search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்துக்குமாரசாமி கோவில்"

    • இந்த பூஜையில் கலந்து கொண்டால் எதிரிகள் விலகி நன்மை கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
    • முருகப்பெருமான் ஆறுமுகம் கொண்டவராக இங்கு காட்சி தருகிறார்.

    திருமண தடை நீக்கும் முத்துக்குமாரசாமி கோவில்!

    கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் முத்துக்குமாரசாமி கோவில் உள்ளது.

    முருகப்பெருமான் ஆறுமுகம் கொண்டவராக இங்கு காட்சி தருகிறார்.

    ஆயிரம் ஆண்டுகள்பழமை வாய்ந்த இந்த கோவில் பல்வேறு பலன்களை தரும் ஸ்தலமாக உள்ளது.

    சுவேதா நதி (வெள்ளாறு), வங்காள விரிகுடா கடலையொட்டி இந்த கோவில் அமைந்திருக்கிறது.

    முத்துக்குமாரசாமி கோவிலில் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் சத்ருசம்கார பூஜை நடத்தப்படுகிறது.

    இந்த பூஜையில் கலந்து கொண்டால் எதிரிகள் விலகி நன்மை கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

    மேலும் திருமண தடை நீங்குதல், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைத்தல், நாகதோஷம் விலகுதல் போன்ற சிறப்புபலன்கள் இந்த கோவிலில் கிடைக்கிறது.

    பதவி இறக்கம் செய்யப்பட்டவர்கள், வேலை இழந்தவர்கள் போன்றோர் முத்துக்குமாரசாமியை வழங்கினால் மீண்டும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    கோவில் தினமும் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    இந்திரன் இங்கு வழிபட்டு அருள் பெற்றதாகவும், இடும்பன் இங்கு வாகனமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    இந்த கோவிலில் நவராத்திரி, கந்தசஷ்டி, திருகார்த்திகை, தைப்பூசம், சிவராத்திரி,பங்குனிஉத்திரம் சிறப்பாக நடைபெறுகிறது.

    கந்தசஷ்டி விழாவின் போது தெய்வானை திருக்கல்யாணமும், தைப்பூச விழாவில் வள்ளி திருக்கல்யாணமும் நடக்கிறது.

    தைப்பூசத்தன்று முருகன் சுவேதா நதிக்கும், மாசி மகத்தன்று வங்காள விரிகுடா கடலுக்கும் சென்று தீர்த்தவாரி செய்கிறார்.

    இமயமலையில் இருப்பதாக சொல்லப்படும் பாபாஜியின் தந்தை சுவேதநாத அய்யர் இந்த கோவிலில் தான் அர்ச்சகராக பணியாற்றினார்.

    இந்த கோவிலில் இருந்து சற்று தூரத்தில் பாபாஜியின் அவதார தல கோவில் அமைந்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள குடவறை கோவில்களில் முத்துக்குமாரசாமி கோவிலும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முத்துக்குமார சுவாமி கோவிலுடன் இணைந்த சாமுண்டீஸ்வரி அறக்கட்டளைக்கு சொந்தமாக தம்புசெட்டி தெருவில் 2,652 சதுரடி கட்டிடம் அமைந்துள்ளது.
    • கட்டிடத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவமனை இயங்கி வந்தது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படியும், அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

    அதன்படி இன்று (சனிக்கிழமை) சென்னை, கந்தக் கோட்டம் முத்துக்குமார சுவாமி கோவிலுடன் இணைந்த சாமுண்டீஸ்வரி அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பீட்டிலான கட்டிடம் மீட்கப்பட்டு கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டு உள்ளது.

    சென்னை, கந்தக்கோட் டம் முத்துக்குமார சுவாமி கோவிலுடன் இணைந்த சாமுண்டீஸ்வரி அறக்கட்டளைக்கு சொந்தமாக தம்புசெட்டி தெருவில் 2,652 சதுரடி கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவமனை இயங்கி வந்தது.

    மனிஷ் பி.ஷா என்பவர் இக்கட்டிடத்தை ஆக்கிர மிப்பு செய்து மருத்துவ பயன்பாட்டை சிதைத்து 12 நபர்களுக்கு உள்வாடகைக்கு விட்டு லாபம் அடைந்து வந்தார்.

    இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் மேல்முறையீட்டு உத்தரவின்படி, சென்னை மாவட்ட உதவி ஆணையர் எம். பாஸ்கரனால் காவல் துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியுடன் இன்று மேற்படி கட்டிடம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.10 கோடியாகும்.

    இந்நிகழ்வின்போது வட்டாட்சியர் (ஆலய நிர்வாகம்) திருவேங்கடம், கோவில் செயல் அலுவலர் நற்சோணை மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    ×