search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாரிமுத்து"

    • நடிகர் மாரிமுத்து நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
    • அவரது உடல் பசுமலைதேரிக்கு எடுத்து செல்லப்பட்டது.

    தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள பசுமலை தேரி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (57). சீமான், மணிரத்தினம், வசந்த, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். மேலும் பல்வேறு திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமானவர். சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த மாரிமுத்து நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு பல்வேறு திரையுலகினர் அஞ்சலி செலுத்திய நிலையில் மாலையில் அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டுவரப்பட்டது.

    இன்று அதிகாலை 3மணி அளவில் தேனி மாவட்ட எல்லையை அவரது உடல் அடைந்ததும் அங்கு காத்திருந்த ஏராளமானோர் மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு அவரது கிராமமான பசுமலைதேரிக்கு எடுத்து செல்லப்பட்டது. சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் நின்று அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 6 மணி அளவில் அவரது வீட்டிற்கு முன்பு மாரிமுத்து உடல் வைக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில், நடிகர் மாரிமுத்துவின் உடல் அவரது இல்லத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

    • நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்.
    • இவரது உடல் இன்று அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்படவுள்ளது.

    'எதிர்நீச்சல்' என்ற சின்னத்திரை தொடர் மூலம் பெண்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து. இவர் தொலைக்காட்சி தொடர் மட்டுமல்லாமல் 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார். இவர் சீமான், மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். வைரமுத்துவிடமும் உதவியாளாராக இருந்துள்ளார்.

    நடிகர் மாரிமுத்து (58) நேற்று மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாரிமுத்துவின் உடல் இன்று அவரது சொந்த ஊரான பசுமலைத்தேரியில் தகனம் செய்யப்படவுள்ளது.

    இந்நிலையில், மாரிமுத்துவின் குழந்தைகளை நடிகர் அஜித் படிக்க வைத்துள்ளார். இது குறித்து மாரிமுத்துவின் சசோதரர் பேசியதாவது, மாரிமுத்து ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்தார். இதை நாங்கள் தாங்கி தான் ஆக வேண்டும். 'வாலி' படத்திற்கு பிறகு மாரிமுத்துவின் இரண்டு குழந்தைகளையும் 12-ஆம் வகுப்பு வரை அஜித் தான் படிக்க வைத்தார் என்று பேசினார்.

    • நடிகர் மாரிமுத்து நேற்று மாரடைப்பால் காலமானார்.
    • இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    'எதிர்நீச்சல்' என்ற சின்னத்திரை தொடர் மூலம் பெண்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து. இவர் தொலைக்காட்சி தொடர் மட்டுமல்லாமல் 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார். இவர் சீமான், மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். வைரமுத்துவிடமும் உதவியாளாராக இருந்துள்ளார்.

    நடிகர் மாரிமுத்து (58) நேற்று மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாரிமுத்துவின் உடல் இன்று அவரது சொந்த ஊரான பசுமலைத்தேரியில் தகனம் செய்யப்படவுள்ளது.

    இந்நிலையில், மறைந்த நடிகர் மாரிமுத்துவிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தனித்துவம் மிக்க நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, அகால மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகுந்த துயரம் கொண்டேன். ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டோம். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் காலமானார்.
    • இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நடிகர் மாரிமுத்து 'எதிர் நீச்சல்' தொலைக்காட்சி தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். இதில் இவர் பேசும் 'அட எம்மா ஏய்' வசனம் பட்டி தொட்டி எங்கும் பரவியுள்ளது. இவர் இயக்குனர் மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். வைரமுத்துவிடமும் உதவியாளாராக இருந்துள்ளார்.

    இவர் 'கண்ணும் கண்ணும்', 'புலிவால்' உள்ளிட்ட 2 படங்களை இயக்கினார். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'யுத்தம்' செய் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மாரிமுத்து 20-க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

    நடிகர் மாரிமுத்து (58) இன்று காலை மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடலுக்கு எதிர் நீச்சல் நடிகர்கள், நடிகர் சங்கத் தலைவர் நாசர், சரத்குமார், இயக்குனர் வசந்த், வையாபுரி, லிவிங்ஸ்டன், ரோபோ சங்கர், செண்ட்ராயன் மற்றும் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

    இந்த நிலையில், இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா மறைந்த நடிகர் மாரிமுத்து உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

    • ’எதிர்நீச்சல்’ தொடரின் டப்பிங் பணியில் ஈடுப்பட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்து காலமானார்.
    • இவர் மறைவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    'எதிர்நீச்சல்' என்ற சின்னத்திரை தொடர் மூலம் பெண்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து. இவர் தொலைக்காட்சி தொடர் மட்டுமல்லாமல் 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார். இவர் சீமான், மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். வைரமுத்துவிடமும் உதவியாளாராக இருந்துள்ளார்.

    நடிகர் மாரிமுத்து (58) இன்று காலை 'எதிர்நீச்சல்' தொடரின் டப்பிங் பணியில் ஈடுப்பட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவர் மறைவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கல் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இயக்குனர் மாரிசெல்வராஜ், நடிகர் மாரிமுத்து உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில் மாரிமுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் மாரிமுத்து இன்று மாரடைப்பால் காலமானார்.
    • இவரது உடலுக்கு பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    'எதிர்நீச்சல்' என்ற சின்னத்திரை தொடர் மூலம் பெண்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து. இவர் தொலைக்காட்சி தொடர் மட்டுமல்லாமல் 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார். இவர் சீமான், மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். வைரமுத்துவிடமும் உதவியாளாராக இருந்துள்ளார்.

    நடிகர் மாரிமுத்து (58) இன்று காலை 'எதிர்நீச்சல்' தொடரின் டப்பிங் பணியில் ஈடுப்பட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவர் மறைவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "திரைப்பட இயக்குநரும், நடிகருமான அண்ணன் மாரிமுத்து அவர்களின் மரணம் அதிர்ச்சியையும், மன வேதனையையும் தருகிறது. அவருடைய மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் காலமானார்.
    • இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நடிகர் மாரிமுத்து 'எதிர் நீச்சல்' தொலைக்காட்சி தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் இயக்குனர் மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். வைரமுத்துவிடமும் உதவியாளாராக இருந்துள்ளார். இவர் 'கண்ணும் கண்ணும்', 'புலிவால்' உள்ளிட்ட 2 படங்களை இயக்கினார்.

    இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'யுத்தம் செய்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மாரிமுத்து 20-க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

    நடிகர் மாரிமுத்து (58) இன்று காலை மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், மாரிமுத்துவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் காலமானார்.
    • இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நடிகர் மாரிமுத்து 'எதிர் நீச்சல்' தொலைக்காட்சி தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். இதில் இவர் பேசும் 'அட எம்மா ஏய்' வசனம் பட்டி தொட்டி எங்கும் பரவியுள்ளது. இவர் இயக்குனர் மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். வைரமுத்துவிடமும் உதவியாளாராக இருந்துள்ளார்.

    இவர் 'கண்ணும் கண்ணும்', 'புலிவால்' உள்ளிட்ட 2 படங்களை இயக்கினார். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'யுத்தம்' செய் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மாரிமுத்து 20-க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

    நடிகர் மாரிமுத்து (58) இன்று காலை மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இவரது உடலுக்கு எதிர் நீச்சல் நடிகர்கள், நடிகர் சங்கத் தலைவர் நாசர், சரத்குமார், இயக்குனர் வசந்த், வையாபுரி, லிவிங்ஸ்டன், ரோபோ சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், செண்ட்ராயன் மற்றும் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

    • நடிகர் மாரிமுத்து, கவிஞர் வைரமுத்துவிடமும் உதவியாளாராக இருந்துள்ளார்.
    • மாரிமுத்து 20-க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    நடிகர் மாரிமுத்து 'எதிர் நீச்சல்' தொலைக்காட்சி தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். இதில் இவர் பேசும் 'அட எம்மா ஏய்' வசனம் பட்டி தொட்டி எங்கும் பரவியுள்ளது. இவர் இயக்குனர் மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். வைரமுத்துவிடமும் உதவியாளாராக இருந்துள்ளார்.

    இவர் 'கண்ணும் கண்ணும்', 'புலிவால்' உள்ளிட்ட 2 படங்களை இயக்கினார். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'யுத்தம்' செய் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மாரிமுத்து 20-க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பாராட்டை பெற்றது.

    நடிகர் மாரிமுத்து (58) இன்று காலை மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கவிஞர் வைரமுத்து நடிகர் மாரிமுத்துவிற்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தம்பி மாரிமுத்துவின்

    மரணச் செய்தி கேட்டு

    என் உடம்பு ஒருகணம்

    ஆடி அடங்கியது

    சிகரத்தை நோக்கிச்

    சென்றுகொண்டிருந்தவனை

    மரணத்தின் பள்ளத்தாக்கு

    விழுங்கிவிட்டது

    என் கவிதைகளின்

    உயிருள்ள ஒலிப்பேழை அவன்

    என் உதவியாளராய் இருந்து

    நான் சொல்லச் சொல்ல எழுதியவன்

    தேனியில் நான்தான்

    திருமணம் செய்துவைத்தேன்

    இன்று அவன்மீது

    இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு

    இதயம் உடைகிறேன்

    குடும்பத்துக்கும்

    கலை அன்பர்களுக்கும்

    கண்ணீரைத் துடைத்துக்கொண்டே

    ஆறுதல் சொல்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வந்தவர் மாரிமுத்து.
    • இவர் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தொலைக்காட்சி தொடர்களில் கலக்கி வரும் பிரபல நடிகரான மாரிமுத்து 'எதிர் நீச்சல்' என்ற தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். இதில் இவர் பேசும் 'அட எம்மா ஏய்' வசனம் பட்டி தொட்டி எங்கும் பரவியுள்ளது. இவர் இயக்குனர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு 'கண்ணும் கண்ணும்' 2014-ஆம் ஆண்டு 'புலிவால்' உள்ளிட்ட 2 படங்களை இயக்கினார். 

    இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'யுத்தம்' செய் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பாராட்டை பெற்றது.

    இந்நிலையில், நடிகர் மாரிமுத்து (58) இன்று காலை மாரடைப்பால் காலமானார். அதாவது, 'எதிர் நீச்சல்' தொடரின் டப்பிங் பேசிக்கொண்டிருந்த திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    நடிகர் மாரிமுத்துவின் உடல் இன்று மாலை வரை சென்னையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்று இரவு அவரது சொந்த ஊரான மதுரை, தேனி மாவட்டம் வருச நாட்டுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. அங்கு இவரது இறுதி சடங்குகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜீவா, பரியேறும் பெருமாள், கொம்பன் என பல்வேறு படங்களிலும் நடித்துள்ளவர் மாரிமுத்து.
    • சமூக வலைத்தளத்தில் மாரிமுத்து போன்று பதிவிட்டிருப்பது பேசு பொருளாகியது.

    இயக்குனர்கள் வசந்த், எஸ்.ஜே.சூர்யா, மணிரத்னம், சீமான் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மாரிமுத்து. வசந்த்திடம் ஆசை, ரிதம் உள்ளிட்ட நான்கு படங்களிலும், எஸ்.ஜே.சூர்யாவிடம் வாலி படத்திலும், சீமானின் முதல் படமான பாஞ்சாலாங்குறிச்சியிலும், மணிரத்னத்திடம் பாம்பே உள்ளிட்ட படத்திலும் வேலை மாரிமுத்து செய்திருக்கிறார். பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், விமல் நடிப்பில் புலிவால், உள்பட சில திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் ஜீவா, பரியேறும் பெருமாள், கொம்பன் என பல்வேறு படங்களிலும் தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் 18+ கண்டெண்ட்டுகளை போடும் கணக்கு ஒன்றிலிருந்து, அரைகுறை ஆடையுடன் இருக்கும் பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்டு "Can I call you" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு நடிகர் மாரிமுத்துவின் பெயருடன் கூடிய கணக்கில் இருந்து உடனடியாக ரிப்ளை வந்ததை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த ரிப்ளையில் "yes" என பதிலளித்து மாரிமுத்துவின் மொபைல் நம்பரும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த நம்பர் ட்ரூ காலரில் தேடிப்பார்த்து அது அவரது நம்பர் என உறுதியானதால் ரசிகர்கள் பலரும் அதிரிக்குள்ளானர்.

    இந்நிலையில், இதற்கு மாரிமுத்துவின் மகன் அகிலன் சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அந்தப் பதிவில், கமெண்ட் செய்திருப்பது எனது தந்தையின் அக்கவுண்ட் கிடையாது. அவரின் போன் நம்பர் பெரும்பாலானோருக்கு தெரியும். அதனால் யாரோ அதனை தவறாக பயன்படுத்தியிருக்கின்றனர்" என குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த விளக்கத்துக்கு பின்னர் அந்த போலி பதிவு நீக்கப்பட்டுள்ளது.

    ×