search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோகன் லால்"

    • எம்.டி. வாசுதேவன் மலையாளத்தின் பிரபல திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார்.
    • நேற்று எம்.டி.வாசுதேவனின் 91 பிறந்த நாளை முன்னிட்டு இத்தொடரின் டிரெய்லர் வெளியானது.

    எம்.டி. வாசுதேவன் மலையாளத்தின் பிரபல திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். அசுரவித்து, மஞ்சு, ரண்டமூசம் மற்றும் வாரணாசி ஆகிய படைப்புகளின் மூலம் அறியப்பட்டவர்.

    எம்.டி.வாசுதேவனின் 9 சிறுகதைகளின் அடிப்படையில் ஆந்தலாஜி தொடராக உருவாகியுள்ளது. இந்தத்தொடரில் கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி, பகத் பாசில் உள்ளிட்ட இந்திய சினிமாவின் பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று எம்.டி.வாசுதேவனின் 91 பிறந்த நாளை முன்னிட்டு இத்தொடரின் டிரெய்லர் வெளியானது. சிறந்த நடிகர்கள் நடித்த, 8 இயக்குனர்களால் இயக்கப்பட்ட 9 படங்களில் உள்ள கண்ணோட்டத்தை இந்த டிரெய்லர் வெளிப்படுத்துகிறது.

    "ஒல்லாவும் தீரவும், கடுகண்ணவ ஒரு யாத்ரா, காழ்சா, ஷீலாலிகாதம், வில்பனா, ஷெர்லாக், ஸ்வர்கம் துரக்குண சமயம், அபயம் தீடி வேண்டும், கடல்கட்டு" இந்த 9 படங்களின் தொகுப்பை கொண்டு இந்த 'மனோரதங்கள்' தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

    இத்தொடர் கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலில் பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிலிக்ஸ் வாங்க இருந்தனர் ஆனால் சூழ்நிலை காரணமாக ஜீ5 ஓடிடி தளம் இத்தொடரை வெளியிடவுள்ளது.

    மோகன்லால் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த தொடர் குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 'மனோரதங்கள்' தொடர் அடுத்த மாதம் 15-ம் தேதி ஜீ-5 ல் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

    தொடரின் டிரைலர் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அனைத்து திரை ஜாம்பவாங்கள் ஒன்றாக ஒரே தொடரில் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிரியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய் மற்றும் மோகன்லால் இருவரும் இணைந்து ஜில்லா படத்தில் நடித்தனர்.
    • ஆர்.பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது.

    2014 ஆம் ஆண்டு நேசன் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாள நட்சத்திர நடிகர்களான விஜய் மற்றும் மோகன்லால் இருவரும் இணைந்து ஜில்லா படத்தில் நடித்தனர். இப்படத்தை ஆர்.பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. காஜல் அகர்வால், மஹத், சூரி, நிவேதா தாமஸ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது.

    ஜோ மல்லூரி ஜில்லா திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். அவர் சமீபத்தில் கொடுத்த நேர்காணலில் ஜில்லா படத்தின் போது நடந்த சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

    அவர் கூறியதாவது ஜில்லா படப்பிடிப்பில் போது நடிகர் விஜய், மோகன்லால் மற்றும் மோகன்லாலின் குடும்பம் மற்றும் ஜோ மல்லூரியை அவர் வீட்டில் விருந்து சாப்பிட அழைத்துள்ளார். இரவு 7 மணி அளவில் இவர்கள் விஜய் வீட்டிற்கு சென்றடைந்தனர்.

     

    விஜய், விஜயின் மனைவி மற்றும் 2 பிள்ளைகள் இவர்களை அன்பாக வரவேற்த பின் விஜய் அனைவருக்கும் உணவுகளை பரிமாறினார். மோகன்லால் எத்தனை முறை கூறியும் விஜய் அவருடன் உட்கார்ந்து சாப்பிட மறுத்துவிட்டார். அவர் வந்த விருந்தாளிகளை கவனிப்பதே முக்கியம் என்ற மனநிலையில் இருந்தார். விஜய் அவரின் விருந்தாளியை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என எண்ணமுடையவர். என்று கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மோகன் லால் இன்று அவரது 64 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • இதுவரை அவர் 360 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இன்று அவரது 64 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதுவரை அவர் 360 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சில மாதங்களுக்கு முன் லிஜொ ஜோஸ் இயக்கத்தில் மலைக்கோட்டை வாலிபன் படத்தில் நடித்தார். இப்படம் எதிர்பார்த்த அளவு மக்களிடம் வரவேற்பு இல்லை.

    இவர் அடுத்ததாக எம்புரான், பரோஸ், கண்ணப்பா,விருஷபா, மோகன் லால் 360 திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

    எம்புரான் திரைப்படத்தை நடிகர் பிரித்விராஜ் இயக்குகிறார். இதற்குமுன் மோகன்லால் நடித்த லூசிபர் திரைப்படத்தை பிரித்விராஜ் இயக்கினார். லூசிபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

    அதைத்தொடர்ந்து மீண்டும் மோகன் லால் நடிப்பில் எம்புரான் படத்தை இயக்கிவருகிறார் பிரித்விராஜ். இது லூசிபரின் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது. தற்பொழுது திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது. மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் புது போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த 'திரிஷ்யம்' மலையாள படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படத்தின் இரண்டு பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த 'திரிஷ்யம்' மலையாள படம் ரூ.5 கோடி செலவில் தயாராகி 2013-ல் திரைக்கு வந்து ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செயப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது. பின்னர் 'திரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் வந்து வரவேற்பை பெற்றது.


    திரிஷ்யம்

    'திரிஷ்யம்' படத்தின் 3-ம் பாகம் வருமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து இயக்குனர் ஜீத்து ஜோசப் திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்துக்கான கிளைமாக்ஸ் என்னிடம் உள்ளது என்றும் அதை வைத்து மூன்றாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன். இந்த படம் விரைவில் தயாராகும் என்றும் கூறியிருந்தார்.


    திரிஷ்யம்

    இந்நிலையில், இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, திரிஷ்யம்' படத்தின் 3-ம் பாகத்தினை தமிழ், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களை வைத்து ரீமேக் செய்து ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

    ×