என் மலர்
நீங்கள் தேடியது "தேசிங்கு பெரியசாமி"
- நடிகர் சிம்பு புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
- இந்த படத்திற்கு தற்காலிகமாக STR 48 என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு, பத்து தல படத்தின் வெற்றிக்கு பிறகு 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இ்ப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எஸ்.டி.ஆர்.48 போஸ்டர்
இந்நிலையில், சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு 'எஸ்.டி.ஆர். 48' படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அனல் பறக்க இரண்டு சிம்பு நேருக்கு நேர் பார்த்து நிற்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
அன்புத் தம்பி @SilambarasanTR_ அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.#STR48 #BLOODandBATTLE@desingh_dp #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/SnqR4dU84x
— Kamal Haasan (@ikamalhaasan) February 2, 2024
- இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகும் புதிய படம் "ஹிட் லிஸ்ட்".
- இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திர கனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகும் புதிய படம் "ஹிட் லிஸ்ட்". கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை சூர்ய கதிர் இயக்குகிறார். இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திர கனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் தேசிங்கு பெரியசாமி, பொன்ராம், மித்ரன் ஆர் ஜவஹர், கார்த்திக் சுப்பராஜ், சிறுத்தை சிவா, பேரரசு, கதிர், சரண், எழில், இராஜ குமாரன், சுப்ரமணியம் சிவா, வசந்த பாலன், மிஷ்கின், ஆர்.வி. உதயகுமார், பி. வாசு ஆகியோர் கலந்து கொண்டனர். சமீபத்தில் படக்குழுவை நடிகர் விஜய் , சூர்யா உள்ளிட்டோர் பாராட்டினர்.
இந்நிலையில் படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது எகஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டிரைலர் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. ஒரு சைக்கோ கொலைக்காரன் வித்தியாசமான முறையில் கதாநாயகனின் குடும்பத்தை கொலை செய்கிறான். அதை எப்படி கதாநாயகன் காப்பாற்றுகிறார் போன்ற காட்சிகள் டிரைலரில் இடம்பெற்றுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிவகார்த்திகேயன் அயலான் படத்திற்கு பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்துள்ளார்.
- அமரன் படத்தில் சிவகார்த்தியேகன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
சிவகார்த்திகேயன் அயலான் படத்திற்கு பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவுக்கு விருந்தளித்தார்.
அமரன் படத்தில் சிவகார்த்தியேன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்ற வாரம் முடிவடைந்த நிலையில் . படத்தில் பணியாற்றியவர்களுக்கு கறி விருந்து சிவகார்த்திகேயன் அளித்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
மேலும் படத்தின் உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் ஃபாசில் நிறுவன வாட்சை பரிசளித்தார். தற்பொழுது படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அமரன் படத்தை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் #Sk 23 படத்திலும் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பணிகளும் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் அவரது மனைவி ஆர்த்தியுடன் குடும்ப உறவினரின் பிறந்தநாள் விழாவில் கலந்துக்கொண்டார்.

இந்த வீடியோவில் ஆர்த்தி கர்ப்பமான வயிறுடன் காணப்படுகிறார். இதனால் இன்னும் சில மாதத்தில் சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவது குழந்தை பிறக்க போகிறது என உறுதியாகியுள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு மகள் 'ஆராதனா' மற்றும் மகன் 'குகன்' உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆர்த்தியும் குழந்தையும் நலமாக உள்ளனர்.
- அன்பையும், ஆசியும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறோம்.
சிவகார்த்திகேயன் அயலான் படத்திற்கு பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவுக்கு விருந்தளித்தார்.
அமரன் படத்தை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் #Sk 23 படத்திலும் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பணிகளும் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் அவரது மனைவி ஆர்த்தியுடன் குடும்ப உறவினரின் பிறந்தநாள் விழாவில் கலந்துக்கொண்டார்.
இந்த வீடியோவில் ஆர்த்தி கர்ப்பமான வயிறுடன் காணப்பட்டார். இதனால் இன்னும் சில மாதத்தில் சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவது குழந்தை பிறக்க போகிறது என்ற தகவல்கள் தீ போல பரவின.
இந்நிலையில், தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அதில், "எங்களுக்கு நேற்று இரவு (ஜூன் 2) ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவிற்கும் குகனிற்கும் நீங்கள் தந்த அன்பையும், ஆசியும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு மகள் 'ஆராதனா' மற்றும் மகன் 'குகன்' உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படக்குழுவினருக்கு சிம்பு பிரியாணி விருந்து கொடுத்துள்ளார்.
- புகைப்படங்களை அஸ்வத் மாரிமுத்து தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்.டி.ஆர்.48 என்ற படத்தில் சிம்பு நடித்து வருகிறார். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் 'தக்லைப்' படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம், கமல்ஹாசன் ஆகியோர் தக்லைப் படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சமீபத்தில் டெல்லியில் நடந்த படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, நாசர் ஆகியோர் இணைந்து நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.
இந்நிலையில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து பிறந்தநாளையொட்டி படக்குழுவினருக்கு சிம்பு பிரியாணி விருந்து கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை அஸ்வத் மாரிமுத்து தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தற்பொழுது மணி ரத்னம் இயக்கத்தில் 'தக் லைஃப்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார்.
சிம்பு 'பத்து தல' திரைப்படத்திற்கு பிறகு தற்பொழுது மணி ரத்னம் இயக்கத்தில் 'தக் லைஃப்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக நடிப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியது.
இதற்கிடையில் சிம்பு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். இந்த படத்தை கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது ஒரு பீரியாடிக் கதைக்களத்துடன், சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார். தக் லஃப் படப்பிடிப்பை முடித்துவிட்டு STR48 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு.
இந்நிலையில் சிம்புவின் 50 - வது திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியது. சுதா கொங்கரா தற்பொழுது பாலிவுட்டில் சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கை எடுத்து முடித்து வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கடுத்து கொம்பலே பிலிம்ஸ் நிறுவனத்துடன் படம் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் ஏற்கனவே கமிட் ஆகியிருக்கும் படங்களை முடித்துவிட்டு சிம்புவின் 50- வது திரைப்படத்தை இயக்குவார் என நம்பப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- திரைப்படம் இதுவரை 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
- நடிகர் சிம்புவின் 48 ஆவது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான படம் லப்பர் பந்து. இந்த படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக லப்பர் பந்து திரைப்படம் மூன்றாவது வாரம் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. திரைப்படம் இதுவரை 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
லப்பர் பந்து திரைப்படம் வருகிற 31 ஆம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.இந்நிலையில் படக்குழுவை நேரில் அழைத்து நடிகர் சிம்பு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். தமிழரசன் இயக்குனர், நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை சஞ்சனா ஆகியோர் சிம்புவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.

சிம்புவை சந்தித்த புகைப்படத்தை நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது சமூக வளைதள பக்கத்தில் பகிர்ந்து சிம்புவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் சிம்புவின் 48 ஆவது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்ததக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தக் லைஃப்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- படம் கைவிடப்பட்டதாகவே பலரும் நினைத்தனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். இவர் நடிப்பில் வெளியான "பத்து தல" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் சிம்பு இயக்குநர் மணி ரத்னம் இயக்கியுள்ள "தக் லைஃப்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடிப்பதாக பல முறை தகவல்கள் வெளியாகின. பின்னர், இந்த தகவல்களில் உண்மை இல்லை என்றும் கூறப்பட்டது. இதனால் சிம்பு மற்றும் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படம் கைவிடப்பட்டதாகவே பலரும் நினைத்தனர்.
இந்த நிலையில், நடிகர் சிம்பு மற்றும் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இயக்குநர் தேசிங் பெரியசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.