search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது விற்ற பெண்"

    • ஊத்தங்கரை போலீசார் கல்லூர் நாராயண நகர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • மொத்தம் மதுவிற்றதாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை போலீசார் கல்லூர் நாராயண நகர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது உரிய அனுமதியில்லாமல் மதுவிற்பனை செய்த பிரவின் (வயது29), சொரணம் (51) ஆக இருவரையும் கைது செய்து இவர்களிடமிருந்து 8 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் கல்லாவி போலீசார் கல்லாவி பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ளும் போது மது விற்பனை செய்த கீதாவை கைது செய்து அவரிடம் இரண்டு பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.

    சிங்காரப்பேட்டை பகுதியில் வேலன் (21), விக்னேஷ் ஆகிய பேர் தடை செய்யப்பட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. சாமல்பட்டி போலீசார் ரோந்து பணி மேற்கொள்ளும் போது மதுவிற்றதாக லலிதா, சேட்டு, முனிராவு ஆகியோரை கைது செய்தனர். மொத்தம் மதுவிற்றதாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
    • மாவட்டத்தில் போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபி, பெருந்துறை, சத்தி போன்ற 5 போலீஸ் சப்-டிவிசன் பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன், சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இதன்பேரில், மாவட்டத்தில் போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர்.

    இதில், சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக பெருந்துறையில் கருப்புசாமி(58), மோகன்ராஜ்(35), கடத்தூரில் மருதாசலம் (47), பொங்கியண்ணன்(35), பவானியில் பார்த்திபன்(40), வைரவேல்(39), அழகேசன் மனைவி கோமதி(38), கவுந்தப்பாடியில் பிரகாஷ்(40), கார்த்திக்(27) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 74 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ×