என் மலர்
நீங்கள் தேடியது "மின்கோபுர விளக்கு"
- உயர் மின் கோபுர விளக்குகள் பல நாட்களாக பழுதடைந்து எரியாமல் இருந்தது.
- அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்ற "மாலைமலர் " நாளிதழுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
பல்லடம் :
பல்லடம் நால்ரோடுமற்றும் பல்லடம் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் உயர் மின் கோபுர விளக்குகள் பல நாட்களாக பழுதடைந்து எரியாமல் இருந்தது.இதனால் அந்தப் பகுதிகளில் இருள் சூழ்ந்து பொதுமக்கள் அவதிப்படுவதாக "மாலைமலர் " நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.இச்செய்தியின் எதிரொலியாக நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, நேற்று உயர் மின் கோபுர விளக்குகள் பழுதுபார்க்கப்பட்டது.
நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் செய்தி வெளியிட்டு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்ற "மாலைமலர் " நாளிதழுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டு இயங்கி வந்தது.
- தற்போது உயர்மின் கோபுர விளக்கு பழுது அடைந்து விட்டதால் இயங்கவில்லை.
திருவோணம்:
திருவோணம் கடைவீதியில் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டு இயங்கி வந்தது கடந்த சில மாதங்களாக உயர்மின் கோபுர விளக்கு பழுது அடைந்து விட்டதால் இயங்கவில்லை இதனால் திருவோணம் கடைவீதி முழுவதும் இரவு நேரங்களில் இருளில் மூழ்கியுள்ளது.
மேலும் திருச்சி, பட்டுக்கோ ட்டை சாலைகளில் கனரக வாகனங்கள் வேகமாய் செல்வதால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இரவு நேரங்களில் சாலையை கடக்கும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதுஎனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உயர் மின் கோபுர விளக்கை சரி செய்து சரியான முறையில் இயக்கப்பட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் சமூக ஆர்வலர்கள், மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்,