு: விரும்பினால் முந்திரி சேர்க்கலாம். சாதாரண அரிசியைவிட சிறுதானியங்கள் இறுகும் தன்மையுடையதால் தண்ணீர் அதிகமாகச் சேர்க்கவும்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இட்லி, தோசைக்கு பல்வேறு பொடி வகைகளை தயார் செய்து சாப்பிடலாம்.
- இன்று கொள்ளுவில் இட்லி பொடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கொள்ளு - அரை கப்
உளுந்தம் பருப்பு - கால் கப்
கடலை பருப்பு - ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் - 5
பூண்டு - 10 பல்
மிளகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவைக்கு
செய்முறை:
கறிவேப்பிலையை நன்றாக கழுவி தண்ணீர் இல்லாமல் ஆறவைத்து கொள்ளவும்.
வாணலியை சூடாக்கி அதில் கொள்ளு, பெருங்காயத்தூளை கொட்டி வறுக்கவும்.
அடுத்து உளுந்து, கடலைப்பருப்பை போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.
மிளகாயையும் வாசம் வரும் வரை வறுத்தெடுத்துக்கொள்ளவும்.
மிளகையும் கருகாமல் வறுத்து கொள்ளவும்.
கறிவேப்பிலையை போட்டு வறுத்து கொள்ளவும்.
கடைசியாக சூடான கடாயில் பூண்டை போட்டு வைத்தால் போதும்.
அனைத்தும் நன்றாக ஆறிய பின்னர் மிக்சியில் போட்டு அரைக்கவும்.
இப்போது சுவையாக கொள்ளு இட்லி பொடி ரெடி.
இந்த பொடியை சூடான சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும்.
- கொள்ளு அதிக சூடு நிறைந்தது. தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது.
தேவையான பொருட்கள்
கொள்ளு - 1 கப்,
பெரிய வெங்காயம் - 1,
தக்காளி - 1,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி,
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி,
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி,
கரம் மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - 1 தேக்கரண்டி,
கொத்தமல்லித்தழை - சிறிது.
செய்முறை
* கொள்ளுவை மலர வேகவிடவும்.
* தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.
* தக்காளி குழைய வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் மஞ்சள் தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்.
* சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும், உப்புப்போடவும்.
* வேக வைத்த கொள்ளுவை ஓரளவு மசித்து சேர்க்கவும்.
* மசாலா திக்கான பதம் வந்து நன்கு வதங்கியதும் கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறலாம்.
* இப்போது சூப்பரான கொள்ளு மசாலா ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- ஊளைச்சதையை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உண்டு.
- அடிக்கடி உணவில் கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்க உதவும்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 கைப்பிடி
தேங்காய் - கால் மூடி
சிவப்பு மிளகாய் - 7
பூண்டு - 6 பல்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேங்காயினை துருவி வைத்துக் கொள்ளவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தில் கொள்ளினைப் போட்டு அடுப்பினை இளந்தீயில் வைத்து, நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
தேங்காய் துருவல், கொள்ளு, உப்பு, சிவப்பு மிளகாய், பூண்டு இவற்றை மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
கொள்ளு துவையல் தயார்.
கொள்ளு தானியத்தை நம் உணவில் அடுக்கடி சேர்த்துக் கொள்வதால் நமக்கு ஏற்படும் தொண்டை வலி, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் தீரும் என சொல்லப்படுகிறது. சாப்பாட்டில் கொள்ளு சேர்ப்பதால் நல்ல கண் பார்வை கிடைக்கும் என்றும், ஜுரம் அதிகமாக இருக்கும்போது கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால் ஜுரம் சரியாகும் என்றும் கூறப்படுகிறது. வாதப் பிரச்சினைகளும், வயிற்று வலியும் குணமாகும். கொள்ளினை உணவில் சேர்ப்பதால் இரத்தம் சுத்திகரிக்கப் படுகிறது.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- கொள்ளு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.
- கொள்ளுவை ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 கப்,
அரிசி - 1/4 கப்,
காய்ந்த மிளகாய் - 5,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
தாளிக்க :
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
சோம்பு - 1/4 டீஸ்பூன்,
உடைத்த உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
வெங்காயம் - பாதி
இஞ்சி - சிறிய துண்டு,
பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை:
* வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கொள்ளு, அரிசி இரண்டையும் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊற வைத்த பொருட்களை நன்றாக கழுவி அத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
* அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்தில் கரைத்து 2 மணிநேரம் புளிக்க வைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* சுவையான சத்தான கொள்ளு அடை தயார்.
- கொள்ளுவில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ரெசிபியை சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் :
கொள்ளு - 50 கிராம்,
பச்சரிசி - 100 கிராம்,
மஞ்சள்தூள் - சிறிதளவு,
பெருங்காயத்தூள், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க :
நெய் - 2 ஸ்பூன்,
மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
இஞ்சி - சிறிதளவு,
பச்சை மிளகாய் - 2,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு.
செய்முறை :
கொள்ளுவை 10 மணி நேரம் ஊறவைக்கவும்
இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொள்ளு, அரிசி இரண்டையும் நன்றாக கழுவி தனித்தனியே தளர வேகவிடவும்.
வெந்த கொள்ளு, அரிசியை ஒன்றாக சேர்த்து அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு மசிக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், இஞ்சி, ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளு கலவையில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
சூப்பரான கொள்ளு காரப் பொங்கல் ரெடி.
- அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது.
- உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.
தேவையான பொருட்கள்
முளைகட்டிய கொள்ளு - 1 கப்,
வெங்காயம் - 4,
பச்சைமிளகாய் - 2,
உப்பு, எண்ணெய்-தேவைக்கு,
பெருங்காயத்தூள், சமையல் சோடா - தலா 1 சிட்டிகை,
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொள்ளு பருப்பை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து 8 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து கரகரவென அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், சமையல் சோடா, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து வடை மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான கொள்ளு வடை தயார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்