search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண் கண்காட்சி"

    • திருச்சியில் கண்காட்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இக்கண்கா ட்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

    தமிழக வேளாண்மை த்துறை மற்றும் உழவர் நலத்துறை விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த சட்டசபை கூட்டத்தில் 2023-24ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் வேளாண் பெருமக்கள் பயன்பெறும் பொருட்டு நவீன தொழில்நு ட்பங்கள், கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் உணவு பதப்படுத்துபவர்கள் பயன் பெறும் வகையில் திருச்சியில் கண்காட்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அதன்படி வருகிற 27,28, 29 ஆகிய 3 நாட்கள் திருச்சியில் உள்ள கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் விவசாய கண்காட்சி நடைபெறுகிறது. இதில்வேளாண்மையை எளிமைப்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்பங்கள், வருமானத்தை பெருக்கு வதற்கான வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டு நுட்பங்கள் நவீன மரபுசார் நுட்பங்கள், பாரம்பரியமிக்க தொழில்நுட்பங்கள், ஏற்றுமதி வாய்ப்புகள், வேளாண் விளைபொ ருட்களை பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள். வேளாண் காடுகள், உயரிய தோட்டக்கலை தொழில்நுட்பங்கள், நவீன வேளாண் எந்தி ரங்கள், பசுமைக்குடில் தொழில்நுட்பங்கள், பாரம்பரிய நெல் மற்றும் பிற பயிர் ரகங்கள், பாரம்பரிய மரபுசார் வேளாண் கருவிகள், பாரம்பரிய உணவு அரங்கங்கள், வேளாண் மானிய உதவிகள் பெற முன்பதிவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற உள்ளன. கண்காட்சியை காண வரும் விவசாயிகள் ஆதார் நகலை எடுத்து வருமாறு கேட்டுக்கொண்டார். மேலும்கூடுதல் தகவலுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை தொடர்பு கொள்ள வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இக்கண்கா ட்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    • உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப் படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கண்காட்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய முறையில் சிறுதானிய உணவு வழங்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து நடத்திய உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப் படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

    வேளாண்மை துணை இயக்குனர் நாச்சிமுத்து வரவேற்றார். நாமக்கல் வட்டார அட்மா குழு தலைவர் பழனிவேல், மோகனூர் வட்டார அட்மா குழு தலைவர் நவலடி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வேளாண்மை இணை இயக்குநர் துரைசாமி தலைமை தாங்கினார்.

    உயிர், உயிரியல் இடுபொருட்கள் விற்பனை இயக்குநர் ஷாலினி இயற்கை வேளாண்மையின் உன்னதங்கள், இயற்கை விதை உற்பத்தியாளர் ஆனந்த் சிறுதானியம், அருந்தானிய விதைகள் மற்றும் சாகுபடி, கொல்லிமலைசாரல் உழவர் உற்பத்தியாளர் நிறுவனர் ஆறுமுகம் இயற்கை இயைந்த வாழ்வு குறித்து பேசினர்.

    கருத்தரங்கில் வேளாண்மை அறிவியல் நிலைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுதுரை, உதவி பேராசிரியர்கள் முருகன் (உழவியல்), சங்கர் (பூச்சியியல்), சத்யா (மண்ணியல்), பால்பாண்டி (மீன்வளம்) ஆகியோர் இயற்கை முறை பயிர் சாகுபடி முறைகள் குறித்தும், சிறுதானியங்களின் முக்கியத்துவம், பாரம்பரிய ரகங்களை பிரபலப்படுத்துதல் குறித்தும் விளக்கி பேசினர்.

    கண்காட்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய முறையில் சிறுதானிய உணவு வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் கலையருவி கிராமிய கலைக்குழுவினர் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரங்கள் வழங்கினர். விவசாயிகள் தங்களது சந்தேகங்களை கூறி விளக்கம் பெற்றனர்.

    இதில் வேளாண்மை உழவர் நலத்துறையின் அலுவலர்கள், சகோதரத் துறையின் அலுவலர்கள், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு உழவன் செயலி குறித்து விளக்கம் அளித்து பதிவேற்றம் செய்தனர்.

    உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் தனலட்சுமி நன்றி கூறினார்.

    • இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகளின் ‘உழன்றும் உழவே தலை’ எனும் தலைப்பில் வேளாண் கண்காட்சி நடைபெற்றது.
    • இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    வாழப்பாடி:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே முள்ளுக்குறிச்சி மாரியம்மன் கோவில் வளாகத்தில் ஊரக வேளாண் பணி அனுபவம் பெரும் இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகளின் 'உழன்றும் உழவே தலை' எனும் தலைப்பில் வேளாண் கண்காட்சி நடைபெற்றது.

    கூட்டுறவு கடன் சங்க செயலர் ஆண்டி, முதல்வர் துரைராஜ் மற்றும் உதவி பேராசிரியர்கள் வழிகாட்டுதலின்படி, இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவு கடன் சங்க தலைவர் வையாபுரி மற்றும் காசி, சிவகாமி, பரமேஸ்வரி, பாலசந்தர் மற்றும் சரவணகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

    மாணவிகள், செல்வ ஈஸ்வரி, ஷாலினி, சாந்தப்பிரியா , சாந்தினி, சினேகா, சௌமியா, சுப்ரியா, சுஷ்மிதா, திருவாசுகி மற்றும் விவேகாஸ்ரீ ஆகியோர், பொம்மலாட்டம், இயற்கை உணவு கண்காட்சி மற்றும் வேளாண் தொழில்நுட்ப கண்காட்சி செயல் விளக்கம் அளித்தனர். முள்ளுக்குறிச்சி சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கண்காட்சி கண்டுகளித்து பயனடைந்தனர்.

    • உள்ளூர் பாரம்பரிய பயிர் ரகங்களை குறித்த 3-வது கண்காட்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    ஈரோடு:

    தமிழ்நாடு அரசு வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் உயர்தர உள்ளூர் பாரம்பரிய பயிர் ரகங்களை பிரபலப்படுத்த மரபுசார் பன்முகத்தன்மை குறித்த 3-வது கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் கோபிசெட்டி பாளையம், புதுவள்ளியம் பாளையத்தில் உள்ள ஐ.சி.ஏ.ஆர். மைராடா கே.வி.கே. வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்றது.

    இதில் மரபியல் பன்முகத் தன்மை குறித்த விஞ்ஞானி களின் தொழில்நுட்ப உரை, விவசாயிகள் விஞ்ஞானி களிடையே கலந்துரையாடல் நிகழ்வு மற்றும் பாரம்பரிய ரகங்கள் சாகுபடி செய்யும் உழவர்களின் சாகுபடி அனுபவங்கள் எடுத்துரை க்கப்பட்டது. உள்ளூர் பயிர் ரகங்கள் குறித்த வேளாண் கண்காட்சி யில் பாரம்பரிய ரகங்கள் காட்சிக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டிருந்தது.

    சிறப்பு விருந்தினராக மாவட்ட விவசாயிகள் ஆலோசனைக் ழுத்தலைவர் ரவீந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் முரளி வரவேற்றார். வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி தலைமை உரை நிகழ்த்தினார்,

    மைராடா கே.வி.கே. வேளாண்மை அறிவியல் நிலைய மூத்த விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகேசன் வாழ்த்துரை வழங்கினார். உதவி இயக்குநர் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று எஸ்.மோகனசுந்தரம் மற்றும் கே.வி.கே. மைராடா விஞ்ஞானிகள் தொழில் நுட்ப உரையாற்றினார்கள்.

    இந்நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் சகோதரத் துறை அலுவ லர்கள், தன்னார்வ மற்றும் உழவர் உற்பத்தி யாளர் நிறுவனங்கள் மூலம் கண்காட்சியில் பாரம்பரிய பயிர் ரகங்களும், பாரம்பரிய விதைகளும், பாரம்பரிய உணவு வகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டி ருந்தன.

    நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். முடிவில் வேளாண்மை அலுவலர் சுகன்யா நன்றி கூறினார். நிகழ்ச்சி களுக்கான ஏற்பாடுகளை வேளாண்மை - உழவர் நலத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.

    ×