search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டேனியல் பாலாஜி"

    • கடந்த மார்ச் 29 ஆம் தேதி டேனியல் பாலாஜி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
    • நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

    தனித்துவமான நடிப்பின்மூலம் யாரும் மறக்க முடியாத வில்லன் நடிகராக வலம் வந்தவர் டேனியல் பாலாஜி (48). வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் முதல் வட சென்னை படம் வரை தனது நடிப்பால் தனியான முத்திரை பதித்தவர் இவர். கடந்த மார்ச் 29 ஆம் தேதி டேனியல் பாலாஜி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

    இந்நிலையில் டேனியல் பாலாஜி கடைசியாக நடித்த "BP180" படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. ATUL INDIA MOVIES சார்பில் அதுல் M போஸ்மியா தயாரிதுள்ள இப்படத்தை இயக்குநர் ஜேபி இயக்கியுள்ளார். நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் டேனியல் பாலாஜி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தான்யா மற்றும் டானியல் வாலாஜி இடம்பெற்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. மருத்துவத்துறையில் நடக்கும் பிரச்சனைகளைப் பற்றிய படமாக BP 180 இருக்கும் என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் விரைவில் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்காடுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் ஜேபி இயக்கத்தில், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், உருவாகும் புதிய படம் "BP180"
    • இப்படத்தில் மறைந்த டேனியல் பாலாஜி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ATUL INDIA MOVIES சார்பில் தயாரிப்பாளர் அதுல் M போஸ்மியா வழங்கும், இயக்குநர் ஜேபி இயக்கத்தில், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், உருவாகும் புதிய படம் "BP180". இப்படத்தில் மறைந்த டேனியல் பாலாஜி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்தப் படத்தின் தயாரிப்பாளரான அதுல் போசாமியா கனத்த இதயத்துடன் அஞ்சலி குறிப்பை வெளியிட்டார். அதில்

    அன்புள்ள டேனியல்,

    அதுல் இந்தியா மூவிஸ் ஆழ்ந்த வருத்தத்துடனும் கனத்த இதயத்துடனும் தனித்துவமான நடிகர் மற்றும் ஒரு நல்ல மனிதருக்கு பிரியாவிடை கொடுக்க இந்த அஞ்சலி குறிப்பை எழுதுகிறோம். உங்களது இந்த திடீர் மறைவு சினிமா உலகில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் திறமை, ஆர்வம் மற்றும் உங்கள் கதாபாத்திரத்திற்காக நீங்கள் கொடுத்த அர்ப்பணிப்பு ரசிகர்கள் உட்பட பலரது மனதிலும் அழியாத இடத்தை விட்டு சென்றிருக்கிறது.

    உங்களது கடைசி திரைப்படமான 'பிபி 180' இன் தயாரிப்பாளர் என்ற முறையில் கதாபாத்திரங்களை ஆழமாகவும், நுணுக்கமாகவும், நம்பகத்தன்மையுடனும் திரையில் கொண்டு வருவதற்காக எந்த அளவுக்கு நீங்கள் இணையற்ற அர்ப்பணிப்பை கொடுக்கிறீர்கள் என்பதை நேரடியாக காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. திரையில் உங்கள் நடிப்பு எப்போதும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும். உங்கள் சொந்த சேமிப்பில் நீங்கள் ஆவடியில் கோயில் கட்டி இருக்கிறீர்கள் என்ற விஷயம் அறிந்து நாங்கள் வியந்தோம். உங்களுடன் கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. இந்த கோயில் இல்லாமல் இன்னும் இரண்டு கோயில்கள் கட்ட வேண்டும் என்று விரும்பினீர்கள். ஒன்று சிவனுக்கு, இன்னொன்று லட்சுமிக்கு. கடந்த மாதம் நீங்கள் குஜராத்துக்குச் சென்றிருந்தீர்கள். அப்போது உடன் வந்த நாங்களும் சோம்நாத் ஜோதிர்லிங் மற்றும் ஸ்தம்பேஷ்வர் மஹாதேவ் ஆகிய இடங்களை தரிசித்தோம். அங்கு நீங்கள் ருத்ர அபிஷேகம் செய்தீர்கள்.

     

    உங்கள் எல்லைக் கடந்த திறமைக்கு அப்பால், நீங்கள் ஒரு கனிவான மற்றும் கருணையான நபர். எப்போதும் உதவிக் கரம் நீட்டவும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் ஞானத்தைப் பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருந்தீர்கள். படப்பிடிப்புத் தளத்தில் எங்களுடைய சோர்ந்து போன நாட்களைக் கூட ஒளிரச் செய்தது உங்கள் இருப்பு. மேலும், உங்கள் சிரிப்பு உங்களுடன் பணிபுரிந்த அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

     

    நீங்கள் இனி உடலால் எங்களுடன் இல்லாவிட்டாலும், உங்கள் கலைத்திறனால் நீங்கள் நடித்த கதாபாத்திரங்கள் மூலம் என்றும் வாழ்வீர்கள். நம் காலத்தின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக இனிவரும் தலைமுறைக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருப்பீர்கள்.

    அன்புள்ள டேனியல், நிம்மதியாக ஓய்வெடுங்கள். உங்கள் மீதான அன்பும் உங்கள் நினைவும் எங்கள் இதயங்களில் ஒருபோதும் குறையாது.

    ஆழ்ந்த அனுதாபங்களுடனும் என்றென்றும் நன்றியுடனும்,

    அதுல் போசாமியா   

    என  குறிப்பிட்டுள்ளார் .

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இளவயது மரணங்களின் வேதனை பெரிது.
    • பாலாஜியின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    சென்னை :

    நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது.

    இளவயது மரணங்களின் வேதனை பெரிது. பாலாஜியின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    கண் தானம் செய்ததனால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி என தெரிவித்துள்ளார்.

    • டேனியல் பாலாஜியின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட உள்ளது.
    • டேனியல் பாலாஜியின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    தென்னிந்திய திரையுலகில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி யாரும் மறக்க முடியாத வில்லன் நடிகராக வலம் வந்த டேனியல் பாலாஜி (48) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

    மாரடைப்பு காரணமாக கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டேனியல் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டு, அஞ்சலிக்காக புரசைவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

    டேனியல் பாலாஜியின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கண்கள் தானம் செய்ததன் மூலம் நிஜ வாழ்க்கையில் டேனியல் பாலாஜி நாயகனாகவே திகழ்கிறார்.

    • பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
    • இவர் நடித்த வில்லன் பாத்திரங்களுக்கென தனி ரசிகர்கள் உண்டு.

    தென்னிந்திய திரையுலகில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி யாரும் மறக்க முடியாத வில்லன் நடிகராக வலம் வந்தவர் டேனியல் பாலாஜி. சித்தி நாடகத்தில் நடிகராக அறிமுகமான இவர் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

    காக்க காக்க படத்தில் ஸ்ரீகாந்த், வேட்டையாடு விளையாடு படத்தில் அமுதன் சுகுமாறன் என இவர் நடித்த வில்லன் கதாபாத்திரங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

    இந்த நிலையில், மாரடைப்பு காரணமாக கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டேனியல் பாலாஜி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். 

    • காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வடசென்னை, பிகில், அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் டேனியல் பாலாஜி.
    • இவர் தற்போது தனது அம்மாவின் ஆசைக்காக கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார்.

    காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வடசென்னை, பிகில், அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் டேனியல் பாலாஜி. வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வரும் டேனியல் பாலாஜி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மித்ரன் ஜவகர் இயக்கத்தில் வெளியான அரியவன் படத்தில் நடித்திருந்தார். தற்போது அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

     

    டேனியல் பாலாஜி - ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன்

    டேனியல் பாலாஜி - ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன்


    இந்நிலையில் டேனியல் பாலாஜி சென்னைக்கு அருகிலுள்ள ஆவடி பகுதியில் ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலை கட்டி இன்று கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார். இந்த விழாவிற்கு பொதுமக்கள் பலரும் கலந்துக் கொண்டு அம்மனை வழிப்பட்டனர். தனது அம்மாவின் ஆசைக்காக டேனியல் பாலாஜி இந்த கோயில் கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



    ×