என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நவாசுதீன் சித்திக்"
- திருமணத்திற்கு பிறகு தம்பதிகளிடையே காதல் நின்றுவிடும்.
- எதிர்பாராத விதமாக நிறைய விஷயங்கள் நடக்கின்றன.
பிரபல இந்தி வில்லன் நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் தமிழில் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். இவர் ஆலியா என்பவரை திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் நவாசுதீன் தன்னை அடித்து துன்புறுத்தியதாக ஆலியாவும், தன்னிடம் பணம் பறிக்க முயற்சிப்பதாக ஆலியா மீது நவாசுதீனும் மாறி மாறி புகார் அளித்து பரபரப்பு ஏற்படுத்தினர்.
பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே கடந்த மார்ச் மாதம் நவாசுதீன் சித்திக் மற்றும் மனைவி ஆலியா இருவரும் மனக்கசப்புகளை மறந்து ஒன்றாக இணைந்தனர். 'குழந்தைகளுக்காக ஒன்றாக இணைந்திருக்கிறோம்' என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில் 'திருமணத்திற்கு பிறகு தம்பதிகளிடையே காதல் நின்றுவிடும்' என்று நடிகர் நவாசுதீன் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, "திருமணத்திற்கு பிறகு இருவரிடையே இருக்கும் நேசம் குறைய தொடங்குகிறது. எதிர்பாராத விதமாக நிறைய விஷயங்கள் நடக்கின்றன. எனவே நீங்கள் யாரையாவது காதலித்தாலோ, தொடர்ந்து காதலிக்க விரும்பினாலோ திருமணம் செய்து கொள்ளாதீர்கள்'' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஹட்டி அழுத்தமான களத்தில் உணர்வுப்பூர்வமான கதையாக இருக்கும்.
- இதன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகர் நவாசுதீன் சித்திக் இணைந்து நடித்துள்ள, ரிவென்ஜ் டிராமா கதையம்சம் கொண்ட "ஹட்டி" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அக்ஷத் அஜய் சர்மா இயக்கியுள்ள இந்த நேரடி-டிஜிட்டல் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாக இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் நவாசுதீன் சித்திக் திருநங்கையாக நடித்திருக்கிறார். இது தொடர்பான போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. போஸ்டரின்படி நவாசுதீன் சித்திக் அடையாளம் காண முடியாத அவதாரத்தில் பார்த்த ரசிகர்கள், உண்மையில் இது அவர்தானா என ஆச்சரியத்தில் உள்ளனர்.
ஹட்டி குறித்து அனுராக் காஷ்யப் கூறும் போது, "ஹட்டியை உருவாக்க அக்ஷத் மற்றும் அவர் குழு உழைத்த கடின உழைப்பைக் கண்டு, நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அக்ஷத் எனக்குப் பல வருடங்களாக உதவி இயக்குநராக இருந்துள்ளார். இயக்குநராக அவர் அறிமுகமான படத்திலேயே நடிகராக முன் வரிசையில் இடம் பெறும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்துள்ளது."
"ஹட்டி அழுத்தமான களத்தில் உணர்வுப்பூர்வமான கதையாக இருக்கும். மேலும் நீங்கள் இதுவரை பார்த்திராத உலகைக் காட்டும். இந்த புதிய உலகத்தில் நவாஸை கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள். இந்த படத்தின் வெளியீட்டிற்காக நான் காத்திருக்கிறேன், பார்வையாளர்கள் கண்டிப்பாக இப்படத்தை ரசிப்பார்கள் என நம்புகிறேன்," என்று தெரிவித்தார்.
- ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் மிகவும் பிரபலமானவர் நவாசுதீன் சித்திக்.
- இவருடைய முன்னாள் மனைவி மீது குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழில் 'பேட்ட' படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்தவர் நவாசுதீன் சித்திக். இந்தியில் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கிறார். நவாசுதீன் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வெளியே அனுப்பி விட்டதாகவும் அவரது முன்னாள் மனைவி அலியா குற்றம் சாட்டி இருந்தார். போலீசிலும் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து நவாசுதீன் சித்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் அமைதியாக இருப்பதால் கெட்டவனாக பார்க்கிறார்கள். நானும், அலியாவும் ஏற்கனவே விவாகரத்து செய்து விட்டோம். குழந்தைகளுக்காக எங்களுக்குள் ஒரு புரிந்துணர்வு இருந்தது. எனது குழந்தைகளை 45 நாட்களாக பள்ளிக்கு அனுப்பவில்லை. பணத்துக்காக பிள்ளைகளை அலியா துபாயில் இருந்து இந்தியா அழைத்து வந்து இருக்கிறார். குழந்தைகள் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டு உள்ளனர். அலியாவுக்கு மாதம் ரூ.10 லட்சம் கொடுத்து வருகிறேன்.
கல்வி, மருத்துவம் உள்பட அனைத்து செலவுகளையும் கவனிக்கிறேன். துபாய் செல்வதற்கு முன்பு மாதம் ரூ.5 முதல் 7 லட்சம் வரை கொடுத்தேன். சொகுசு கார்கள் வாங்கி கொடுத்தேன். அவற்றை விற்று விட்டார். துபாயில் அலியா தங்கி உள்ள வீட்டுக்கு வாடகை கொடுக்கிறேன். அலியாவுக்கு பணம்தான் முக்கியம். பணம் பறிக்க என்மீது வழக்குகளை போட்டு இருக்கிறார். என்னை மிரட்டுகிறார். சட்டத்தை நம்புகிறேன். வழக்குகளில் வெல்வேன்'' என்று கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்