search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாந்தனு"

    • மகாராஜா திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்தது.
    • 2024 இல் நெட்பிளிக்ஸ்சில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற பெருமையை மகாராஜா பெற்றுள்ளது.

    குரங்கு பொம்மை இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியை நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    விஜய் சேதுபதியின் 50- வது திரைப்படமான மகாராஜா கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகி 100 கோடி வசூலைத் தாண்டியது.

    படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த ஜூலை 12 ஆம் தேதி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்சில் மகாராஜா வெளியிடப்பட்டது. இதன்மூலம் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் மகாராஜா கவனம் ஈர்த்தது.

    நெட்பிளிக்ஸ் கமன்ட் செக்ஷனில் வெளிநாட்டவர்கள் மகாராஜாவை புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் 2024 இல் நெட்பிளிக்ஸ்சில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற பெருமையை மகாராஜா பெற்றுள்ளது. உலகம் முழுவதிலும் நெட்பிளிக்ஸ்சில் சுமார் 18.6 மில்லியன் பேர் மகாராஜா படத்தைப் பார்த்துள்ளனர்.

    மேலும் ரிலீசாகி 6 வாரங்கள் ஆகியும் உலகம் முழுவதிலும் சுமார் 8 நாடுகளில் டாப் 10 வரிசையில் மகாராஜா டிரெண்டிங்கில் உள்ளது.

    இந்நிலையில், மகாராஜா படத்தில் நடிக்க முதலில் சாந்தனுவை அணுகியதாக அப்பட இயக்குநர் நித்திலன் தெரிவித்திருந்தது பரபரப்பாக பேசப்பட்டது.

    இதனையடுத்து, மகாராஜா படத்தை சாந்தனு தவறவிட பாக்யராஜ் தான் காரணம் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது.

    இந்நிலையில் இது குறித்து நடிகர் சாந்தனு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "மகாராஜா போல் ஒரு சிறந்த படத்தை கொடுத்ததிற்கு இயக்குநர் நித்திலன் சாமிநாதனுக்கு நன்றி. என்னை முதலில் இந்த கதைக்கு தேர்வு செய்ததில் மிகவும் மகிழ்ச்சி. மேலும், இந்த படத்தை நான் மிஸ் செய்ததிற்கு என் அப்பாவோ இல்லை நானோ காரணம் இல்லை. அப்பாவிற்கு இயக்குநர் என்னிடம் வந்து கதை சொன்னது தெரியாது. அந்த சமயத்தில் தயாரிப்பு நிறுவனம் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை அதனால் தான் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது" என்று தெரிவித்துள்ளார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முதலில் களமிறங்கிய இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் குவித்தது.
    • இந்த வெற்றியை இந்தியா முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து 398 என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து 48.5 ஓவர்களில் 327 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த வெற்றியை இந்தியா முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் உலகக் கோப்பை தொடரையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


    இந்நிலையில், இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து திரைப்பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்து வருகிறது. அதில், இயக்குனர் வெங்கட் பிரபு, "சாவு பயத்தை காட்டிட்டீங்களே பரமா என்பது போன்று இருந்தது. நீங்கள் யாரை மேன் ஆப்தி மேட்ச் என்று சொல்வீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    மேலும், நடிகர் சாந்தனு, "இந்தியா மீண்டும் ஒரு முறை இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. நன்றி முகமது சமி . 2019-யின் இழப்பு மீட்டெடுக்கப்பட்டது" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.


    • நடிகர் சாந்தனு நடிப்பில் வெளியான திரைப்படம் `இராவண கோட்டம்'.
    • இப்படம் ஜூன் 16-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு, கயல் ஆனந்தி நடிப்பில் வெளியான படம் `இராவண கோட்டம்'. இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் பிரபு, இளவரசு, தீபா ஷங்கர், சஞ்சய் சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் கடந்த மே 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.


    இந்நிலையில், 'இராவண கோட்டம்' திரைப்படம் ராஜஸ்தானில் நடைபெற்ற ஜெய்சால்மர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனர் என இரண்டு பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. இதனை நடிகர் சாந்தனு தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    'இராவண கோட்டம்' திரைப்படம் ஜூன் 16-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `இராவண கோட்டம்'.
    • இப்படத்தில் நடிகர் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `இராவண கோட்டம்'. சாந்தனு நாயகனாக நடித்துள்ள இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

    இப்படம் நாளை (மே 12) திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இராவண கோட்டம் படத்தில் ஒரு சில இனத்தினரை காயப்படுத்தியுள்ளதாக எழுந்துள்ள வதந்திகள் முற்றிலும் பொய்யானது. இப்படம் எவரையும் எந்த வகையிலும் காயப்படுத்தவில்லை என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    இதுதொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், மண் சார்ந்த கதையை, மனிதத்தை, அன்பை விதைக்கும் படைப்பாக மட்டுமே எங்கள் "இராவண கோட்டம்" திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். KRG Group of Companies நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் ஷாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் முழுக்க முழுக்க கற்பனையில் உருவாக்கப்பட்ட கதையாகும். எந்த வகையிலும் இனம், மொழி சார்ந்து யாரையும் காயப்படுத்தும் வகையில் எந்த ஒரு காட்சியும் படத்தில் உருவாக்கப்படவில்லை.

    நேற்று நடந்த பத்திரிகையாளர் முன் வெளியீட்டு காட்சி மற்றும் பிரத்யேக காட்சியில் படம் பார்த்த பத்திரிகை நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் நண்பர்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர் மற்றும் மக்களிடையேயான ஒற்றுமையும் அன்பையும் போற்றும் இப்படத்தின் கருவை அனைவரும் பாராட்டியுள்ளனர்.


    இராவண கோட்டம் அறிக்கை

    படத்தில் ஒரு சில இனத்தினரை காயப்படுத்தியுள்ளதாக எழுந்துள்ள வதந்திகள் முற்றிலும் பொய்யானது. இப்படம் எவரையும் எந்த வகையிலும் காயப்படுத்தவில்லை. தயவுகூர்ந்து வதந்திகளை நம்பி படத்தின் மீது தடை கோருவதும் படத்தை தடுக்கும் நோக்கிலான செயல்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    • விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இராவண கோட்டம்’.
    • இப்படம் வருகிற மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `இராவண கோட்டம்'. சாந்தனு நாயகனாக நடித்துள்ள இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.


    இராவண கோட்டம்

    இராவண கோட்டம்

    இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் `இராவண கோட்டம்' படத்தின் டைட்டில் டிராக் லிரிக்கல் பாடலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இப்படம் வருகிற மே 12ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சாந்தனு நாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘இராவண கோட்டம்’.
    • இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது.

    இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் `இராவண கோட்டம்'. சாந்தனு நாயகனாக நடிக்கும் இந்த படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார். இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். லாரன்ஸ் கிஷோர் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.


    இராவண கோட்டம் போஸ்டர்

    `இராவண கோட்டம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'இராவண கோட்டம்' படத்தின் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாகவும் இதனை நடிகர் சிம்பு வெளியிடவுள்ளதாகவும் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் `இராவண கோட்டம்'.
    • இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    'மதயானை கூட்டம்' படத்திற்கு பிறகு விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் `இராவண கோட்டம்'. சாந்தனு நாயகனாக நடிக்கும் இந்த படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார். இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். லாரன்ஸ் கிஷோர் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.


    இராவண கோட்டம்

    `இராவண கோட்டம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'அத்தனபேர் மத்தியில' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதனை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




    ×