என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
திருவோணம் கடைவீதியில் பழுதான மின் கோபுர விளக்கு சீரமைக்கப்படுமா?
Byமாலை மலர்2 March 2023 3:09 PM IST
- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டு இயங்கி வந்தது.
- தற்போது உயர்மின் கோபுர விளக்கு பழுது அடைந்து விட்டதால் இயங்கவில்லை.
திருவோணம்:
திருவோணம் கடைவீதியில் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டு இயங்கி வந்தது கடந்த சில மாதங்களாக உயர்மின் கோபுர விளக்கு பழுது அடைந்து விட்டதால் இயங்கவில்லை இதனால் திருவோணம் கடைவீதி முழுவதும் இரவு நேரங்களில் இருளில் மூழ்கியுள்ளது.
மேலும் திருச்சி, பட்டுக்கோ ட்டை சாலைகளில் கனரக வாகனங்கள் வேகமாய் செல்வதால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இரவு நேரங்களில் சாலையை கடக்கும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதுஎனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உயர் மின் கோபுர விளக்கை சரி செய்து சரியான முறையில் இயக்கப்பட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் சமூக ஆர்வலர்கள், மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்,
Next Story
×
X