என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளிநாட்டுகாரர்"

    • நீர்நிலைகளில் பிளாஸ்டிக் குப்பைகளை வீசக்கூடாது.
    • சத்தான சைவ உணவுகளை சாப்பிடுங்கள் என பல்வேறு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த ஆரோவில்லில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆரோவில் சர்வதேச நகருக்கு சுற்றுலா வந்துள்ள அமெரிக்கா கலிபோர்னியா பகுதியை சேர்ந்த ஜூலியன் என்பவர் புதுவை கடற்கரை சாலையில் நூதன முறையில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அவரது கையில் வைத்திருந்த பேனரில், பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம், அதற்கு பதிலாக அவர்களிடம் 10 நிமிடம் சாலையோரம் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற செய்து வேலை வழங்கி உணவு அளியுங்கள் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    மற்றொரு புறத்தில் நாம் ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 100 பிளாஸ்டிக் குப்பைகளை எரிக்காமல் மறு சுழற்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    நீர்நிலைகளில் பிளாஸ்டிக் குப்பைகளை வீசக்கூடாது. சத்தான சைவ உணவுகளை சாப்பிடுங்கள் என பல்வேறு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

    இதுதொடர்பாக கடற்கரைக்கு வந்திருந்த வெளிநாட்டு, வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கும் அவர் விளக்கம் அளித்தார். வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக நூதன பிரசாரத்தில் ஈடுபட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்ததோடு அவரை பொதுமக்கள் பாராட்டினர்.

    ×