என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹிமந்தா பிஷ்வா ஷர்மா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஹிமந்தா பிஷ்வா ஷர்மாவின் பேச்சு மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    • மோடி இருக்கும் வரை ராகுல் காந்தியால் பிரதமராக முடியாது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளும் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைக்க முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

    காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளும் ஆட்சியை பிடிக்க முயன்று வருகின்றன.

    பா.ஜ.க.வின் தேசியத் தலைவர்கள் கர்நாடக மாநிலத்திற்கு அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்தித்த வண்ணம் உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 மாதங்களில் மட்டும் 5 முறை கர்நாடக மாநிலத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 12-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு முதல் மைசூர் வரையிலான 10 வழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது அவர் பேசுகையில், "என்னை கல்லறை தோண்டி புதைக்க நினைக்கிறது காங்கிரஸ்" என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பா.ஜ.க. சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா ஷர்மா பேசுகையில், "கர்நாடகாவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வரவேண்டும். நமக்கு பாபர் மசூதி தேவை இல்லை. ராமஜென்ம பூமி தான் வேண்டும். மோடி இருக்கும் வரை ராகுல் காந்தியால் பிரதமராக முடியாது" என்று பேசினார்.

    அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஷ்வா ஷர்மாவின் இந்த பேச்சு மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

    ×